The Wolf of Wall Street - 2013

என் கல்லூரியில் உடன் படிக்கும் மலையாளிகளில் ஒருவன் மார்டின் ஸ்கார்ஸேயின் தீவிர ரசிகன். கிட்டதட்ட அவரின் இயக்கத்தில் வெளிவந்த எல்லா படங்களையும் பார்த்துவிட்டான் இதைத் தவிர. அவனிடம் மார்டின் ஸ்கார்ஸேயைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதே ஒரு ஆச்சர்யகரமான விஷயம். இவரைப் பற்றி மட்டுமல்ல சினிமாவைப் பற்றி பேசுவதே. ஏன் மார்டினை பிடிக்கும் என கேட்டிருந்தேன். அவன் சொன்ன பதில் சமூகத்தை தன் புனைவில் நுழைத்து சமகாலத்தை தனக்குகந்த வகையில் சொல்லுபவர் அவராக இருக்கிறார். மிகையற்ற படைப்பு என்னை இன்னமும் ஈர்க்கிறது என்பதே அவனின் கூற்று. இதை எதிர்க்கும் அளவு நான் அவரின் படங்களை பார்த்ததில்லை. இதையும் சேர்த்து அவரின் நான்கு படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

ஒரு கலைஞனை இளமையாக காட்டுவது அவனது படைப்பு மட்டுமே என்பதில் முழுமையாக நம்பிக்கை கொண்டவன் நான். அப்படி வெளிவந்திருக்கும் மார்டினின் படைப்பே இந்த The Wolf of Wall Street என்னும் படம். மேலே என் நண்பன் சொன்ன எல்லாவற்றையும் இது நாள் வரை பார்த்து வந்த அவரின் படங்களில் கண்டு வந்துள்ளேன். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. படத்தில் நான் கொண்ட அனுபவத்திற்கு முன்பு வேறு ஒன்றை சொல்ல நினைக்கிறேன்.

அவருடைய யதார்த்தவாத திரையமைப்புகள் படத்திற்கு காட்சி வேகமின்றி கதை சார்ந்து இருக்கும் வசனங்களில் வேகம் தொனிப்பதாய் அமையும். அப்படியே பிற மூன்று படங்களில் உணர்ந்திருக்கிறேன். இந்தப்படம் அதி தீவிர வேகம் என்று தான் சொல்ல வேண்டும். முழுமையாக மூன்று மணி நேரப்படம். நேற்று முந்தினம் இரவு இப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் முடிந்தவுடன் மூச்சா போய்விட்டு வந்து உறங்கலாம் என வெளியே சென்றேன். என்னுடைய சீனியர்கள் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கேட்டதற்கு பரீட்சை இப்போதே கிளம்பினால் எழுத வேண்டிய கல்லூரிக்கு சென்றுவிடலாம் என சொல்லிச் சென்றனர். மனதிற்குள்ளோ ஏன் நள்ளிரவில் கிளம்பவேண்டும் என்னும் கேள்வியுடன் கடியாரத்தை கண்டேன். மணி காலை ஐந்து!

முன்பு நான் இப்படி வெறி கொண்டு இரவு நேரத்தில் விழிப்பதுண்டு. இப்போதெல்லாம் என் நலம் நன்றாக இருந்தால் மட்டுமே வாசிக்கவும் எழுதவும் முடியும் என்றுணர்ந்த ஞானத்தால் அளவு வைத்து தூங்கிவிடுகிறேன். என்னையே அறியாமல் கொண்டாட வைத்த ஒரு சினிமா இந்தப்படம். நேற்று மீள்பார்வை கொண்டு இப்போது எழுதுகிறேன். My first experience of an hedonistic film.கொண்டாட்டமான படங்களை, படம் என்பதை விட கதைகளை உற்று நோக்கினால் கூட நாயகன் பாதி படம் மட்டுமே கொண்டாட்டத்துடன் காணப்படுவான். அதன்பின் கொண்டாட்டமே வாழ்க்கையன்று அதைத் தாண்டி ஏதோ ஒரு விஷயம் வாழ்வியலுக்கு தேவை, உண்டு என்பதையறிந்து சீரியஸாக மாறிவிடுவான். உண்மையில் இப்படித்தானா ? ஸோர்பா தி க்ரீக் என்னும் நாவல் வாசித்திருக்கிறேன். அதில் வரும் நாயகன் தான் செய்யும் எல்லா விஷயங்களிலும் கொண்டாடுகிறான். அவனால் செய்யக் கூடிய விஷயத்தை திரைப்படத்தில் ஏன் காட்ட முடியவில்லை என ஏங்கியது. இப்போது அந்த ஆசை பாதி அளவில் நிறைவேறிய திருப்தியை இப்படம் கொடுக்கிறது.

இப்படம் ஜோர்டன் பெல்ஃபோர்ட் என்னும் வணிகனின் சுய கதையை பேசுகிறது. முழுமையாக அல்ல அவனுடைய இருபத்தி இரண்டாவது வயதிலிருந்து. இப்படத்தை நிச்சயம் குழந்தைகள் பார்க்கக் கூடாது. அவ்வளவு தூரம் செக்ஸ் போதை சார்ந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. நாம் இருப்பது அறங்களை போதிக்கும் கலாச்சாரம். இப்படமோ முழுக்க சூதை மையம் கொண்டு நகர்கிறது. மேலும் படம் நல்ல informative ஆக இருப்பதால் நன்கு கவனித்தால் மட்டுமே கதையை புரிந்து கொள்ள முடியும்.

இருபத்தி இடண்டு வயதில் வால் ஸ்ட்ரீட்டின் வணிகத்தினுள் நுழைகிறான் நாயகன். அவன் ஸ்டாக் ப்ரோக்கர் ஆகும் போதே அவன் வேலை பார்த்த நிறுவனம் பெரும் இழப்பை சந்திக்கிறது. மூடிவிடுகிறார்கள். அப்போது வேறு ஒரு சிறு நிறுவனத்தில் சேர்ந்து அங்கு நன்கு உழைத்து அங்கிருந்தும் வெளிவருகிறான். தனியே ஸ்ட்ரேட்டன் ஓக்மாண்ட் என்னும் நிறுவனத்தை நிறுவுகிறான். அங்கு அவன் பணத்திற்காக செய்யும் வேலைகள், சூழ்ச்சிகள், அரசியல் நெருக்கடிகள், குடும்ப சூழல்கள் என விரிவாக படம் பேசுகிறது.

படம் முழுக்க வணிகம் சார்ந்து இயங்கினாலும் அங்கு பிரதானமான தெரிவது நாயகனுக்குள் இருக்கும் பணப்பேய். படத்தின் ஆரம்பத்திலேயே அவனின் ஆசையை சொல்லிவிடுகிறான். அவனுடையதை மட்டும் சொல்லாமல் மக்களின் எண்ணத்தையும் அவனே நிர்ணயிக்கிறான். எதுவுமே செய்யாமல் மக்கள் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே அவனின் கணிப்பு. அவனாக மக்களை சேர்க்கிறான். நிறுவனததை பெரிது செய்கிறான்.

படம் முழுக்க இருப்பது கெட்டவார்த்தைகள் போதைப் பொருட்கள் செக்ஸ். இதை அவனே ஒருகட்டத்தில் சொல்லிவிடுகிறான் நான் எல்லாவற்றிற்கும் அடிமை என. கடைசி வரை இந்த தன்மையை குன்றாமல் வைத்திருப்பது இயக்குனரின் அசாத்திய திறமை.

போதை சார்ந்த கட்சிகள் நன்கு வீரியமாய் அமைந்திருக்கின்றன. ரெக்விம் ஃபார் எ ட்ரீம் என்னும் படத்திற்கு பிறகு இப்படம் எனக்கு போதை சார்ந்து ஒரு திருப்தியை கொடுத்தது. ஒரு காட்சியை மட்டும் சொல்கிறேன். அவனுக்கு ஒருவன் சூது செய்ய, வணிக ரீதியாக சூது செய்ய கற்றுக் கொடுக்கிறான். அப்போது ஒரு போதைப் பொருள் அவனுக்கு தருவிக்கப்படுகிறது. அதை மிகச் சிறிய ஸ்பூன் ஒன்றில் எடுத்து மூக்கினருகில் கொண்டு செல்கிறான். கேமிரா மூக்கினருகில் வந்துவிடுகிறது. அவன் உறிஞ்சும் போது போதை உட்கொள்பவனின் மிக அருகில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை கொடுக்கிறது அந்த காட்சி. அதே போன்று செக்ஸ். படத்தில் நாயகன் செக்ஸின் அடிமை என்பதை எப்படியெல்லாம் காண்பிக்க முடியுமோ அப்படியெல்லாம் காண்பித்திருகிறார் இயக்குனர். போதை உட்கொள்ளும் போது அவன் தன்னளவில் கொள்ளும் நிலைகளை  ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு செல்கிறான். அப்போது கடைசி நிலையை சொல்லும் போது அவன் எதுவுமே அறியாதவன் போல கிடக்க அவன் மேல் ஒருத்தி அவனை புணர்ந்து கொண்டிருக்கிறாள். அங்கிருக்கும் செக்ஸ் செக்ஸை குறிக்கவில்லை.

இது போன்று ஒரு காட்சியை காட்டி சம்மந்தமில்லாமல் வேறு ஒரு விஷயத்தை சொல்லும் காட்சிகள் படத்தில் நிறைய இருக்கின்றன.

நாயகியாக வரும் மர்கா ராபீ ஆஸ்திரேலிய அழகி. அவளை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது வியப்பாய் இருக்கிறது. ஆனால் அவளின் நடிப்பும் அபாரம். செக்ஸில் கிளர்ச்சியை மட்டுமே கொடுக்காமல் உணர்வுகளையும் கலந்து கொடுத்திருப்பது அருமையாக உள்ளது. வீட்டினுள் அவர்களிருவருக்கும் இடையில் இருக்கும் ஊடல் கூடல் எல்லாம் மிக இயல்பாக இருக்கிறது. முந்தைய பத்தியின் கடைசி வரியும் மர்கா ராபியின் நடிப்பிற்கு முழுமையாக பொருந்தும். அவளுடன் சம்போகம் கொள்ளும் ஒரு காட்சி ஒருவித சோகத்தை கொடுக்கக் கூடியது. படத்தின் கடைசியினுக்கு அருகில் வரும். காட்சியில் அவளின் நடிப்பை பாருங்கள் அதிலிருக்கும் உருக்கமும் வன்மமும் அழகுற தெரியும்.

படம் அதி வேகத்தில் செல்லும் போது சில இடங்களில் இங்கு மௌனம் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கும் இடங்களில் எல்லாம் மௌனம் வருவது மெய் சிலிக்க வைக்கிறது.

படத்தின் பிரதானம் வசனங்கள். வசனத்தை வைத்தே நாயகன் முன்னேறுகிறான். அவன் படத்தில் மூன்று இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறான். அவை மூன்றுமே பொக்கிஷமான காட்சிகள். நானும் ஒரு நாள் இப்படி ஆங்கிலம் பேசமாட்டேனா என என்னை ஏங்க வைத்தது(கல்லூரி மாணவனாய்). 

பெண்களுக்கான ஷூ தாயாரிக்கும் நிறுவனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் திட்டத்தில் அதன் முதலாளியான ஸ்டீவ் மேடின் என்பவனை அழைத்து வந்திருப்பான். அவனின்  ஷூ பிடிக்காமல் போக அசிங்க படுத்த யத்தனிப்பார்கள் ஊழியர்கள். அப்போது மேடைக்கு வரும் நாயகன் பேசும் பேச்சில் பார்வையாளனாய் எனக்கே ஒரு உருக்கம் ஏற்பட்டது. அவனின் ஊழியர்களை அவன் விளிக்கும் வார்த்தைகளை பாருங்கள், உடன் அப்போது அவன் பேசும் சிறு வசனத்தையும் கொடுக்கிறேன் வாசியுங்கள்... இதையே படத்தில் கேட்கும் போது அதகளமாய் இருக்கும். இது நீளமான பத்தியாகத் தான் இருக்கும். மன்னியுங்கள். இருந்தாலும் கொண்டாட்டத்தின் ஒரு துளியையாவது பகிர ஆசைப்படுகிறேன். . . .


My highly trained Strattonite, My killers. My Killers who will not take no for an answer! My fucking warriors who'll not hang up the phone, until their clients either buys.. ...or fucking dies! Let me tell you something. There is no nobility in poverty. I've been rich, and I've been poor man. And I choose rich every time. Cos, At least as a rich man, when I have to face my problems, I show up in the back of a limo wearing a $2000 suit ...and $40,000 gold fuckin' watch!(இந்த இடத்தில் ஒரு இசை எழும்பி ஸ்லோ மோஷனில் ஒரு காட்சி வரும். அவனின் கதாபாத்திரத்தை, அதன் குணத்தை அவனின்றியே சொல்லிவிடக் கூடிய காட்சி) Now, if anyone here thinks I'm superficial.. ...or materialistic. Go get the fuck out and get a job at McDonald's, because that's where you fucking belong! But, before you depart this room full of winners, I want you to take a good look at the person next to you, go on. Because one day in the not-so-distant future, you're pullin' up to a red light in your beat-up old Pinto, and that person's gonna pull up right along side you in a brand new Porsche, with their gorgeous young wife by his side. Who's got big voluptous tits. And who will you be next to? Some disgusting wilderbeast with three days of razor-stubble in a sleeveless moo-moo, crammed in next to you with a carload full of groceries from the fucking Price Club!  That's who you're gonna be sitting next to So, you listen to me and you listen well. Are you behind, on your credit card bills? Good. Pick up the phone and start dialing. Is your landlord ready to evict you? Good. Pick up the phone and start dialing. Does your girlfriend think you're a fucking loser? Good. Pick up the phone and start dialing! I want you to deal with your problems, by becoming rich!

படத்தின் இடையில் டென்ஹாம் என்னும் பாத்திரம் வருகிறது. அவன் எப்படியேனும் ஜோர்டன் பெல்ஃபோர்டை கைது செய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறான். அவனும் ஜோர்டானும் பேசும் காட்சிகளில் ஜோர்டானாக நடித்திருக்கும் டிகேப்ரியோவின் நடிப்பு அபாரம். உள்ளே ஒரு ஆளும் வெளியே அவனை எதிர்க்க அவன் கொள்ளும் வார்த்தைகளின் முக பாவனையும் அட்டகாசமாய் இருக்கும். டி கேப்ரியோவின் நடிப்பு படம் முழுக்கவே அபாரம் தான். போதையில் திளைக்கும் போது தான் நம்மை freeze செய்கிறார்.

திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமான நடிப்பையே பெற்றிருக்கின்றன. எல்லா பாத்திரங்களும் நீங்காமல் நம் மனதில் பதிந்து செல்கிறது. படம் முடியும் போது நமக்குள்ளும் சிறு கொண்டாட்டம் மீதமாய் பதிந்தே இருக்கிறது. 

நான் விரிவாக எழுதவில்லை என்பது எனக்கே தெரிகிறது. என்ன செய்ய மூன்று மணி நேரத்திற்கு  நான் dionysian ஆக இருந்துவிட்டேன்!!!

விரிவாக அப்படத்தைப் பற்றி அறிந்து கொள்ள பின்வரும் லிங்கை க்ளிக்கவும். நிறைய தகவல்களும் கிடைக்கும். இந்த லிங்க் முதல் பாகம் மட்டுமே மீதி இரண்டு பாகங்களும் அதே இணையத்தில் கிடைக்கின்றன

http://karundhel.com/2014/01/the-wolf-of-wall-street-2013-english-part1.html 

படத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் உணர்வுகளை வார்த்தைகளால் தூண்டுவார் நாயகன். அப்போது அந்த பெண் சொல்லும் வார்த்தைகளை தான் நானும் படம் சார்ந்து சொல்ல ஆசைப்படுகிறேன்

I AM FUCKING LOVE YOU JORDAN!!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது விரிவாக எழுதவில்லையா...?

ஆழ்ந்த ரசனையான விமர்சனம்... நன்றி...

Post a comment

கருத்திடுக