Shutter Island - 2010

இந்த பக்கங்களில் ஒரு மலையாளப்பையனை அதிகம் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்கிறேன். அவன் பெயர் அனந்துலால் ஷங்கர். அதிகம் உலக சினிமா ரசனை கொண்டவன். அவனிடம் பேசும் போதெல்லாம் நிறைய படங்களையும் இயக்குனர்களையும் அறிந்து கொள்வேன். அவனுக்கு இருக்கும் கெட்ட பழக்கம் ஒரு இயக்குனரின் எல்லா படங்களையும் பார்க்கும் பழக்கம் கிடையாது. இது அவசியம் இல்லையெனினும் எனக்குள் அவன் பால் இருக்கும் சிறு முரண். நல்ல வரவேற்பையும் உலக தரத்தையும் பெற்றிருப்பதை மட்டுமே பார்ப்பான்.

அவனிடம் சமீபமாக பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி கேட்டேன் - "உனக்கு பிடித்த இயக்குனர் யார் என ?". எனக்கு தெரிந்து அவனுக்கு கடினமான கேள்வி இதுவாகத் தான் இருக்கும். வெகு நேரம் யோசித்து இரண்டு பதில் சொல்லலாமா எனக் கேட்டான். கொஞ்ச நேரத்திற்குபின் மார்டின் ஸ்கார்ஸே என்றான். ஏன் என்ற என் அடுத்த கேள்விக்கு அவன் அளித்த பதில் என்னை வெகுவாக கவர்ந்தது.

மார்டின் ஸ்கார்ஸே ஒரு யதார்த்தவாத இயக்குனர். அவர் உருவாக்கும் கதைக்களனில் இருக்கும் கதை மாந்தர்கள் உண்மையில் இருந்தால் எப்படி அவர்களின் பேச்சு பாவனைகள் இருக்கும் என்பதை அறிந்து பதிவு செய்வார். அவர் நடிகர்களை நடிக்க வைக்கும் விதமே என்னை பிரமிப்பில் ஆழ்த்தும் முக்கியமான விஷயம் என்றான்.

அவன் சொல்லும் போது எனக்குள் The departed படமும் Taxi driver படமும் ஓடிக் கொண்டிருந்தது. ராபர்ட் டி நீரோவின் நடிப்பு அவனின் வார்த்தைகளை ஒத்தியே இருந்தமைகளை மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒன்றே ஒன்றை அறிந்து கொண்டேன் என் மனம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. யார் வேண்டுமெனினும் தத்தம் பேச்சு எழுத்து அல்லது திரையின் மூலம் என்னை ஆக்ரமித்து விடலாம்!!!!

இந்த அசை போடுதலுக்கு கூடுதல் துணையாய் ஒரு படம் பார்த்தேன். அது தான் லியோனார்டோ டி கேப்ரியோ நடித்த Shutter Island.


மனநோயாளிகள் திரைப்படங்களை நான் அதிகம் கண்டதில்லை. ஆனால் அவர்களை திரையில் காண்பிக்க முயன்றால் அது வன்முறையின் மற்றோர் அம்சமாக மட்டுமே இருக்க முடியும் என்பது எனக்குள் இருக்கும் திண்ணமான எண்ணம். உண்மையில் மனநோயாளிகள் அப்படித் தான் இருப்பார்களா ?

திரை ஒருவித ஊடகம் என்பது இந்த ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாய் இருக்கிறது. மனநல காப்பகங்களுக்கு நாம் எல்லோரும் சென்று பார்ப்பதில்லை. அங்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பார்க்க நமக்கு இருக்கும் ஆவணங்கள் நூல்களும் திரைப்படங்களும் தான். இந்த திரைப்படங்களை அதிகம் விரும்பும் காரணம் இவர்கள் யதார்த்த கதாபாத்திரங்களை சுற்றி சில புனைவுகளை வைத்து சுவாரஸ்யமாக தருகிறார்கள். ஆனால் படங்களை பார்க்கும் பொழுது அவர்களை முழுதாக நம்பலாமா என்னும் சந்தேகம் வர ஆரம்பிக்கிறது.

மெமெண்டோ படம் பார்த்த போது அங்கு முழுக்க முழுக்க கதை சார்ந்த ஒரு புனைவை உணர முடிந்தது. பத்து நிமிடத்திற்கு மேல் அவனால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்பதை திரையினூடாகவும் காட்டியிருப்பார். மேலும் அங்கு காண்பிக்கப்படும் ஒரு விஷயம் அவனுக்கென இருக்கும் தனிப்பட்ட ஓர் உலகம். சாமான்யனால் அந்த உலகத்தை எப்போதும் கற்பிதம் செய்து கொள்ள முடியாது.

அதே தான் இங்கும் நிகழ்கிறது. இப்படத்தின் இடையில் ஒரு கதாபாத்திரம் நாயகனிடம் சொல்கிறது
"Once you're declared insane then anything you do is called part of that insanity".
அதே கதாபாத்திரம் மேலும் சொல்கிறது. பைத்தியக்காரர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அவர்களின் பேச்சை கேட்க அவர்களுடன் பேச தான் ஆட்களில்லை என. அவர்களுக்கு இடையில் நடக்கும் சிறு விவாதத்தை பாருங்கள்

- You think I'm crazy.
- No. No, no, I never...
- And if I say I'm not crazy? well, that hardly helps, does it ? That's the Kafkaesque genius of it. People tell the world you're crazy, and all your protests to the contrary just confirm what they're saying.
- I'm not following you. I'm sorry.
- Once you're declared insane, then anything you do is called part of that insanity. Reasonable protests are denial. Valid fears, paranoia. Survival instincts are defense mechanisms.

பைத்தியக்காரர்களைப் பற்றி நிறைய இப்படம் பேசுகிறது. வன்முறை மட்டுமே பைத்தியக்காரர்களின் அங்கமல்லாமல் அவர்களுக்கென ஒரு உலகம் தனித்து இருக்கிறது என்பதை ஆழமாக இப்படம் பேசுகிறது.

இதன் கதை யாதெனில் நாயகன் டேனியல்ஸ் ஒரு மார்ஷல். அவன் ஷட்டர் தீவுகளுக்கு வருகிறான். அங்கு சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவு மனநலம் முற்றியவர்கள் சேர்க்கப்படுவார்கள். இருக்கிறார்கள். அவர்களை மூன்று வார்டுகளில் போட்டிருக்கிறார்கள். Aவில் ஆண்களும் Bவில் பெண்களும் Cஇல் மிக கொடூரமானவர்களும் என. இதில் ரேச்சல் சொலாண்டோ என்னும் பெண் நோயாளி காணாமல் போயிருக்கிறாள். அவளைத் தேடவே நாயகனும் அவனுடன் சக் என்பவனும் வந்திருக்கிறான். அவளுக்கான தடயங்கள் மர்மமாக இருக்கின்றன. அவளைப் போலவே அந்த தீவும்.

நாயகன் டேனியல்ஸிற்கு சில முன் கதைகள் இருக்கின்றன. அவனுடைய மனைவி ஒரு நெருப்பு விபத்தில் இறந்து போயிருக்கிறாள். அவள் இருந்த அபார்ட்மெண்டிற்கு தீ வைத்தது அங்கு இருந்த ஆண்ட்ரூ லேட்டிஸ் என்பவன். அவனுடைய பிண்ணனியும் மர்மமாக சொல்லப்படுகிறது. ஒன்று மட்டும் தெளிவாக சொல்லப்படுகிறது - அவனையும் நாயகன் இந்த தீவில் தேடிக் கொண்டிருக்கிறான்.

இன்னுமொரு அதிசயிக்கதக்க மர்மம் யாரைக் கேட்டாலும் இந்த தீவை பற்றி சொல்ல மறுக்கிறார்கள் என்கிறான் நாயகன். இந்த எல்லா மர்மங்களையும் இந்த படம் கடைசியில் அவிழ்க்கிறது. இந்தப்படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

அதற்கு காரணம் ஹிந்தியில் தலாஷ் என்றொரு படம் வந்தது. அந்த படம் எந்த வகையில் சென்று கொண்டிருந்தாலும் படத்தின் க்ளைமாக்ஸ் முழு ஓட்டத்தை மாற்றி புதுக் கதையை கொடுக்கும். முழு படத்தையும் கடைசியில் வைத்துவிட்டு பார்வையாளனை சுற்ற விடுவது. தலாஷ் படத்தையோ ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். கடைசியில் இருக்கும் அவிழ்ப்பை அறிந்துவிட்டால் அதற்கு பின் நம்மால் கதை செல்லும் திகிலுடன் ஒன்ற முடியாது. இங்கும் அதே பாணி தான். ஆனால் பேசப்படும் வசனங்கள் திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய ஒன்றாய் இப்படத்தில் அமைந்துவிட்டது.

நடிப்பு. லியானார்டோ டி கேப்ரியோவின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அசர வைக்கிறது. அவரின் சில படங்களை பார்த்த வரையிலேயே அவரை எனக்கு பிடித்திருக்கிறது. வித விதமாக அவர் கதையை தேர்ந்தெடுக்கிறார். வசனத்திற்கும் அவரின் நடிப்பிற்கும் ஒரு எடுத்துக்காட்டு பின்வரும் வசன பரிமாற்றம். தீவில் தொலைந்து போகிறார். அப்போது போலீஸ் வந்து அவரை அழைத்து செல்லும் போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நிகழ்கிறது. அப்போது டிகேப்ரியோவின் நடிப்பு மற்றும் வசனத்தின் பூடகத் தன்மை, வசனம் கொண்டிருக்கும் கரு ஆளுமைகளை நினைத்து நினைத்து கொண்டாடலாம். பாருங்கள்...

Police - Did you enjoy God's latest gift?
Marshall- What?
Police - God's gift. The violence. When I came downstairs in my home and I saw that tree in my living room, it reached out for me like a divine hand. God loves violence.
Marshall - I hadn't noticed.
Police - Sure you have. Why else would there be so much of it? It's in us. It's what we are. We wage war, we burn sacrifices, and pillage and plunder and tear at the flesh of our brothers. And why? Because God gave us violence to wage in his honor. I thought God gave us moral order. There's no moral order as pure as this storm. There's no moral order at all. There's just this, can my violence conquer yours?
Marshall - I'm not violent.
Police - Yes, you are. You're as violent as they come. I know this because I'm as violent as they come. If the constraints of society were lifted, and I was all that stood between you and a meal, you would crack my skull with a rock and eat my meaty parts.


தீபாவளிக்கு முந்தைய இரவு பார்த்த படம் இது. இன்னமும் எனக்குள்ளிருக்கும் ஒரு போதை இறங்கவில்லை. நான் பைத்தியக்கார தீவிற்கு செல்லவில்லை. மாறாக ஸ்கார்ஸே என்னும் ஆளுமையின் கைவண்ணத்தில் உருவான ஒரு ஓவியத்தினுள் புதிரினுள் சிக்கி வெளிவர நினைக்காமல் சிக்கியதை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

பின் குறிப்பு : டிகேப்ரியோவின் தேர்வினை சொல்லியிருந்தேன். இதே இருவர் - மார்டின் ஸ்கார்ஸே & லியோனார்டோ டிகேப்ரியோவின் ஜோடியில் அடுத்த மாதம் ஒரு படம் வருகிறது. கோவையிலும் ரிலீஸானால் புண்ணியமாய் போகும். அதன் டிரைலர்  - The Wolf of Wall Street

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக