நாவல் வெளியீட்டு விழா

அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் நாவலை எழுதும் போது மனதளவில் மிகப்பெரிய பயணத்தை அனுபவித்தேன். இடைபட்டு இடைபட்டு மொத்தமாக எட்டு மாதங்களை முழுங்கிக் கொண்டது. நூலின் வடிவில் காணும் போது என் அனுபவங்கள் எல்லாம் மறைந்து கொண்டாட்டமான மனநிலையே மிஞ்சுகிறது. வருடத்தின் கடைசி எழுத்தாளர்களுக்கு கொண்டாட்டமூட்டும் பருவம். எங்கும் புத்தக வெளியீடுகள். நெருங்கிவரும் புத்தக திருவிழாக்கள்.

இதே கொண்டாட்ட மனநிலையுடன் என்னுடைய விழாவிற்கு எல்லோரையும் மனம் நிரம்பி வழியும் அன்புடன் அழைக்கிறேன். வருகிற டிசம்பர் 28ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நற்றிணை வெளியீட்டில் வெளியாகும் "அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" நாவலை தேவிபாரதி வெளியிடுகிறார். முதல் பிரதியை யுவ புரஸ்கார் விருது பெற்ற அபிலாஷ் பெறவிருக்கிறார். ஆய்வாளர் ந.முருகேசபாண்டியன், நாவலாசிரியர் விநாயக முருகன், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் விஜயபத்மா மற்றும் இணைய எழுத்தாளர் அதிஷா ஆகியோர் நாவலைப் பற்றி பேசவிருக்கின்றனர். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விழாவை ஒருங்கிணைக்கிறார்.
 
 விழாவிற்கான அழைப்பிதழ். . .


எல்லோரும் பங்கெடுத்து இதை இலக்கிய விழாவாக மாற்ற வேண்டும் என்னும் ஆசையுடன் அழைக்கிறேன். . .

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக