இடைச்செருகலாய் ஒரு நற்செய்திமோகமுள் சார்ந்து நான் எழுதியிருந்த கட்டுரையை இரண்டு பாகங்களாக வெளியிட வைத்திருந்தேன். அதில் ஒன்றை நேற்று பதிவேற்றியிருந்தேன். இரண்டாம் பாதியை இன்று பதிவேற்றலாம் எனில் ஒரு நற்செய்தி இடைமறித்துவிட்டது.

நான் வசிக்கும் தெருவில் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் எனக்கு நண்பர்கள். அவர்கள் இருவரின் வாழ்க்கையும் அரைகுறையாகத் தெரியும் (பிருஹன்னளையில் பகுத்தறிவு பாண்டி). அவற்றை பதிவாக மாற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுகதை கும்பகோணத்தில் வெளியிடப்படும் சஞ்சிகை பத்திரிக்கையில் வெளிவந்திருக்கிறது. கதை பெயர் : பாதசாரி

இந்தக்கதையை பற்றி சின்ன விஷயமொன்றை பதிய ஆசைப்படுகிறேன். நான் எழுதும் சிறிகதைகளை ஒரு போதும் மாற்றமாட்டேன். முதல் முறையில் என்ன எழுதுகிறேனோ அவையே ஸ்திரமானது. அதை மாற்ற நினைத்தால் வேறு ஏதேனும் சிறுகதையிலோ நாவலிலோ வேறு மாதிரி எழுதுவேன்.

இந்த பாதசாரி கதை மாறுதலுக்கு உட்படுத்த வேண்டியதே. காரணம் இவற்றில் இருக்கும் விஷயங்கள் பௌதீக ரீதியாக மட்டுமே உள்ளதோ என இப்போது யோசிக்கிறேன். அக்கதையில் வரும் இரு ஆட்டோ ஓட்டுநர்களை கண்டு நான் ஆச்சர்யமே கொள்கிறேன்.

அதில் ஒருவர் வேலைக்காரர். மற்றொருவர் மூளைக்காரர். இந்த இருவரின் சேர்க்கையும் நல்லதொரு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இக்கதை இருவர் சார்ந்த பதிவாக இருப்பினும் எனக்கு ஒரு திருப்தியை கொடுக்கிறது. இதில் நான் செய்ய விரும்பும் மாற்றங்களை, சேலத்தில் ஆட்டோக்கள் சார்ந்து இருக்கும் அரசியலையும் வேறு ஏதேனும் தளத்தில் நிச்சயம் எழுதுவேன்.

இந்த மகிழ்ச்சியை எல்லோருடனும் பகிர்வதில் சந்தோஷம் கொள்கிறேன்.

பின் குறிப்பு : இந்த பத்திரிக்கை எங்கெல்லாம் கிடைக்கும் என்று கூட எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமாய் இடவும்!!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... தொடருங்கள்...

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக