நியூஸ் 7 - சொல்பேசிகள் நிகழ்ச்சியின் காணொலிகள்


சென்னையில் வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பினர் நூல்கள் சார்ந்த விரிவான பார்வையை இட்ளிடையின்றி சேவைப் போல செய்து வருகின்றனர். அவர்களுடன் ஃபேஸ்புக்கில் அதிகமாக தொடர்பில் இருந்த என்னால் நிகழ்வுகளில் ஏனோ இருக்க முடியாமல் போனது. என் தனிப்பட்ட சோம்பேறித்தனம் தான் அதற்கு காரணமேயன்றி அவர்களை குறை சொல்லமுடியாது.

சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி நியூஸ் 7 சேனலில் புத்தகவாசிகள் எனும் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் சின்ன பகுதி சொல்பேசிகள். அப்பகுதியில் வெவ்வேறு தலைப்புகளிலான விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாசகசாலையின் மூலமாகவே அங்கு பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் இலக்கிய சேவைக்கு ஒருபோதும் நான் துணை நின்றதில்லை எனும் போதும் கைம்மாறு கருதாமல் வாசிப்பின் மீதிருக்கும் நம்பிக்கையில் எனக்கான வாய்ப்பினை ஏற்படுத்தியதற்கு வாசகசாலைக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நான்கு வெவ்வேறு தலைப்புகளில் என் கருத்துகளை பதிவு செய்திருக்கிறேன். எப்போதும் போல் இயல்பாக, என் கருத்தில் கவனமாக அதே நேரம் தெளிவாகவும் முன்வைத்ததாக சில நண்பர்கள் கூறினர். மகிழ்ச்சியாக இருந்தது.

இடுகைகள்,

1. எழுத்தும் எழுத்தாளனும்

2. சிறுகதைகள்

3. இலக்கியத்தில் இசங்கள்

4. அயல்நாட்டு இலக்கியங்கள்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக