நூல் வெளியீட்டு விழாயாவரும் பதிப்பகம் வெளியீடாக கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில் சிறுகதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தது. எனது “சாத்தானின் சதைத் துணுக்கு” நூலுடன் தூயன் எழுதிய “இருமுனை”, வ.கீரா எழுதிய “மோகினி” , விஜய் மகேந்த்கிரனின் “நகரத்திற்கு வெளியே” ஆகிய நூல்களும் வெளியாகின. நூலினை வெளியிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களை சார்ந்தும், தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ் சிறுகதைகளின் போக்கினையும் விரிவாக பதிந்திருந்தார்.

வெளியீட்டு நிகழ்வில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். நிகழ்வு முடியும் தருணத்தில் சாத்தான் என் முதுகின் மேல் இனி செய்ய வேண்டிய கடமைகளை சிலுவையென சுமக்க வைத்துவிட்டது. நிறைய எழுத வேண்டும் எனும் உந்துதலையும், அதைவிட பன்மடங்கு வாசிக்க வேண்டும் எனும் வெறியையும் ஆழமாக விதைத்து சென்றிருக்கிறது வெளியீட்டு நிகழ்வு.

அழைப்பை ஏற்று அலுவலகத்திலிருந்து வந்திருந்த நண்பர்களுக்கும், சொற்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வாசகசாலை அன்பர்களுக்கும், யாவரும் பதிப்பகத்தின் வழியே அறிமுகமான புதிய நெஞ்சங்களுக்கும் நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்.

புகைப்படங்களையும் காணொலிகளையும் விரைவில்(கிடைத்தவுடன்) பகிர்கிறேன். . .

பி.கு : சாத்தானின் சதைத் துணுக்கு நூல் தேவைப்படுவோர் அழைக்கவும் (கதிரேசன் சேகர்)8489401887.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்.....

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக