அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் - PROMO TEASER

காத்திருப்பிற்கான காலங்கள் பலவாறாக சென்றுவிட்டன. எப்படியும் இம்மாதம் நாவலை வெளியிட்டுவிட வேண்டும் என்னும் மனோதைரியத்தில் காத்திருந்தேன். காத்திருப்புகள் நிறைவேறும் தருணத்தில் அதீதமான சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.

நாவல்களுக்கான டீஸர்களை சாரு நிவேதிதா எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அராத்து என்று பலர் செய்துவந்திருக்கின்றனர். வரவிருக்கும் என்னுடைய இரண்டாவது நாவலுக்கும் டீஸரை தயார் செய்ய வேண்டும் என்னும் முனைப்பு பல நாட்களாக தேக்கமாக இருந்தே வந்தது. வெளியீடு இம்மாதம் நிச்சயம் நிகழும் என்பது எனக்குள் ஊர்ஜிதமான இந்நேரத்தில் பின்வரும் டீஸரை ரிலீஸ் செய்கிறேன். நண்பர்களுக்கும் பகிருங்கள். . .

இதுநாள் வரை என் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த இந்த எழுத்து இன்னமும் சிறிது நாட்களில் முகம்பாரா வாசகர்களின் வாசிப்பில் அன்பின் கைதியாகவிருக்கிறது. . .
நாவல் வரும் டிசம்பர் 28 அன்று சென்னையில் வெளியாகும் என்பதை டீஸருடன் பகிர்கிறேன். விரைவில் அதற்கான invitation ஐயும் பகிர்கிறேன். . .

இந்நாவலுக்கான டீஸர் தயாரிப்பில் பெரிதும் உதவிய நண்பன் கமலக்கண்ணனுக்கு கோடி முத்தங்கள். . . பிண்ணனியாக ஓடும் இசையை குறைந்தபட்சம் இருநூறு முறையாவது கேட்டிருப்பேன். இசையை இழைத்த விம் மெர்டென்ஸிற்கும் என் மனம் கனியும் முத்தங்கள். . .

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக