The Fountain - 2006

நெபுலா

நெபுலாவின் நேரடியான அர்த்தம் மேகங்கள். நாம் காணும் மேகங்களே வாயுக்களாலும் தூசுக்களாலும் சேர்ந்தது என்று அறிந்திருப்போம். இந்த மேகங்கள் பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருக்கும் மேகங்கள். அவை தூசுக்கள் ஹைட்ரொஜன் ஹீலியம் மற்றும் ப்ளாஸ்மாக்களால் ஆனது. இந்த ப்ளாஸ்மா யாதென்று சொல்கிறேன். வேதியியலில் பாசிடிவ் ஐயான் நெகடிவ் ஐயான் என்று இரு பதங்கள் இருக்கிது. இந்த ப்ளாஸ்மாவும் வேதியியலின் ஒரு பகுதி தான். இந்த அணுக்கூட்டத்தில் எத்தனை பாசிடிவ் ஐயான்கள் உள்ளதோ அத்தனை நெகடிவ் ஐயான்களும் நிறைந்திருக்கிது. ஆக இவை நடுநிலையானவை. இந்த நடுநிலையால் என்ன பயன் எனில் நம்மால் ஐயனைஸ் செய்ய முடியும். இந்த முறையில் நாம் நெகடிவ் ஐயான்ஸை மட்டும் பிரித்து எடுக்கிறோம். காரணம் அவை ஆற்றலை வெளிக்கொண்டு வருபவை.

இப்போது நெபுலாவிற்கு செல்வோம். வான்வெளியில் இருக்கும் துகள்கள் தூசுக்கள் தனக்கெ ஒரு புவியீர்ப்பு சக்தியை கொண்டிருக்கிறது. அதன் முலம் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி ஒட்டிக் கொள்கிறது. அப்படி ஒட்டுவதால் அதன் எடை அதிகரிக்கிது. அதனால் புவியீர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்படி அதிகமாகி அதிகமாகி கடைசியில் உள்ளே அழுத்தம் வெகு அதிகமாகி வெடிப்புக்குள்ளாகும். அப்போது அங்கிருந்து அணுக்கதிர்கள் வெளிவரும். அந்த வெடிப்பில் நட்சத்திரங்கள் உருவாகிறது என்றும் சொல்கிறார்கள்.

*****

மீண்டும் டாரென் அரனாஃப்ஸ்கி. இப்போது எழுத இருக்கும் படம் “The Fountain”.


இந்தப்படம் எனக்கு புதிய அரனாஃப்ஸ்கியை காட்டுகிறது. அவரது ஏனைபடங்களில் மிக முக்கியமாக அவர் கேமிராவின் மூலம் காட்டுவது கதை மாந்தர்களின் மன உலகை. அதில் அவர் வெற்றியும் கொள்கிறார். கிறிஸ்தோபர் நோலனுக்கும் இவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன். நோலன் மற்றும் இவர் இருவருமே திரையில் ஒரு புதிரை வைக்கின்றனர். நோலனின் புதிர் பார்வையாளனை பயமுறுத்துகிது. இன்செப்ஷன் படத்தை பார்த்து சில நேரத்தில் பயந்தவர்கள் ஒருமுறை பார்த்து கதைபுரியவில்லை என்று சொல்லி மறுமுறை பார்க்க பய்ந்தவர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அரனாஃப்ஸ்கி புதிரை புதிராய் காட்டி பார்வையாளனை இழுக்கிறார். புரிகிறதோ இல்லையோ ஆனால் பார்வையாளன் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான்.

மேலும் இந்த படத்தில் மற்றைய படங்களைப் போல அவர் மன உலகில் தன் ஆழத்தை காட்டவில்லை. கருவில் தான் காட்டியிருக்கிறார். படம் நான் லீனியர் திரைக்கதையை கொண்டிருக்கிது.

இப்படத்தில் கதை மூன்றாக பிரிந்து நிற்கிறது. மூன்றும் ஒரே வாழ்க்கையின் மூன்று கால நிலைகள். அந்த கால நிலைகள் நூற்றாண்டுகளுக்கு முன்னும் பின்னும் நிற்கிது. காலங்கள் எனக்கு தெரியவில்லை என்பதால் வேறு விதமாக சொல்கிறேன்.

கடந்தகாலம் - இதில் இரு வேறு நிலங்களுக்கு இடையில் ஒரு போர் நடக்கிறது. அந்த போரில் ஒருபக்கம் இருக்கும் ராணி போரினை நிறுத்த நினைக்கிறாள். அதற்கு ஒரு முன்னோடிக் கதை வருகிது. ஆதாம் ஏவாள் காலத்தில் இரண்டு மரங்கள் இருந்ததாம். ஒன்று அறிவிற்கான மரம். மற்றொன்று உயிருக்கான மரம். அவர்கள் தவறு செய்ததால், அந்த உயிருக்கான மரத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த மரத்தை கண்டுபிடித்தால் போர் நிற்கும் என்று நாயகனை அனுப்பி வைக்கிறாள். அந்த மரம் மாயன்களின் இடத்தில் சில ஆன்மீக கதைகளால் நிறைந்து இருக்கிறது. இந்த கதைக்கும் எதிர்காலத்தின் அடியில் ழுத இருக்கும் கதைக்கும் சம்மந்தமுண்டு என்பதால் இங்கு எழுதாமல் விடுகிறேன்(இந்த இடத்தில் மேலும் ஒரு விஷயத்தை மறைத்து இருக்கிறேன். காரணம் அது படத்தின் ட்விஸ்ட்)

நிகழ்காலம் - அதே ஜோடி. நாயகன் கேன்சர் ஆராய்ச்சியில் இருக்கும் ஒரு மருத்துவன். அவன் ஒரு குரங்கிற்கு தன் ஆராய்ச்சியை நிகழ்த்தி கொண்டிருக்கும் போது அது இறக்கும் தருவாய்க்கு செல்கிறது. அப்போது ஏதோ மரத்திலிருந்து எடுத்து வந்த ஒரு திரவத்தை வேறு சில மருந்துகளுடன் கலந்து அந்த குரங்கிற்கு கொடுக்கிறார்கள். உடல்நிலை சரியாகிது. விரைவில் அந்த கேன்சர் செல்களும் மறைகிது. அவனுடைய மனைவி ஒரு நூல் எழுதியிருக்கிறாள். அது கடந்தகாலம் என்னும் பத்தியில் நான் எழுதியிருக்கும் கதை. ஆனால் அதன் கடைசி அத்தியாயம் எழுதப்படாமல் இருக்கிறது. அதை நீதான் எழுதி முடிக்க வேண்டும் என்று கணவனிடம் சொல்கிறாள். எப்போதெனில் அவளும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது.

எதிர்காலம் - அதே கதாநாயகன் ஒரு நெபுலாவினுள் மரத்துடன் இருக்கிறான். அவ்வப்போது அவனுடைய காதலி அங்கு இருப்பது போல் நினைத்து பேசுகிறான். அந்த நெபுலா வெடித்து நட்சத்திரமாகும் நேரம் நெருங்க இருக்கிது. படத்தின் கடைசியில் வெடிக்கவும் செய்கிது.

Tree of Life – இந்த மரத்தின் பயன் யாதெனில் இதன் உள்ளிருக்கும் திரவத்தை(sap) பருகுகிறவர்கள் சாகாவரம் பெறுவார்கள்.

இந்த மூன்று காலநேரங்களிலும் அந்த மரத்திற்கு என்ன ஆகிறது என்பதே கதையாக இருக்கிறது. மரம் இங்கே ஒரு பாத்திரம். A static character.

இந்த திரைக்கதையை நான்லீனியராக எப்படியும் நம்மால் கொண்டு போகமுடியும். அதற்கான மூல வித்து மூன்று வெவ்வேறு காலநேரங்களில் நிகழும் கதை. அதனால் மாற்றி மாற்றி போட்டால் நான் லீனியர் ஆகிவிடும். அரனோஃப்ஸ்கி அப்படி மட்டும் செய்யவில்லை. மூன்றும் ஒரே கதையோ என்னும் சந்தேகத்தை கொடுக்கும் வகையில் நான் லீனியர் ஆக்கியிருக்கிறார்.

சின்ன உதாரணம் எதிர்காலத்தில் ஒரு காட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிது. நாயகன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது கேமிரா அவளுடைய வசனங்களை கேட்டுக் கொண்டே அவளின் அருகில் செல்கிறது. அப்படியே காட்சி நிகழ்காலத்திற்கு வருகிது. மேலும் இந்த வரலாற்றை வெளிக்கொணரும் முறை ஒரு இசையின் ழையைப் போல் இருக்கிது.

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். அதில் முதல் பத்து நிமிடத்திலேயே கட கட வென மாபெரும் வரலாற்றை சொல்லி கதைக்குள் நுழைவார்கள். கதை மெதுவாக நகர ஆரம்பிக்கும். இங்கே கதையின் ஓட்டத்தில் பிசகின்றி அனைத்து இடத்திலும் ஒரே வேகத்தில் திரைக்கதை செல்கிறது. இதுவே படத்தின் மாபெரும் பலமாக கருதுகிறேன்.

இந்த படத்தின் க்ளைமாக்ஸ்… அதை என்னவென்று நான் சொல்வது. அதன் அமைப்பினைக் கண்டு நான் கொண்ட உணர்வின் உச்சம் மீண்டும் வேறு ஏதேனும் படைப்பினால் வராதா என்று யோசிக்க வைக்கிறது. அண்மையில் ஒரு நண்பர் கூட அப்படம் பார்க்க நேர்ந்தால் அதன் க்ளைமாக்ஸை கொஞ்சம் விளக்குங்கள் என்று கூறினார். அதை நான் எப்படி செய்ய முடியும் ? பதிவர்கள் என்றாலே அறச்சீற்றம் கொண்டவர்கள் என்று இந்த இணைய சமுதாயம் நம்புகிறது. அந்த நம்பிக்கையை நான் வீண் செய்யலாமா ? வேண்டுமெனில் ஒரு சிறு குறிப்பு தருகிறேன்.

க்ளைமாக்ஸை நெருங்கும் போது மூன்று கதையையும் தனி தனிக் கதைகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். காலங்களுக்கு ஏற்றவாறு மூன்று க்ளைமாக்ஸையும் ஒன்றிணையுங்கள். பின் தெரியும் கட்டமைப்பின் ஒரு இரகசியம்.

It was really awesome to deconstruct the structure.

The Fountain ஒரு புதுமையான அனுபவம்.


Share this:

CONVERSATION

3 கருத்திடுக. . .:

ஜானகிராமன் said...

மிகச் சிறந்த பதிவு. படத்தின் முக்கிய திருப்பங்களை போட்டுடைடக்காமல் அதே சமயம் படத்தின் சிறந்த அம்சங்களையும், படத்தை பார்க்கவேண்டிய பார்வையையும் விளக்கியுள்ளீர்கள். கண்டிப்பாக இந்த படம் மிகச் சிறந்த படம், இயக்குனரின் அசாத்திய முயற்சி ஒவ்வொறு ப்ரேமிலும் வெளிப்பட்டிருக்கிறது. நன்றி.

தேடுதல் said...
This comment has been removed by the author.
தேடுதல் said...நான் நேற்று தான் இப்படத்தை பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஒரு ஆழமான காதல் கதை தான் இது.
நீங்கள் குறிப்பிட்டது போல் மூன்று காலங்களில் நடக்கும் கதைகள் அல்ல என்றே நினைக்கிறேன். இப்படம் மிகவும் எளிமையாக அழகாக எடுக்கப்பட்ட காதல் படமே இது.

நான் இப்படத்தை இப்படி பார்க்கிறேன்:
————————————————————-
மூளையில் கட்டி ஏற்பட்டதினால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் மனைவி. அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் காதல் கணவன். கணவன் ஒரு ஆராய்ச்சி மருத்துவன். தன் மனைவியை எப்பாடு பட்டாவது ப்ரைன் டூமரிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல வகையான புதிய மருந்துகளையும் (தாவர மருந்துகளையும்) கொடுத்து ப்ரைன் டூமர் உள்ள ஒரு குரங்கிற்கிற்கு அறுவை சிகிச்சை செய்து பார்க்கிறான். அதில் வெற்றி பெற்றால் தன் மனைவியை காத்துவிடலாம் என்று துடிக்கிறான். மனைவியோ தன் கணவன் தனக்காக, தன் உயிரை காக்க அல்லும் பகலும் ஆராய்ச்சியிலேயே இருப்பதை அறிந்து அவன் கஷ்டப்படுவதை கண்டு கலங்குகிறாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாக மரணிப்பதை பற்றி தத்துவார்த்தமாக யோசித்து ”மரணம்” என்பது வாழ்வின் இறுதியல்ல நிரந்தரத்தின் தொடக்கமே என்று முடிவெடுக்கிறாள். அதை தன் கணவனிடமும் தனக்கு மரணம் பற்றி பயமில்லை என்று கூறிக் கொண்டே இருக்கிறாள். கணவனோ மனைவியை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்தில் அவ்வாறு அவள் பேசுவதை கண்டு பதைத்து விலக்குகிறான்.

மனைவி ஃபேண்டசியாக ஒரு நாவலை எழுதுகிறாள். அந்த கதையின் வாயிலாக கணவனிடம் புரிதல் ஏற்பட முயற்சிக்கிறாள். அதில் கடைசி அத்தியாயம் மட்டும் முடிக்கப் படாமலேயே உள்ளது. நாவல் இப்படி செல்கிறது முன்னொரு காலத்தில் ஸ்பெயினில் மதகுருவின் ஆதிக்கம் வலுக்கிறது எதிராக உள்ள அனைவரையும் அழிக்கிறான். இறுதியில் ராணியையே நெருங்கும் சூழலில் தளபதி அந்த மதகுருவையே ஒழித்து நாட்டை காக்க துணிகிறான். ராணி அவனை தடுத்து இதற்கு தீர்வு நிரந்தர வாழ்வே அதுவே நம்மை அழிக்காமல் காக்கும் அதற்கு கடவுளின் Tree of Life மரத்தை கண்டுபிடித்து அதன் சாற்றை உண்பதே என்கிறாள். தளபதி அது கதை என்று அதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான். அதற்கு ராணி ஆதாம் ஏவாள் அறிவு மரத்தின் கனியையே புசித்தார்கள் வாழ்வு மரத்தின் சாறை அருந்தவில்லை ஆனாலும் அவர்களின் வழித்தோன்றல்கள் அம்மரம் உள்ள இடத்தை அறிந்தே வந்திருக்கிறார்கள். மாயன்களே அவர்களின் வழித்தோன்றல்கள் அம்மரம் மாயன்களின் அடர்காட்டுக்குள்ளேயே இன்னும் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க ஒரு மேப்பும் உள்ளது என்று கூறுகிறாள். பின் அதை நம்பி தளபதி சிறு படைகளுடன் மரத்தை தேடி செல்கிறான். அம்மரத்தை நெருங்கும் வேளையில் அதை காக்கும் மாயன்களால் சூழப்பட்டு அவனுடன் வந்தவர்கள் மரணிக்கிறார்கள். தளபதி மட்டும் அவ்வழியே முன்னேறி செல்லும் போது மாயன் தலைவனால் கத்தியால் குத்தப்படுகிறான். இத்துடன் நாவல் நிற்கிறது. கடைசி அத்தியாயத்தை டாக்டர் கணவனையே முடிக்க சொல்லி வற்புறுத்துகிறாள்.

அவள் இருக்கும் போது படிக்க ஆரம்பித்த கணவன் அந்த ஃபேண்டஸியில் தானும் தன் உந்துதலுடன் திளைக்கும் போதுதான் குமிழியில் இருப்பது போன்ற கற்பனையில் வாழ்கிறான். இறப்பை நீக்கும் மருந்து கண்டுபிடித்தலிலும் காதல் மனைவியின் நினைப்புக்கும் இடையே தன்னை முழுமையாக மூழ்கடித்து கொண்டிருக்கும் நாயகனை ஒரு குமிழிக்குள் அடைபட்டு தனி உலகில் மிதந்து கொண்டிருப்பது போல் காட்டுவது சிறந்த படிம உத்தி.

மரணம் இயல்பானது என்றுணர்ந்து தானும் மட்கி மரமாவது போல் காட்டி இதுவே நிரந்தர வாழ்வு என்று கூறுவது போல் காட்டுவது நிதர்சனம். இந்த தரிசனமே அவனுள் எழுகிறது. உடனே அவன் அந்த நாவலின் கடைசி அத்தியாயத்தை அந்த ஸ்பெயின் நாட்டு தளபதியையே First fatherஆக மாற்றி பிறப்பு இறப்பு என்பது ஒரு மாபெரும் சுழற்சி என்று சொல்லி முடிக்கிறார். டாக்டரும் இயல்பை நிதர்சனத்தை உணர்ந்து தன் மனைவியின் கல்லறையில் சென்று ஒரு விதையை விதைக்கிறான். அதில் வளரும் மரத்தில் பரவி தன் காதல் மனைவி நிரந்தரத்தில் நிலை கொள்வாள் என்று நம்புகிறான்.

மனைவி இறந்தபின் திருமண மோதிரம் போட்டிருந்த விரலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொள்ள ஆரம்பிக்கிறான் நாயகன். அது தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தன் கை முழுக்க குத்தியிருப்பதாக காட்டுவது அருமை. அவ்வளவு காலமும் அவள் நினைப்பிலேயே இருக்கிறான் நாயகன். ஆம் நீ கூறிக்கொண்டிருந்தது உண்மைதான் இவ்வளவு காலமும் நீ என்னுடனேயே இருந்திருக்கிறாய் என்று தன் பச்சை குத்தப்பட்ட கைகளை தடவி நாயகன் ஓரிடத்தில் உணர்கிறான்.
Reply

Post a comment

கருத்திடுக