வாசகசாலை இணைய இதழ்வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நவீனம் நிரம்பிய உலகத்தில் இரண்டாண்டுகால இலக்கிய பயணம் சாதாரணமானது அன்று. ஃபேஸ்புக்கின் சிறு பக்கமாக ஆரம்பிக்கப்பட்ட வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பு தன் கிளை விரித்து களச்செயல்களாக நூல்கள் சார்ந்த விமர்சனக் கூட்டங்கள், படைப்பாளிகளை படைப்பை முன்னிறுத்தி கொண்டாடும் இலக்கிய கூட்டங்கள், இலக்கிய வடிவங்கள் சார்ந்த முழு நாள் கருத்தரங்கு, சிறுபத்திரிக்கைகளில் வெளியாகும் சிறுகதைகளுக்கான கதையாடல் நிகழ்வுகள் என அடுத்தடுத்த பாதைகளில் காலத்துடன் இணைந்து பயணித்து, பரிணமித்து வந்திருக்கிறது வாசகசாலை. இப்பயணத்தின் அடுத்த தடமென இணைய இதழை ஆரம்பித்திருக்கிறது.

முதல் இதழ் சிறுகதைகள், கவிதைகள், குறும்படம் சார்ந்ததொரு தொடர், சினிமா மற்றும் திரைப்படத்தை மையப்படுத்திய ஓர் தொடர், கி.ராஜநாராயணனைப் பற்றி கார்த்திக் புகழேந்தியின் தொடர் என பல அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது வாசகசாலை இணையதளம். முதழ் இதழிற்கு அடியேனின் பங்கென தேவிபாரதியை நேர்காணலெடுத்தது இடம்பெற்றிருக்கறது. இந்நேர்காணல் நட்ராஜ் மகராஜ் நாவலை மட்டுமே மையப்டுத்தி எடுக்கப்பட்டது.

வாசகசாலை இலக்கியத்திற்காக எடுத்து வைத்த முதல் அடியிலிருந்தே வாசகர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கி வந்திருக்கிறது. இவ்விணையதளமும் அப்படியானதொரு களமே. எழுத முனைபவர்களுக்கான ஓர் வாய்ப்பாகவும்ம் வாசிப்பின் பசி தீராத அன்பர்களுக்கு மற்றுமொரு தளமாகவும் வாசகசாலை நிச்சயம் அமையும்.

இணையதளத்திற்கான சுட்டி – http://www.vasagasalai.com/ (க்ளிக்கி வாசிக்கவும்)


தேவிபாரதியின் நேர்காணலுக்கான சுட்டிhttp://www.vasagasalai.com/fulldetail.php?id=19 (க்ளிக்கி வாசிக்கவும்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக