நட்ராஜ் மகராஜ்


நட்ராஜ் மகராஜ் நாவல் வெளியான சில நாட்களிலேயே வாசித்திருந்தேன். அதன் சொற்கள் ஏற்படுத்திய அலை சில வாரங்களுக்கு நீடித்தது. நீக்கவியலாத இருளை என்னுள் கவிழ்த்திவிட்டு சொற்கள் கடந்திருந்தன. ஒவ்வொரு முறை அதிகாரத்தால் கீழிறக்கப்படும்போதும், சமூகத்தில் அதிகாரம் தலைதூக்கி எளிய மக்களை துன்புறுத்தும் போதும் நாவலின் நாயகன் "ந"வின் நினைவு எழுந்து மறைவது வாடிக்கையாக போய்விட்டது. பல தருணங்களில் என்னை ந வாக, அதிகாரத்தை ஆசைப்படவைத்து அதே அதிகாரத்தால் அலைகழிக்கப்படும் "ந"வாக உணர்ந்து கொள்கிறேன். என்னை மாற்றிய/பாதித்த/ஈர்த்த படைப்புகள் எவை எனும் கேள்வியை எப்போது எதிர்கொள்ள நேரிட்டாலும் அப்பட்டியலில் நட்ராஜ் மகராஜ் நாவலுக்கு நிச்சயம் ஓரிடம் உண்டு. இதை மறுவாசிப்பிலும் தீர்மானமாக உணரமுடிந்தது.

இந்த நாவலுக்கு கடைநிலை வாசகனாக என்ன செய்ய இயலும் எனும் வேட்கை முதல் வாசிப்பிலிருந்தே இருந்துவந்தது. கட்டுரை எழுதினேன். நாவலை மட்டும் மையப்படுத்தி தேவிபாரதியை நேர்காணல் எடுத்தேன். ஆனாலும் வாசக வெறுமை நீள்கிறது. இம்முறை பேச வாய்ப்பு கிட்டியிருக்கிறது. பொதுவில் நாயகன் "ந"வைக் கொண்டாட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவே எண்ணுகிறேன். வாய்ப்பும் விருப்பமும் கொண்ட நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். நட்ராஜ் மகராஜை கொண்டாடுவோம்...

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக