நாவல் வெளியீட்டு விழா வீடியோக்கள்நிறைய பேர் பலவித யதேச்சையான காரணங்களால் விழாவிற்கு வர இயலவில்லை என்று எண்ணுகிறேன். அதே நேரம் விழாவிற்கு வர இயலவில்லையே என்ற வருத்தமும் இருக்கலாம் என ஒருமனதாக எதிர்பார்க்கிறேன். பின்வருவன விழாவில் பேசிய அனைவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள். என்னையும் வெற்றி பெற்ற நாவலையும் புகழ்ந்து கூறும் காணொளிகளாக மட்டும் இதை பார்த்து ஒதுக்கிவிடவேண்டாம். மாறாக நவீன இலக்கியத்தின் போக்கையும், மெடாஃபிக்‌ஷனையும் பல்வேறு கோணங்களில் அணுகியிருக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.

வீடியோக்கள் சரியான க்ளாரிட்டியில் இல்லை, ஷேக் ஆகிறது என்று தயை கூர்ந்து கூற வேண்டாம். எங்களிடம் இருந்தது 4ஜிபி மெமரி கார்டு மூன்று. சாதாரண கேமிரா. அதிலும் VGA என்னும் ஃபார்மேட்டில் எடுத்தால் தான் எல்லாவற்றையும் எடுக்க இயலும் என்று நண்பன் கூறியதால் அப்படியே எடுக்கப்பட்டது. எல்லா வீடியோக்களையும் பொறுமையுடன் எடுத்துக் கொடுத்த அன்பு நண்பன் கார்த்திகேயனுக்கு இத்தருணத்தில் நன்றி கூற விழைகிறேன்.

கடைசியாக வரும் அடியேனின் ஏற்புரையில் ஓரிடத்தில் anthropology எனக் கூற விழைந்து anthology எனக் கூறிவிட்டேன். பிழையை மன்னிக்கவும். சொல்லிய அத்தருணமே என் நினைவிற்கு வந்தது. ஆனாலும் வார்த்தையாக்க மறந்துவிட்டேன். இனி வீடியோக்கள்.

தேவிபாரதி :


அபிலாஷ் : 


விநாயக முருகன் :


விஜயபத்மா : 


அதிஷா : 


கிருஷ்ணமூர்த்தி :

(பாகம் 1)

(பாகம் 2)

ஏற்புரையை எடுக்கும் போது மெமரி கார்ட் தீர்ந்துவிட்டது. ஆதலால் தான் என்னுடைய பேச்சு மட்டும் இரண்டு வீடியோக்களாக இருக்கின்றன.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக