தியானம் - முடிவுறா தேடலின் தொடக்கம்

தியானம் என்பது ஆன்மீகத்தின் ஒரு நிலை. பலருக்கு இது ஒரு நன்மருந்தாக இருந்து வருகிறது. காலையில் செய்யும் தியானம் மனதிற்கும் பல அங்கங்களுக்கும் மனித உடலில் ஓடும் ரத்தத்திற்கும் சிறந்த டானிக்காக இருக்கிறது. இந்த தியானம் அல்லது தியானம் செய்யும் நிலையை நான் என்றாவது கண்டதுண்டா எனில் இதுவரை இல்லை.

சமீபத்தில் இரண்டு அனுபவங்கள் தியானம் சார்ர்ந்து நிகழ்ந்தது. இரண்டுமே என் கல்லூரியில் ப்ளேஸ்ம்ண்ட் என வைத்த ஒரு பத்து நாள் டிரெய்னிங்கின் பகுதி.

முதல் அனுபவம் என்ன எனில் சாப்பிட்டு மதிய நேர லெக்சரை கேட்க சென்றேன். அது பெரிய ஹால். ஒரு இருநூறு பேர் அமர்ந்திருப்பர். ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டே இருப்பார். நேர்முக தேர்வுகளைப் பற்றி வாழ்க்கையை பற்றி சுய முன்னேற்றத்தை பற்றிஅப்படி பேச வந்த ஒருவர் எங்கள் அனைவரையும் கண்களை மூட சொன்னார். அவர் சொல்லும் வார்த்தைகளை மனதிற்குள் மெதுவாக சொல்ல சொன்னார். முக்கிய விஷயம் சத்தம் வெளியே வரக் கூடாது. கண்களை மூடிய உடனேயே எனக்கு தூக்கம் அள்ளிக் கொண்டு வந்தது. நேர்மையாக இருப்போமே என்று நானும் சொல்ல ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே சென்றார். அவரை பின்தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவரின் குரல் எனக்கு கேட்கவில்லை. மயான அமைதி. ஒருவேளை சொல்லி முடித்து நான் கண்விழிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறாரோ என்று லேசாக கண்விழித்து ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர் முடித்து வேறு யாரோ ஒரு ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அருகிலிருப்பவனிடம் கேட்ட போது தான் சொன்னான் முடித்து ஐந்து நிமிடமாகிறது என்று. தியானத்தின் போது கூட என் மனம் ஆங்கில அறியாமையை காட்டிவிடுகிறது!

இது போகட்டும் எனில் கடைசியாக, ப்ளெஸ்மெண்ட் வகுப்புகள் முடியும் நாட்களில் விநோத் என்று ஒருவர் வந்தார். அவர் எல்லோரையும் கண்களை மூடச் சொன்னார். கண்களை மூடியவுடன் அங்கிருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டது(அதற்கு முந்திய தினமும் செய்ய சொன்னதால் இன்றும் நடந்திருக்கும் என்று ஒரு அனுமானம்). ஏதோ பெர்ஃப்யூமை அந்த அறை முழுக்க பரவச் செய்தார்.

இதற்கு முன் கண்களை மூடியவுடன் மெல்லிய இசை அங்கு ஓடிக் கொண்டிருந்தது. நான் மனதிற்குள்ளாக மலையுச்சியில் இருப்பதாக கற்பனை செய்ய ஆரம்பித்தேன். நினைத்த அடுத்த செகண்டில் அவரும் அதையே சொன்னார். இந்த பெர்ஃப்யூம் அடித்த உடன் என் கண்களுக்குள் இருந்த இருள் கலைந்து புலர தொடங்கியது. அதற்கு பின் அவருடைய எந்த ஒரு வார்த்தையையும் என் மனம் கண்டு கொள்ளவேயில்லை.

அந்த மலையில் குறிப்பிட்ட ஒரு பாறை. அது சொகுசு நாற்காலியை போல செய்யப்பட்டிருந்தது. அங்கு தான் சாய்ந்து இருந்தேன். என் கைவசம் குட்டி டேப் ரிக்கார்டர். அதில் அந்த அறையில் இருக்கும் இசை ஓடிக் கொண்டிருந்தது. சமீப காலமாக விம் மெர்டென்ஸின் struggle for pleasure இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதால் அந்த இசையும் எனக்கு கேட்டது. அந்த பாறையிலிருந்து எழுந்தேன். சற்று தூரத்தில் காடுகளின் ஆரம்பம் இருந்தது. இந்த விம் மெர்டென்சின் இசை எனக்கு பிடித்ததாயிற்றேயார் அதை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ? காடுகளுக்குள் இருந்து வருகிறதோ என்று அந்த டேப் ரிக்கார்டரை அங்கேயே விட்டு விட்டு காட்டிற்குள் செல்ல ஆரம்பித்தேன். எப்படி கைவசம் பேனா வந்தது என்று தெரியவில்லை நடந்து செல்லும் போது பயணகுறிப்புகளை அங்கங்கு எழுதி கொண்டிருந்தேன். முடிவுறா தேடல் மட்டுமே இருந்தது. விம் மெர்டன்ஸ் கேட்டுக் கொண்டே இருந்தார்.

அந்த விநோத் என்பவர் மீண்டும் யதார்த்த நிலைக்கு திரும்ப சொன்னார். எப்படியோ கேட்டுவிட்டேன்!

அப்போது ஒன்றை முடிவு செய்தேன் இனி தியானமே செய்யக் கூடாது என்று. புனைவு எழுதும் போது நான் ஒரு உலகை எனக்குள் சித்தரித்து அதில் வாழ்ந்து அங்கிருக்கும் சம்பவங்களை இவ்வுலகத்திற்கு கதையாக தருகிறேன். அது இந்த உலகத்தை கூட பிரதி பலிக்கலாம். அப்படி செய்தால் அது தற்செயல் நிகழ்வு. இந்த உலகிலேயே வாழ்ந்து வருவதால் இதன் சாயல் என் புனைவுலகத்திலும் அதன் சாயல் கதைகளிலும் தெரியலாம். Every writer writes from a surrealistic world. இப்போதோ அந்த புனைவுலகத்தைவிட இந்த தியானத்தின் போது வருகிற உலகம் என்னை அதிகமாக ஈர்க்கிறது. அங்கேயே தங்கிவிட ஆசைபடுகிறேன். இனிமையான வதையாக இருக்கிறது.

அது ஒருவேளை நான் தூங்கிப் போய் வந்த கனவாகவும் இருக்கலாம். உண்மை எனக்கு தெரியாதவரை அது தியானத்தின் போது உருவான உலகம் மட்டுமே. நான் செய்த முதல் தியானம் இது தான். ஆனால் இதுவே கடைசி தியானமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

A great struggle for pleasure….

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக