மோக முள்இலக்கியம் என்பதற்கு சமீபத்தில் இலக்கை இயம்புவது என்று ஒருவர் சொல்லக் கேட்டேன். இந்த தன்மை நவீன மற்றும் பின்நவீனத்துவ எழுத்துகளில் காண முடியவில்லை என்றே எண்ணுகிறேன். இலக்கு என்னும் மையத்தை இந்த நூற்றாண்டில் நாம் எதித்து தகர்த்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கூற்றை முழுமையாக ஏற்கிறேன். காரணம் க்ளாஸிக் என்று தமிழ் இலக்கிய சூழலில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் நாவல்களில் இந்த தன்மை மிகுதியாகவே இருக்கின்றது. அதை எடுத்துக் கொள்வது தான் கருத்து சொல்லும் வகையில் பலரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அந்த கூற்றை சொன்னவர் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன்(அராத்துவின் நாவல் டீஸர் ஒன்றில்)

ஒரு நாவல் எல்லோருக்கும் ஒரே அளவிலான புரிதலை கொடுக்கின்றது எனில் அது தோல்வியுற்ற நாவலாகவே அமையும். மேலும் சில வாரங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் நான் எழுதியிருந்த நிலைத்தகவலானது

"தற்சமயம் ஒரு நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இம்முறை என்னமோ தெரியவில்லை வாசிக்கும் நாவல்களை உடனுக்குடன் என் இணையத்தில் எழுத முடியாதவையாகவே இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது வாசித்துக் கொண்டிருப்பது ஒரு அறுநூறு பக்க நாவல். இவரின் இந்த படைப்பை பேசியும் அறிமுகம் செய்தும் க்ளாஸிக் எனவும் பலர் சொல்லியிருக்கிறார்களே அன்றி சிலாகித்ததில்லை கொண்டாடவும் இல்லை. சிலாகித்ததெல்லாம் வேறு ஒரு படைப்பைதான். கொண்டாடும் இவரின் படைப்பை நான் என் இணையத்தில் சமீபத்திலேயே அறிமுகம் செய்தேன்.

இந்த அறுநூறு பக்க நாவல் சார்ந்து யார் என்னிடம் பேசினாலும் இது ரொம்ப இழுக்கும் என்பதை வேறு வேறுவிதமாக சொல்லியிருக்கிறார்கள். காலையில் தான் வாசிக்க ஆரம்பித்தேன் 540 பக்கங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. அசுர வேக வாசிப்பை முதன்முதலாய் உணர்கிறேன். அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். A perfect novel என்பதையே உணர்கிறேன்."

முன்னமே எழுதியிருந்த அவருடைய நாவல் அம்மா வந்தாள். மோகமுள் நாவல் வாசிப்பின், உணர்தலின் போதை என்னை விட்டு இன்னமும் நீங்கவில்லை. அதை விரிவாக பேசலாம் என்றிருக்கிறேன். இது என் பேச்சின் ஆதிக்கம் மட்டுமே கொண்டது என நினைக்க வேண்டாம். வாசித்தவர்கள் வாசிக்காதவர்கள் கொண்டாடியவர்கள் கொண்டாடாதவர்கள் என யார் வேண்டுமெனினும் கலந்து கொள்ளலாம். நான் மட்டுமே உன்னத வாசகன் என்பதெல்லாம் கிடையாது!!!

பின் குறிப்பு : ஃபேஸ்புக்கில் பாலம் புக் மீட் சார்பில் ஒரு ஈவன்ட் தயார் செய்திருக்கின்றனர் அதன் லிங்க் - https://www.facebook.com/events/233419120170423/?source=1

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

சந்திப்பு சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக