பிருஹன்னளை விமர்சனம்

திருநெல்வேலிப் பகுதிகளிலேயே எல்லா எழுத்தாளர்களும் இருக்கிறார்களே என்று அநேக நேரங்களில் ஆதங்கம் கொண்டதுண்டு. தேவதச்சனிடமும் இதை நான் நேரில் சந்திக்கும் போது கூறினேன். அவர்களிடமிருந்து ஆடம்பரமில்லாத இலக்கிய சேவைகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சிறந்த உதாரணம் கோணங்கியின் கல்குதிரை இதழ். இதே போல அவர்கள் நிகழ்த்தும் ஒரு இலக்கிய கூட்டமே டி.ஆர் நாகராஜ் கருத்தரங்கம் மற்றும் படைப்பாளர்கள் அரங்கம்.

இந்த அரங்கம் வருகிற ஜூன் 28 மற்றும் 29 அன்று திருநெல்வேலியில் நடைபெறவிருக்கிறது. ஜூன் 29 அன்று மதியம் என்னுடைய முதல் நாவல் பிருஹன்னளையை எஸ்.ஜே சிவசங்கர் விமர்சனம் செய்கிறார் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். என் நூல் மட்டுமின்றி வேறு சில நூல்களையும் லீனா மணிமேகலையின் சினிமா திரையிடலையும் நிகழ்த்துகிறார்கள். அங்கு நிகழ இருக்கும் விவாதங்களின் நூல் அறிமுகங்களின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

நிகழும் இடம் : அயோத்தியா ஹால், ஹோட்டல் ஜானகிராம், திருநெல்வேலி. 

வருகையை முன்கூட்டி உறுதி செய்ய
அழைப்பு எண் : 9362682373
மின்னஞ்சல் : slatepublications@gmail.comShare this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக