காப்பிரைட் எனதல்ல

இம்முறை கோவை இலக்கிய சந்திப்பில் என் நூலின் விமர்சனக் கூட்டம் நிகழ்வதாய் சொல்லியிருந்தேன். எப்போதும் அந்த இலக்கிய கூட்டத்திற்கு செல்வதால் இந்த முறை என் நாவலைப் பற்றி சிலர் கேள்விகளும், என் நாவலைப் அறி பேசுவதையும் கேட்பார்கள் என சென்றிருந்தேன். ஆரம்பத்திலேயே எனக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. எப்போது ரும் நண்பர்களின் எண்ணிக்கையை விட மிக கம்மியாகவே இருந்தது.

எப்போதும் பத்து மணிக்கெல்லாம் நிறைய பேர் வந்துவிடுவார்கள். இம்முறையோ நான் என் நண்பன் மற்றும் அம்மா அப்பா மட்டுமே அங்கு அமர்ந்திருந்தோம். அதை ஒருங்கிணைப்பவரான இளஞ்சேரல் ராமமூர்த்தி வருவார்கள் என்று என் நினைவுகளை புரிந்து கொள்பவர் போ பதிலளித்தார். மணி பதினொன்றை தொட நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது சிலர் வந்தனர். ஒரு பெண் அங்கே வந்து தன் கணவனுடன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்(இந்தப் பகுதியை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். எனக்குள் எப்படி ஒரு அபத்தமான மனிதன் இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடியும்). அவர்களின் பேச்சில் இருந்தது அனைத்தும் ஆங்கிலம் மட்டுமே. எதற்கு இந்த வெட்டி பந்தா ? இலக்கிய சந்திப்புகள் ந்து பெரிய மனிதர்கள் என்று காட்டி கொள்வதற்கா என்று என்னை பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

சிலர் வந்த பின் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. என் நூல் மட்டுமல்லாமல் ஒரு ஹைக்கூ தொகுப்பை பற்றி கவிஞர் யாழி பேசினார். அவரைத் தொடர்ந்து ஒருவர்(பெயர் மறந்துவிட்டேன்) ராஜம் கிருஷ்னின் படைப்பை அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவர் சொன்ன ஒரு கீற்று எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. அஃதாவது ராஜம் கிருஷ்ணன் இன்னமும் படிப்பினைகளுக்குள்ளாக வரவில்லை, அவரை கல்லூரியில் இலக்கியம் படிப்பவர்களின் வழியே காணமுடியவில்லை என்று. பன்னிரெண்டாம் வகுப்பின் துணைப்பாட நூல்களில் அவரின் சிறுகதை வருகிது. அப்படியிருக்கையில் ஏன் கல்லூரியில் அவர் கொண்டு செல்லப்படவில்லை ? இந்த கேள்வியே ராஜம் கிருஷ்ணன் சார்ந்து அவர் பேசியதைக் கடந்தும் என் மனதில் இருந்து கொண்டிருந்தது.

நான் ராஜம் கிருஷ்ணனை வாசித்ததில்லை. ஆனால் அந்த பேச்சின் வழியே ராஜம் கிருஷ்ணன் செய்த களப்பணி எனக்குள்ளே இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது. அப்போது பேராசிரியர் அக்னி என்பவர் சொன்னார் - ராஜம் கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணன் ஒரு கட்டிட பொறியியலாளராம். அவர் ன் வேலைகளுக்காக வெளியூர் செல்லும் போது உடன் தன் மனைவியையும் அழைத்து செல்வாராம். அப்போது அங்கிருக்கும் மனிதர்களுடன் பேசி தன் புனைவுளில் அந்த கதாபாத்திரங்களையும் சேர்த்து எழுதுவாராம். நடுத்தர மனிதர்களுடன் நாம் சஞ்ஜரித்து புனைவாக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் விளிம்பு நிலை மனிதர்களிடம் சென்று பேசி பதிவாக்கியிருக்கும் நபர் ராஜம் கிருஷ்ணன் என்று சொன்னார். அருமையாக பேசியிருந்தார் அந்த நண்பர்.அடுத்தே பிருஹன்னளை. .வை.பழனிச்சாமி என்பவரே பேச இருந்தார்ர். நாவலுக்குள் செல்வதற்கு முன் அவர் நாவலைப் பற்றி மிக அருமையான விளக்கம் தந்தார். புறவுலகத்தில் ஒருவன் அனைத்து விஷயங்களையும் காண்கிறான். வெறும் காண்பவை என்பதோடு நிறுத்தாமல் அதனை அவன் உள்ளார்ந்து உணர்கிறான். அவனாக ஒரு உணர்ச்சியை சித்தரிக்கிறான். அவனுக்குள்ளே ஒரு உலகம் சித்தரிக்கப்படுகிறது. அந்த உலகம் தன்னை வெளிக்கொண்டுவா என்பது போல் மனதை சீண்டுகிறது. அது தன் சீண்டலின் நேரத்தைப் பொருத்தே கவிதையாக சிறுகதையாக அதே தன் உலகம் என நினைக்கும் பட்சத்தில் நாவல் வெளியாகிறது. இதையும் நாவலிலேயே ஆசிரியர் சொல்கிறார் நான் புறவுலகில் பிணம் என்று.

மேலும் க.வை.பழனிச்சாமி சொன்னதை குறிப்புகளாய் தருகிறேன்

* இலக்கியங்களில் பேசப்ப்படாத ஒரு விஷயத்தை இந்தப்பிரதி பேசுகிது.

* பிருஹன்னளை ன்றவுடன் ஆண்பெண் கலவையை கொண்ட அங்கத்தை ந்த நாவல் பேசும் என எதிர்பார்த்தால் அதைவிட பிருஹன்னளைக்கு வித்தியாசமான ஒரு அர்த்தத்தை இந்நாவல் கொடுக்கிறது.

* இந்நாவலின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தி ஆதவனின் காகித மலர்களை மேற்கோளிட்டுள்ளார். ஆனால் நாவல் புதுமை பித்தனையே நினைவூட்டுகிறது. அவருடையஒரு நாள் கழிந்ததுசிறுகதையும் நினைவோடியது. புதுமைபித்தன் இக்காலத்தில் இருந்தால் இப்படி ஒரு நாவலையே கொடுத்திருப்பார்.

* ஓரு தெருவிற்குள் நடக்கும் விஷயங்களை அப்படியே காட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் சொன்னது போல் இந்நாவல் பெரிதான விஷயங்கள் எதையும் பேசவில்லை. ஆனால் இக்கால இளைஞர்களின் பார்வையில் அன்றாட வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை அப்படியே மிகையின்றி பதிவு செய்கிறது. இளைஞர் உலகிற்குள் என்னால் நுழைந்து பார்க்கமுடியவில்லை என்பதால் இந்நாவல் என்னை அதிகம் ஈர்க்கிது. மேலும் இது இக்காலத்தில் வாசிக்கப்பட வேண்டிய நாவல்.

* இந்நாவல் சொல்கிற விஷயங்கள் தெருவிற்குள் நிகழ்ந்தாலும் அது அப்படியே விரிந்து சமூகம் நாடு உலகம் என விரிவு கொள்கிறது. இது கூட என் இரண்டாம் வாசிப்பில் தான்

* இக்காலத்தில் இளைஞர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதை அழகுற காட்டியுள்ளார். நாவல் பார்த்தசாரதியின் பார்வையில் நகர்கிறது. அது தான் நாவலின் பெரிய விஷயம். அதே நவநீத ஐயரின் பார்வையில் நகர்ந்திருந்தால் இதை திராபை என்று ஒதுக்கியிருப்பேன்.

* அஞ்ஞாதவாசம் என்பது சபிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலவரையறுக்குள் வாழவேண்டிய ஒரு நிலை. இங்கோ அதே வாழ்க்கைமுறையாக இருக்கிறது. காலம் முழுதுக்கும் நாம் பிருஹன்னளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

* இதை கிருஷ்ணமூர்த்தியால் மட்டுமே எழுத முடியும்.

* இதன் உச்சபட்ச குறை எழுத்துப்பிழை.

* பெரிய நாவலை படைக்கக் கூடிய அனைத்து உத்திகளும் இந்நாவலில் தெரிகிறது.
இந்த குறிகளில் இருக்கும் அனைத்திற்கும் காப்பிரைட் நான் அல்ல, .வை.பழனிச்சாமி தான்.

இந்த சந்திப்பை நான் அருமை என எழுதியிருப்பதன் காரணம் இந்நேரம் என்னையும் என் நாவலையும் புகழ்ந்து தள்ளியதால் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அது வல்ல காரணம். இந்த பேச்சு நடக்கும் போதும் சரி ராஜம்கிருஷ்ணனின் படைப்புகள் சார்ந்து பேசப்படும் போதும் சரி அங்கங்கே சிலர் கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தனர்.

என் நாவலில் குறிக்கோளற்ற இளைஞர்கள் என்பது போல் வந்தவுடன் மேலே நான் கவனிக்க சொன்ன அந்த பெண்மணி எழுந்து இந்த கூற்றையே எதிர்த்தார். அவர் குறிக்கோளற்ற இளைஞர் என்ற பதத்தையே எதிர்க்கிறார். அவர் பேராசிரியர்! இதற்குபின் வாதங்கள் தர்க்க குதர்க்க ரீதியாக தடம் மாறிச் சென்றது. ஆனால் அந்த பேராசிரியர் சொன்ன ஒன்று என் நாவலையும் கனகதுர்கா என்பவர் எழுதிய இருள் தின்னும் இரவுகள் என்னும் நாவலையும் இணைத்துப் பார்க்கிறேன் என்பதே. மேலும் அவர் அம்பை என்பவரின் படைப்புகளையும் என் நாவலையும் இணைத்துப் பார்க்க நினைக்கிறார்.

அஞ்ஞாதவாசம் என்னும் வரையறைக்குள் பாண்டவர்கள் குறிப்பிட்ட இலக்கோடு தான் அலைகிறார்கள் அப்படி இருக்கும் போது ஏன் பிருஹன்னளை என்று இந்நாவலுக்கு பெயரிட வேண்டும் ? இதற்கு பதில் கிடைக்காமல் வாதங்கள் எங்கெங்கோ சென்றது.

கடைசியாக என்னை பேச சொன்னார்கள். பிரபு ராஜேந்திரன் என்பவருக்கு நான் அளித்த பதிலையே அங்கும் சொன்னேன்(http://www.kimupakkangal.com/2013/06/an-empty-vessel.html). மேலும் இரண்டு விஷயங்கள்.

1. நாவலை நான் பிழைகளின்றி தட்டச்சு செய்து வைத்தேன். Retyping என்னும் பதம் என்னையே அறியாமல் எனக்குள் நுழைந்த்தால் இப்போது குற்றவாளி கூண்டில். காரணம் என் வசம் இருந்தாலும் தவறு என்னுடையதே.

2. பிருஹன்னளை முழுக்க முழுக்க குழப்பவாதியின் கதை. தான் குழப்பத்தில் இருக்கிறோமா என்பதே பார்த்தசாரதியின் மிகப்பெரிய குழப்பம்.

நான் பேசி முடித்தவுடன் அந்த பேராசிரியை தான் குழப்பத்தில் இருக்கிறோமா என்பதே மிகப்ப்பெரிய தெளிவு தானே என்று கேள்விகள் கேட்டார். நான் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்……

பி.கு 1 : விமர்சனக் கூட்டம் என்று நினைத்து சென்ற எனக்கு இது அறிமுகக் கூட்டம் ஆகிவிட்டது. இதற்கு ஒரு விமர்சனக் கூட்டம் வைக்க வேண்டும் என்றும் க.வை பழனிச்சாமி அந்த சபையில் கேட்டுக் கொண்டார்.

பி.கு 2  : இடையில் அங்கே ஒரு சச்சரவு மேம்பட்டது. அஃதாவது நாவலை ஒருவரே வாசித்திருந்தமையால் பலருக்கு அவர் பேசும் கருத்துகளுடன் முரண் ஏற்பட தொடங்கியது. அப்போது பேராசிரியர் அக்னி இனி நால்வருக்கு நூலை கொடுத்து பலரின் கருத்துகளை கேட்போம் என்றார். உடனெ இது பெரிய பிரச்சனை ஆக வேண்டாமே என்று கருதியதாலோ என்னவோ இளஞ்சேரல் கேட்க வெளியீடன்று பேசிய இளங்கோ கிருஷ்ணன் மீண்டும் பேசினார். அன்று பேசியதன் சுருக்கத்தை… வெளியீடன்று பேசியதன் லிங்கை பின்னே தருகிறேன்…

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக