பிருஹன்னளை - விமர்சனக் கூட்டம்


சென்ற முறையே என் நாவலுக்கு ஒரு இடம் கிடைக்குமா எனக் கேட்டேன். அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். நாவல் எப்படி பலருக்கு புரிதலைக் கொடுத்திருக்கிறது என்பதறிய நான் ஆவலாய் இருக்கிறேன்.

நாவலை வாசித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனறு எந்த ஒரு அறம் சார் நிலையும் இங்கு இல்லை. நாவலை வாசிக்காதவர் வந்தால் கூட என் நாவல் பற்றி மட்டுமின்றி வேறு சில நூல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

டக்கென தங்களுக்கு அடுத்த கேள்வி வரலாம் அதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறேன் என. சமகாலத்தில் இலக்கியத்தின் நிலை எப்படி இருக்கிறது, நமக்குள் இலக்கியத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நாம் பின்னிறுக்கிறோமா அல்லது முன்னிறுக்கிறோமா அல்லது ஒன்றுமே இல்லாமல் முச்சந்தியில் இருக்கிறோமா என்று நமக்கு மட்டும் பட்டவர்த்தனமாக காட்டும்.

இதைத் தாண்டி சொல்ல எனக்குத் தெரியவில்லை. அனைவரையும் கலந்து கொள்ள வேண்டும் என வரவேற்கிறேன். கைவசம் கொஞ்சம் நாவல் பிரதிகளையும் எடுத்து வருகிறேன். வேண்டுபவர்கள் என்னிடம் வாங்கிக் கொள்ளலாம்.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

நட்சத்திரா said...

Congratulations friend . May be i try to come

sujisujo said...

Congrats Krishna.Rock On..Hit hard..

Post a comment

கருத்திடுக