ஒளி சொல்லும் கதைகள்இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையே என பலர் தொடர்ந்து கேட்கிறார்கள். சில விஷயங்கள் நன்கு ஊறின பிறகு எழுதலாம் என்னும் காலம் தாழ்த்துதலே இப்போது என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இடையில் தான் இந்த ஒளி சொல்லும் கதைகள். கடந்த ஆண்டு சென்னையில் நிகழ்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் நான் பார்த்த சில திரைப்படங்களை, கொண்டாடிய திரைப்படங்களை வார்த்தைகளாக்கி அப்போதே எழுதியிருந்தேன். அது பலரை சென்றடையவில்லை என்னும் வருத்தம் என்னும் தழைத்தோங்கி இருந்தது. என் எழுத்து சென்று சேரவில்லையென்றாலும் கவலையில்லை. ஆனால் அந்த திரைப்படங்களை காண வேண்டும் என்னும் விருப்பத்தில் அவற்றை தொகுப்பாக்கி பிரதிலிபியின் மூலம் கொண்டுவந்திருக்கிறேன். வாசித்து படத்தை பாருங்கள். வேறு சில அனுபவங்கள் அப்படங்கள் மூலம் கிடைத்தாலும் பகிருங்கள். ஒரே அனுபவத்தை ஒருபோதும் கலை கொடுப்பதில்லை.

நூலிற்கான இடுகை : http://www.pratilipi.com/krishnamoorthi/oli-sollum-kadhaigal

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக