கிருஷ்ணகுமாருக்கும் சதீஷ்மேனனுக்கும்

கிருஷ்ணகுமாருக்கும் சதீஷ்மேனனுக்கும்,

என்னை நானே திரும்பி பார்க்கிறேன்.
எவ்வளவு அபத்தமாக நடந்து கொண்டிருக்கிறேன் என. நீங்கள் சொல்ல நினைத்தது ஒன்று ஆனால் சொல்லிய ஆங்கில வார்த்தை வேறு. தற்செயலாக என் மன ஓட்டமும் தங்களின்ன் ஆங்கில வார்த்தையும் மோத சொல்ல வந்ததன் உண்மையான அர்த்தம் மங்கி என்னுள் புண்ணையே உருவாக்கியது.

விளைவு உங்களைத் திட்டி ஒரு கட்டுரை. தவறு யார் பக்கம் உள்ளது என்பதை சொல்ல இதனை எழுதவில்லை. நான் நாவலில் அதீதமாக மூழ்கி இருந்தேன். எனக்கு ஏற்பட்ட புரிதலோ இவன் யார் சொல்ல நான் ஒருவனை காக்க புடிக்க நாவல படிக்குறான்னு என்றே நினைத்தேன். இந்த நினைப்பும் நாவலின் அதீத தன்மையும் இணைய தங்கள் மேல் எனக்கு தவறான அபிப்பிராயம் வந்தது.

நாவலினை தாங்கள் அசிங்கபடுத்துவிட்டீர்கள் என தோன்றியதாலேயே நான் வலை தளத்தில் எழுதினேன். தாங்கள் நான் எழுதிய பதிவினால் புண்பட்டேன் என எழுதியிருந்தீர்கள். மீள்வாசிப்பினை செய்தேன். எவ்வளவு அயோக்கியனாக எழுதியிருக்கிறேன் என தோன்றுகிறது. எப்படி எழுதினேன் என்றும் தெரியவில்லை ஆனால் அதனை ஊர்ஜிதம் செய்ய வாதம் வேறு செய்திருக்கிறேன்!

இதனை எழுதுவதற்கு காரணம் சதீஷ் மேனன் தான். அவருடைய பின்னூட்டமானது
"அன்புள்ள கிமு
உங்களின் இந்த பதிவை படிக்கும்போது சற்று வருத்தம் மட்டுமல்ல பரிதாபம் கூட ஏற்படுகிறது. நானே உங்களை பலமுறை சீண்டியும் கேலி செய்தும் இருக்கிறேன் .அவையெல்லாம் உங்களை சங்கட படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல .தெரிந்தோ தெரியாமலோ உங்களையும் அவ்வபோது சிலர் வாசிக்கும்போது ,அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடாது .நீங்கள் எழுதும் அனைத்தும் உங்கள் டயரியில் என்றால் யாரும் விமர்சிக்க போவதில்லை .பொதுவாழ்வில் யாராக இருந்தாலும் விமர்சனத்தை நேரிட தைரியம் வேண்டும் .நீங்கள் எழுதும் எல்லா பதிவையும் அவசியம் நீங்கள் முதலில் படிக்கவேண்டும் .அப்போதுதான் உங்கள் தவறை திருத்திக்கொள்ள முடியும் .நான் சென்ற கடிதத்தில் கூறியதுபோல 80% சாருவை போல தான் எழுதுகிறீர்கள் .இனியும் பணம் அனுப்ப சொல்லி எழுதவில்லை ,இந்நிலை நீடித்தால் அதையும் செய்வீர்கள் .உங்கள் பல பதிவை கண்டு எரிச்சல் பட்டுள்ளேன் .அதை சொன்னால் சாருவை போல " என்னை பிடிக்காதவர் ஏன் என் எழுத்தை படிக்கணும் என்று கேட்டு விடுவீர்கள் . உங்களை திருதிக்கொல்லாவிட்டால் இப்போது சாருவை மட்டுமே இழந்த நீங்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் இழக்க நேரிடும் ."

நான் என்ன எழுத்தில் அதிகாரத்தினையா திணித்துக் கொண்டிருக்கிறேன் ? 
பதிவில் கிருஷ்ணகுமாரை எதிர்த்து எழுதியிருந்தாலும் எனக்கு அவரின் கருத்துகள் பிடிக்கும். என்னிடம் எந்த மாதிரியான திரைப்படங்களை பார்த்து எழுத வேண்டும் என சொன்னவர் அவர். அதே நேரம் நான் எழுதும் திரை சார் எழுத்துகளில் எங்கு தவறு செய்தேன் என்பதையும் எனக்கு சுட்டிக் காட்டியவர். அதற்கு எப்போதுஏ நான் கவலை கொண்டதில்லை. தவறுகளை அவரிடம் கேட்டு சரி செய்யப்பார்ப்பேன். அப்படி என் பக்கம் நியாயம் இருந்தால். இல்லையெனில் அடுத்த பதிவில் பின் குறிப்பாக போட்டுவிடுவேன்.

உண்மையில் நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என் செயலால் வருத்தமே கொள்கிறேன்.
மேலும் சதீஷ் போன்றவர்களுக்கு. நான் எப்போதும் யாரையும் புறக்கணிப்பவன் கிடையாது. நான் நாவல் என்றொரு குறுங்கதை எழுதினேன். வலைதளத்தில் தான். அதனை வாசித்து ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் முதன் முதலில் pain of the textஇனை காண்கிறேன் என்றார். ஆனால் அந்த குறுங்கதை தான் எழுதிய நான்கிலேயே மிகவும் பிடித்தது. லயித்து ஒரு வித சொல்ல முடியாத நிலையில் எழுதியது. இதற்கு என்ன செய்வது. இப்போதும் அவர் என் நண்பர் தான்.

மேலும் கருத்துகள் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பினும் வார்த்தைகள் கடத்தப்படதாகவே இருக்கிறது. என் எழுத்தில் பல எழுத்தாளர்கள் தெரிகிறார்கள் எனில் அது தவறில்லை. அதற்காக என் தனித்துவம் போய்விட்டது என்பது அர்த்தமாகாது. சில நாட்களுக்கு முன்னால் தானனொரு பதிவில் சொல்லியிருந்தேன் கரு காலத்திற்கு முன்னால் ஸ்தூலமாக நின்றுவிட்டது என. வார்த்தைகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதுவும் புழங்கியதே தவிர புதியது அல்ல. அதனை வைத்து நாம் எழுதி கொண்டிருக்கிறோம். அதில் வேறு ஒருவரின் சாயல் தெரிந்தால் ஒரு வேளை அவர்கள் அதனை உபயோகம் செய்திருக்கலாம்.

இனி எந்த எழுத்து அரசியலுக்குள்ளும் செல்லப் போவதில்லை. எழுத மட்டுமே செய்கிறேன் நட்பினையும் எழுத்தின் மூலம் சிதைக்கப்போவதில்லை. i am sorry for my deep unconcerned act krishnakumar

கிருஷ்ணமூர்த்தி

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக