அடையாளங்களுடன் போராடும் பாதங்கள்


மிகச்சரியாக ஓராண்டிற்கு முன் திருநெல்வேலியில் லக்ஷ்மி மணிவண்ணனின் சிலேட் சிறுபத்திரிக்கையின் ஒருங்கிணைப்பில் டி.ஆர் நாகராஜ் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இரண்டு நாள் நிகழ்ந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் குறிப்பிட்ட அந்த கருத்தரங்கில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இழந்தவை எல்லாமே என்னுடைய திமிரினால் நிகழ்ந்தவையே. மேலும் அந்நிகழ்விற்கு முன்பே லக்ஷ்மி மணிவண்ணன் தனிப்பட்ட முறையில் அந்நூலை வாசிக்க சொன்னார். அவர் சொல்லி அதைக் கேட்க ஓராண்டு பிடித்திருக்கிறது எனக்கு!

தலித்துகள் சார்ந்தும் அவர்களுடைய போராட்டங்கள் சார்ந்தும் எவ்வித அடிப்படை புரிதலும் அற்றவன் நான். இந்த கூற்றின் முறையில் பெரிதான விழிப்பினை ஏற்படுத்திய நூல் டி.ஆர் நாகராஜின் "தீப்பற்றிய பாதங்கள்". அந்நூல் சார்ந்து "அடையாளங்களுடன் போராடும் பாதங்கள்" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை மலைகள் இதழில் வெளியாகியிருக்கிறது. நூலை அறிமுகப்படுத்திய லக்ஷ்மி மணிவண்ணனுக்கும் மலைகள் இதழுக்கும் இத்தருணத்தில் நன்றி கூற விழைகிறேன்.

கட்டுரைக்கான லிங்க் - http://malaigal.com/?p=6922

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக