அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்

                         

எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதை கருதுகிறேன். இதற்கு நான் நன்றி கூற விரும்புவது சாம் நாதன் என்பவருக்கு மட்டுமே. அவர் சமீபத்தில் தான் களவு காமம் காதல் என்னும் நாவலை எழுதியுள்ளார். அவர் தான் இந்த போட்டிக்கான அறிவிப்பை என்னிடம் சொன்னார்.

அப்போது என்வசம் அறுபட்டு அறுபது பக்கங்களில் நின்று கொண்டிருந்த நாவலே இப்போது பரிசை வென்றிருக்கிறது. எனக்குள் இருக்கும் தனித்துவம் என்ன என்று கேட்போர் அனைவருக்கும் இந்த நாவல் ஒரு தரமான சான்று.

தமிழ் இலக்கியத்தின் பல முக்கிய புள்ளிகளான நகுலன், பா.சிங்காரம், க.நா.சு, அசோகமித்திரன், வண்ணநிலவன், ஜெயமோகன், சி.மோகன், பெருமாள் முருகன் என்று சமகாலம் வரை நீண்டு செல்லும் இலக்கியதடத்தில் அடியேனின் நாவலும் வருவது சந்தோஷத்தை அளிக்கிறது.

அவற்றைப் போலவே தமிழ் இலக்கியத்தில் புதுவகையான புதினமாக நிச்சயம் இது இருக்கும்.

இதில் வருத்தம் ஒன்றும் உள்ளது. என் நாவலின் பெயரை அஞ்ஞாஞவாசம் என்று சொல்லியிருக்கிறார்கள். என் நாவலின் பெயரோ

"அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்"

இன்னமும் சொல்ல நிறைய உள்ளது. மெதுமெதுவாக வரும்....

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக