நீலகண்டப் பறவையைத் தேடி


"உன்னுள் விதை முளைக்கிறது, சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகி விடுவாய். இப்போது உனக்கு புரியாத ரகசியம் அப்போது புரிந்து விடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்"

நாவலில் முந்நூறு சொச்சம் பக்கங்களைக் கடந்த பின் மேற்குறிப்பிட்டிருக்கும் சொற்களை மணீந்திரநாத் சோனா எனும் சிறுவனிடம் சோனாலி பாலி ஆற்றின் ஒரு முனையில் சொல்கிறார். நாவல் வாசிப்பில் முடிந்தும் இது போன்ற சொல்லாடல்களும், தர்மூஜ் வயல்களும், சோனாலி பாலி ஆறும், மூடாபாடா ஊரும் நினைவுகளாக என்னுள் படிந்திருக்கின்றன. என் கற்பனைகளுக்கு வளம் சேர்த்த சொற்களுடன் கடந்த சில நாட்களாக அவ்வூரின் நினைவுகளில் சஞ்சரித்து வருகிறேன்.

சொற்களால் நிரம்பிய கதைப்பரப்பில் நானும் நீலகண்டப் பறவையைத் தேடத் துவங்கியிருக்கிறேன். அசோக் நகர் வட்டார நூலகத்தை மனதிற்கு நெருக்கமாகவே எப்போதும் உணர்கிறேன். நாவல் கொடுக்கும் மனநிலையும் பொன்விழா எனும் நாளும் கொண்டாட்டத்தைப் பன்மடங்காக்குகிறது.

வாய்ப்பும் விருப்பமும் இருக்கும் நண்பர்கள் வாருங்கள். சொற்களின் வழியே தேடும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வோம்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக