மௌனம் – எதிரிக்கென உருவாக்கப்பட்ட ஆயுதம்

செமெஸ்டர் பரீட்சை முடிந்த நாளிலிருந்தே விடுமுறையில் நாவல்கள் வாசிக்க முடியும் என்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது. மேலும் என் வழக்கம் வாசிப்பதை கிமு பக்கங்களில் எழுதிவிடுவது. சிலர் பொத்தாம் பொதுவான நூல்களையும் சினிமாக்களையும் எழுதுகிறீர்களே என்றனர். நான் வாசிக்கும் போது எனக்கு அவர்கள் சொல்லும் படைப்புகள் புதிதாகவே இருந்து வந்திருக்கின்றன. என் அனுபவங்களை நான் பதிவு செய்ய நினைக்கிறேன். என்னைப் போல் அறியாதவர்கள் ஒருவர் இருப்பினும் கூட அவர்களுக்கு என் இணையம் பல நூலள் அறிவதற்கு உதவுவதாய் இருக்கும். அந்த வகையில் நான் சந்தோஷமே கொள்கிறேன்.

மேலும் மலைகள் இதழில் வாய்ப்பு கிடைத்தவுடன் சில கட்டுரைகளை நான் அங்கேயே எழுதி வருகிறேன். அவற்றில் கூட எனக்குள் சில வரைமுறைகள் வைத்துள்ளேன். எழுதினால் குறிப்பிட்ட படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் அனுபவித்துவிட்டு அவரின் படைப்பு சார்ந்து பொதுவாக எழுத வேண்டும். அல்லது ஒரே ஒரு படைப்பு கொடுத்தவர்களை எழுத வேண்டும் என்று எனக்குள் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். அதன்படியே எழுதியும் வருகிறேன். என்ன அதற்கும் ஒரு விதிவிலக்கு!

சாரு நிவேதிதா எனக்கு, எனக்கு என்று அல்ல பொதுவாக அறிமுகம் செய்தவர் தருண் ஜே தேஜ்பால். அவரை வாசிக்க ஆரம்பித்த பின் ரொம்பவே ஈர்க்கப்பட்டேன். சொல்ல முடியாத போதை ஒன்று என்னை மெய் மறக்க செய்கிறது அவருடைய எழுத்தில். குறிப்பாக the alchemy of desire நாவலில். அவரின் மற்ற இரண்டு நாவல்களையும் நான் வாசித்துவிட்டேன். இவருடைய மூன்று நூல்கள் சார்ந்தும் என் பார்வைகளை நான் மலைகள் இதழில் எழுதியுள்ளேன்.

அவருடைய நாவல்களில் கடைசியாக வாசித்தது the story of my assassins. இதை தான் "மௌனம் - எதிரிக்கென உருவாக்கப்பட்ட ஆயுதம்" என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். இந்த முறை மலைகள் இதழில்....

கட்டுரைக்கான லிங்க் - http://malaigal.com/?p=3662

மூன்றை வாசித்தும் the alchemy of desire அவரின் சிறப்பாய் என்னுள் நீங்காமல் இருக்கிறது....

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக