பிரயாணத்தில் சிறு உரையாடல்


"எக்கணத்திலும் இடித்து ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு பறந்துபோகக்கூடும் என்னும் அச்சம் தானாகவே எழும் அளவுக்கு வாகனங்கள் விரைந்தோடும் நெடுஞ்சாலையின் விளிம்பில் விலகிச் செல்வது என்பது ஒருபோதும் கோழைத்தனமல்ல. அவநம்பிக்கையும் அல்ல. தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்த விவேகம். நான் உயிர்த்திருக்கிறேன், இந்த மண்ணுலகில் நானும் ஒரு துளியாக எங்கோ இருக்கிறேன் என்னும் எண்ணங்களை வளர்த்தெடுக்கும் தன்னம்பிக்கை. எதிர்ப்பைக் காட்டி அடையாளமே இல்லாமல் அழிந்துபோவதைவிட, இருட்டுப் பாதையெனினும் ஓரமாக ஒதுங்கிச் சென்று உயிர்த்திருப்பதைப் பெரிதென நினைக்கவைக்கும் சூழலில் மனிதர்கள் வேறு எப்படி வாழ்ந்துவிடமுடியும்."


வாசகசாலை இணையதளத்திற்காக எழுத்தாளர் பாவண்ணனை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரயாணம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எடுத்த நேர்காணலை பின்னிருக்கும் இடுகையை க்ளிக்கி வாசிக்கலாம்.Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக