வாசகசாலை இணைய இதழில் இரண்டு படைப்புகள்


வாசகசாலை இணைய இதழ் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் எனது இரண்டு படைப்புகள் வெளியாகியிருக்கின்றன.


சிவசங்கர் எஸ்.ஜேவுடன் சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை சிறுகதை தொகுப்பை முன்வைத்து சிறு உரையாடல். நேர்த்தியான பதில்களின் வழியே கதை கொள்ளும் வடிவங்களுக்கு புதிய உருவம் கொடுக்கிறார்.'சிறு'கதையாடிகள் எனும் தொடரை கடந்த ஆண்டு எழுத ஆரம்பித்தேன். அதை தொடர முடியாமல் போனது வருத்தமான விஷயங்களுள் ஒன்று. அதில் கடைசியாய் எழுதிய அத்தியாயம் தஞ்சை பிரகாஷ் சிறுகதைகளை குறித்து. அந்த தொடரை தொடர்ந்து எழுத முடியுமா என தெரியவில்லை. ஆனால் இக்கட்டுரை வெளியாகும் சமயத்தில் தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் வாசித்த அனுப்பவத்தின் நினைவுகள் நீர்க்குமிழி போல எழும்புகின்றன. வருடிய சிறுகதைகள் குறித்த பதிவு...


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக