புத்தகங்கள்

சாத்தானின் சதைத் துணுக்கு
(சிறுகதைத் தொகுப்பு)
பதிப்பகம் யாவரும்
விலை : 130

உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண்கிறேன். கடல் நதியாவற்றையும் இப்படியே கணக்கிடப் பார்க்கிறேன். எப்படி கணக்கிட்டாலும் அந்த குவிமையத்தை என்னால் கண்டடைய முடிவதில்லை. கற்பனையில் கூட. எழுத்தும் ஒரு நீர். வேறு ஒரு வடிவத்தில் இருக்கிறது. எந்த வடிவம் என்று தான் தெரியவில்லை. நான் அதன் சுழற்சியில் சிக்கிக் கொள்ள விரும்புகிறேன்.

அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்
(நாவல்)
பதிப்பகம் : நற்றிணை
விலை : 90


பன்முகப் பார்வைகளால் என் பிம்பம் மிதிபடுகிறது. என் கூட்டினுள் இருக்கும் ஒரு ஆன்மாவோ எத்தனையோ மனிதர்களின் ஆன்மாவாக உருமாறி என் தேகத்தை ஆட்கொண்டிருக்கிறது. . .

உலகம் தெரிந்துகொள்ளும்வரை இன்மையின் அறிகுறியாக நான் இருந்துகொண்டிருப்பேன். . .

பிரதியென்னும் பெருவெளியில் துறவியைப்போல் நடந்து கொண்டிருக்கிறேன். பிரதி தனக்கான மொழியில் என்னுடன் சம்பாஷிக்கிறது. பிரதி கொள்ளும் சம்பாஷணைகளை என் மொழியில் மாற்றிக் கொண்டே இருப்பேன். . .

பிருஹன்னளை
(நாவல்)
பதிப்பகம் : பூபாளம் வெளியீடு
விலை : 60


சுயத்தினை எழுத வயது தேவையா ?

காலமும் வெளியும் இல்லாமல் சூன்யமாக மட்டுமே இந்த பிரபஞ்சம் இருந்திருந்தால் வாதை தோன்றியிருக்காதே ? வாதையின் உண்மையான அர்த்தம் நினைவுகள்தானோ ?

ஒவ்வொரு பயணமும் எத்தனையோ விஷயங்களை நம்முள் விதைத்து விட்டுச் செல்லும் போது மரணத்தை நோக்கிய பயணங்கள் ஏன் எதையும் செய்வதில்லை ? மரணத்திற்கும் நமது சிருஷ்டிக்கும் எந்த சக்தியும் இல்லையா ?

ஏன் கொண்டாட்டமெனில் கடந்த காலத்தினை நினைத்தே சந்தோஷம் அடைந்துகொண்டு சொந்தங்கள் கொண்டாட்டமாக இருக்கிறோம் எனச் சொல்கின்றனர் ? கொண்டாட்டம் என்ற வார்த்தை நிகழ்காலத்திற்கு உரியதில்லையா ?

இந்த நாவலில் தங்களுக்கு திகில், கருத்துருவாக்கம், காதல், நட்பு போன்ற எதுவும் கிடைக்காது. உங்களுக்கு கிடைக்கப்போவதெல்லாம் சில மனிதர்களின் வாழ்க்கை. அவர்களிடையே ஊசலாடும் உயிருள்ள நிழலின் பயணம். விருப்பமெனில் பயணத்தினை தொடரலாம். ஏதேனும் புதியதாய் கிடைக்கும் எனக் கனவுக் கோட்டையினை கட்டியிருந்தீர்களெனில் உங்களுக்கு மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே. காரணம் நான் படைப்பாளி இல்லை.CONVERSATION