நாவலுக்கான 23 குறிப்புகள்

அது என்ன இவன் தான் எழுதும் நாவல் குறிப்புகளை முன்கூட்டியே சொல்கிறான் என்று எண்ண வேண்டாம். இது எனக்கு கிடைத்த இரண்டாம் அங்கீகாரத்தின் ஒரு அறிகுறி.

சமீபத்தில் சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் என்னும் முகநூல் குழுமத்தின் சார்பில் சிறுகதை போட்டி ஒன்றை நிகழ்த்தினர். நாமும் கலந்து கொள்வோமே என்னும் எண்ணம் கொண்டேன். அதில் இருக்கும் பரிசுத் தொகைக்காக அல்ல. போட்டி எனில் நிச்சயம் நிறைய பேர் கலந்து கொள்வார்கள். அப்போது நம் கதையின் மதிப்பீடும் நமக்கு தெரியவரும் என்று கலந்து கொண்டேன்.

மேலும் ஒரு காரணம் இருக்கிறது. அது இப்போட்டியில் இருந்த ஒரு விதி. கதையை யார் எழுதுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. நடுவர் உட்பட. அவர்கள் கதை என்னும் வெளியில் மட்டுமே பயணிக்கிறார்கள். இப்போது தான் அவர்களுக்கே தெரிய வந்திருக்கும். இந்த சுவாரஸ்யமான விதியே என்னை போட்டியில் கலந்து கொள்ள வைத்தது.

இரண்டு கதைகளை அனுப்பினேன். தோற்ற ஒன்றை சொல்ல மாட்டேன்!
என் கதை அந்த போட்டியில் முதலிடத்தில் தான் வந்திருக்கிறது. போட்டி விதிகளின்படி நடுவர்களின் தீர்ப்பு எண்பது சதவிகிதம் தான். மீதம் இருபது வாசகர்கள் வாசித்து லைக் செய்வதில் தான் இருக்கிறது. இந்த வாசகர்களை கவரும் படலத்தில் அடியேன் தோற்றுவிட்டேன். ஆட்களை நியமித்து லைக்கடித்து வெற்றி கொண்டிருக்கலாம் ஆனால் ஏனோ நடுநிலைவாதியாக இருந்துவிட்டேன்!!! இந்த அங்கீகாரமே எனக்கு பெருமையாய் இருக்கிறது. ஐம்பதிற்கும் மேற்பட்ட போட்டியாளர்களை என் கதை கடந்து வந்திருக்கிறதே என்று. நான் சொல்லும் கணக்குகள் ஒருவேளை தங்கள் மனதில் புருடாவோ என்று தோன்றினால் கீழ் காணும் லிங்கை க்ளிக்கவும்


இதில் முதல் சுற்று கழிந்து டாப் 15 பேரை தேர்ந்தெடுத்தனர். அதில் பதினைந்தாவதில் 8 பேர் இருந்தனர். அவர்களுக்கு செய்யப்பட்ட ஒரு தேர்வுதான் மேலுள்ள லிங்கில் இருப்பது. மேலும் என் கதையை வாசிக்க கீழ்காணும் லிங்கை க்ளிக்கவும்

http://charuvimarsagarvattam.blogspot.in/2013/07/story-26.html (நாவலுக்கான 23 குறிப்புகள்)

எனக்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகை 3000 ரூபாய். அதில் இரண்டாயிரத்திற்கு நூல்கள் தான் வாங்கப் போகிறேன்.

எத்தனையோ பேர் இந்த கதையை புரியவில்லை என்ற போதும் சில பத்திரிக்கைகள் இந்த கதையை நிராகரித்த போதும் என் சிறுகதைக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக இதை கருதுகிறேன். விஷயம் யாதெனில் இன்னமும் என் சிறுகதை ஒன்றாவது சிறுபத்திரிக்கையில் வெளிவராதா என்று போராடிக் கொண்டிருக்கிறேன். இதற்கே என் முழு சந்தோஷமும்...

வெற்றி கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக