மறந்து போன நாதம்வெகு நாட்களாக என்னுள் இருந்த ஆசை இசை சார்ந்து ஒரு கட்டுரையேனும் எழுத வேண்டும் என்பது. அதற்கு தோதான ஞானமோ இசை சார்ந்த அறிதலோ என்வசம் இல்லை. ஒரு இசை பிடித்துப் போனால் அதையே தொடர்ந்து கேட்கும் பழக்கமுடையவன். அதற்கு கர்னாடகம், ராக், ஜாஸ், குத்துப்பாட்டு என பாரபட்சம் கிடையாது. இந்நிலையில் தான் கர்னாடக இசை மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க முடிந்தது.

கலைஞனின் வாழ்க்கையை வாசிப்பதே சுவாரஸ்யமானது தான். அவனுக்குள்ளே இன்னுமொரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிருஷ்டிக்கப்படுகிறது. அவனுடைய சிருஷ்டிக்கும் அவ்வுலகில் அவன் வாழும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளிகள் கலாபூர்வமானதாக இருக்கிறது. அப்படி நான் உணர்ந்த விஷயங்களே "மறந்து போன நாதம்" என்னும் கட்டுரை. மலைகள் இதழில் வெளிவந்திருக்கிறது. மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். . .

http://malaigal.com/?p=6425

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக