An empty vessel

//புத்தகம் : பிருஹன்னளை - கிருஷ்ண மூர்த்தி(http://www.kimupakkangal.com/)
பககங்கள் - 70 - 3 -4 மணி நேரமானது படிக்க‌

கிருஷ்ணமூர்த்தி எனது முகநூல் நண்பர்.அவரது blogல் வரும் புத்தக விமர்சணங்கள்,குட்டிக் கதைகள் அனைத்தும் படிப்பது வழக்கம்.அப்படி தான் திடீர் என தனது புத்தக வெளியீடு பற்றி ஒரு post போட்டார்.நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.சரி அதன் தலைப்பை பார்த்தால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.பின்னர் தான் அதனைப் பற்றி தெரிந்துக் கொண்டேன்.udumalai.com மூலமாக தான் வங்கினேன்.வாங்கியதும் படித்துவிட வேண்டுமென்று எண்ணியிருந்தேன்.ஆனால் படிக்க துவங்கிய‌தும் நாவலில் வரும் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை என்னை மிகவும் குலப்பியது..சரி ஒரு நல்ல மனநிலையிலும்,போதுமான நேரம் கிடைக்கும் போதும் தான் படிக்க முடியுமென்று ஒதுக்கி வைத்தேன்.

1மாதம் ஓடியது,சுளையாக 2 நாள் கிடைத்தது..எடுத்து படிக்க துவங்கினேன்..முதல் வேலையாக வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களையும் , உறவுமுறைகளையும் குறித்துக் கொண்டேன்...கதை 5ம் தெரு எனும் பிராமிணர்கள் அதிகமாக உள்ள இடத்தில் துவங்குகிறது.பார்த்தாவே கதையின் நாயகன்,அவனது சிறு வயதில துவங்கி தற்பொழுது அவனது நாவல் எழுதும் நிலை வரை கதை நகர்கிறது.அவன் சந்திக்கும் அனைத்துவித மனநிலைகளையும் எழுத்தில் பதித்திருக்கிறார் ஆசிரியர்.

தனக்கு தான் அனைத்தும் தெரியும் என்ற மனநிலையோடிருக்கும் தந்தை,சில கட்டுப்பாடுகளுடன் அன்னை,எதிர் வீடு,பக்கத்து வீடு,தெருவில் உள்ள மற்ற காதாப்பாத்திரங்கள்,கஞ்சூஸ் மாமி,படிப்பில் போட்டியாக இருக்கும் மாமியின் மகன்,காதலித்து வீட்டை விட்டு ஓடும் அண்ணன்,அண்ணனின் காதல் திருமணத்திற்கு பின்பு தந்தையின் உடைந்த மனநிலை.5ம் வகுப்பு காதல்,பள்ளியில் பெண்களிடம் பழகும் போது ஏற்படும் சின்ன சிக்கல்கள்,நண்பர்கள் மத்தியில் கேட்கப்படும் மற்ற 18+ கேள்விகள். என நகரும் முதல் பாதி , எதீர் வீட்டு நண்பனின் மரணத்துடன் முடிகிறது

இரண்டாம் பகுதியில் , மரணத்தால் தனது தந்தை எப்படி பாதிக்கப்படுகிறார்.அவருக்கு ஆதாரவாக அவன் செய்யும் பயணம்,தனது வாசிப்பு , தனது எழுத்து என அவனது எண்ணங்கள் இலக்கியத்திற்கும் , மரணத்திற்கும் மாறி மாறி செல்கிறது.இரண்டாம் பகுதியில் கதாப்பாத்திரங்கள் நமக்கு பரீட்சயம் ஆகிவிட்டதாலோ என்னவோ.முதல் பாதியில் இருந்த கதாப்பாத்திரத்திங்களின் கூட்டம் தற்பொழுது இல்லாது போன்றே தோன்றுகிறது.இலக்கியத்துடன் பார்த்தா நகரும் போது ஏனோ எனக்கு பார்த்தா எனும் கதாப்பாத்திரம் மறைந்து கிருஷ்ணமூர்த்தியை என மனம் நினைக்க துவங்கியது.அவரது முக்கியமான சில எண்ணங்களும் அவரது கேள்விகளுமே இதற்கு காரணம்.

1.சிறு வயதில் நாவல் எழுதுவதால் இருக்கும் தடைகள்
2.தனது எழுத்தை மற்றவர்கள் கவனிக்காத போது வரும் போவம்,எரிச்சல்

தனது ஜாதிய அடையாளங்களை உடைக்க போராடும் மனநிலை,தனது அண்ணன் திருமணத்திற்கு பின்பு அலுவலக‌ தோழிகளிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்ல சொல்லும் போது , தன்னுள் வரும் பயம்.வாழ்கை என்பது கொண்டாட்டம் தானே என்ற கேள்வி, அனைத்தும் வாசிக்கும் போது ரசிக்க வைத்தது.


சில சந்தேகங்கள் எனக்கு இருக்கிறது,இங்கு ஆசிரியரிடம் கேட்கிறேன்

1.காதாப்பாத்திரங்களின் எண்ணிக்கையும் , கோர்வையும் ஏன் வாசிப்பவன் சிந்திக்கும் படி அமைக்கப்பட்டது..?
2.சில இடங்களில் , அவன்,இவன்,அவர்கள்,இவர்கள், நான் என்றும் உடனே பார்த்தா என்றும் வருகிறது..இரண்டும் மூன்று முறை படித்தும் என்ககு புரியாமல் போகிறது..ாசிப்பில் ஏதேனும் தவறா என்று தெரியவில்லை..
3.சில இடங்கள் , டக்கென்று மாறுவது போல தோன்றுகிறது..குறிப்பாக ..பள்ளி/கல்லூரியில் ...ஒரு பெண்ணுடன் பேசுவதற்கு யோசிக்கிறான்.மதிய இடைவேளையில் அந்த பெண்ணும் , இவனும் தனியே இருக்கும் 5 நிமிடத்தில் அந்த பெண்ணே பேசிகிறால்.ஆனால் இவன் சரியாக பதிச்சொல்லாது இருக்கிறான் என்று முதல் சந்திப்பை விவரிக்கும் இருந்த பொறுமை..இவ்வாறு அவர்களது நட்பு வளர்தது என்று சொல்வதில் இல்லையோ என்றே தோன்றுகிறது..//

இவ்வளவு நேரம் வாசித்தது என் ஃபேஸ்புக் நண்பர் பிரபு ராஜேந்திரன் அவருடைய ஸ்டைலில் எழுதிய பதிவு. நாவல் வெளியாகி இரண்டு மாதமே ஆகிறது. இதுவரை யாரும் வாங்கவில்லையோ என்று கூட ண்ணம் வருகிறது. வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் சிலர் கேட்டிருந்தனர். அவர்கள் தான் எனக்கு நாவலைப் பற்றிய அவர்களின் அனுபவத்தை எழுதியிருந்தனர்.

இப்போது தான் முதன் முறையாக தன்னிச்சையாக வாங்கி வாசித்து ஒரு அன்பர் தன் பார்வையை வெளியிட்டிருக்கிறார். மனம் நெகிழ்கிறது. அவர் என்னிடம் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். இதை அவர் மட்டும் வைக்கவில்லை வாசித்தவரை அனைவருக்கும் இந்த கேள்விகள் பொதுப்படையாக இருக்கிறது. அதனால் கொஞ்சம் நான் காத்து வைத்து வந்த பொறுமையை மறைத்து பதில் சொல்லலாம் என விழைகிறேன்.

அவரின் முதல் இரண்டு கேள்விகளுக்கு ஒரு சேர பதில் சொல்லலாம் என்றிருக்கிறேன். நான் சித்தரித்தபடி முதலில் என் கற்பனைக்கு வந்த்து ஐந்தாவது தெரு தான். கற்பனைக்கு ஒரு முன் மாதிரி எப்போதும் தேவையாய் இருக்கிறது. அதற்கு நான் தற்போது தாமசிக்கும் தெருவையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன்.

ஒரு தெருக்குள் ஒரு குறிப்பிட்ட நபரை சந்திக்க செல்கிறோம். அந்த தெரு இருபது வருடமாக நமக்கு தெரிந்த தெரு. நாம் சந்திக்க செல்லும் அந்த குறிப்பிட்ட நபர் மூலமாக நமக்கு அந்த தெருவின் வரலாறே தெரிந்திருக்கிறது. அப்போது அந்த தெருவின் வழியே நடந்து செல்கிறோம். அந்த குறிப்பிட்ட அன்பரின் வீடு வரும் வரை நம் கண்கள் அனைத்து வீடுகளையும் பார்த்துக் கொண்டே செல்லும். அப்போது நண்பன் சொன்ன கதைகள் நிச்சயம் மனதளவில் ஓடும். வாசிப்பவர்களுக்கு ஓடுமோ இல்லையோ எனக்கு நிச்சயம் ஓடும். அதை அப்படியே பிரதியாக்கினால் எப்படி இருக்கும் ?

வெளியீட்டின் போது கூட சுஷில்குமார் சொன்னார் இந்நாவல் முடியவில்லை என. பிரபு ராஜேந்திரனோ கதாபாத்திரங்கள் ஏன் வாசகன் சித்தரிப்பில் அமைகிறது எனக் கேட்கிறார். இரண்டு கேள்விகளும் ஒன்று போலத் தான் எனக்கு தெரிகிறது.

ஒரு தெரு எப்போதும் நிரந்தரத் தன்மை கொண்டிருப்பதில்லை. சிலர் இருந்த சுவடுகள் மறைந்து கொண்டே இருக்கிறது. நான் என் நாவலின் முதல் பகுதியான ஐந்தாவது தெருவை தொடர்ந்து எழுதினால் பார்த்தி மாமி பாத்திரம் கூட அங்கிருந்து நகர்ந்து வேறு யாரேனும் நாவலின் பிரதானமாகலாம். தெரு எப்போதும் நிரந்தரமற்றவர்களை நிரந்தரமாக கொண்டிருக்கிறது. மேலும் அந்த முதற் பகுதியை பொறுத்தமட்டில் நாயகன் அந்த தெருவே ஒழிய பாத்திரங்கள் அல்ல.

பார்த்தசாரதியின் உள்ளூர் பயணங்கள் எங்கெங்கோ சென்றாலும் அது மீண்டும் அந்த தெருவிற்குள்ளேயே வந்து முடியும். எழுத்தாளனாக பிருஹன்னளை நாவலுள் ஐந்தாவது தெருவினூடாக நான் கொள்ளும் பயணம் பார்த்தசாரதியை காண்பதற்காக. அதற்குள் அந்த தெருவின் வரலாறு என்னை திக்குமுக்காட வைக்கிறது.

அதில் குறிப்பான ஒரு கதாபாத்திரம் தான் ஜெயராமன். இந்நாவலின்படி அவனின் மரணம் மட்டுமே பிரதானம். அவனின் உள்ளுணர்வுகளை அப்படியே கொண்டுவர நினைத்தேன். அவனோ சத்தம் எழுப்பாத empty vessel. அது தான் பிரச்சனையே. அந்த சத்தம் இல்லாத இடத்திலிருந்து என்னால் எப்படி வார்த்தைகளை கொண்டு வர முடியும் ? அதனால் நிறைய இடங்களை வேகமாக தள்ளிவிட்டேன். ஒருதலை காதலைப் போல அவனுக்கு இருபது ஒரு தலை வெறி. அவளுடைய நட்பை ஆழமாக காட்டினாலும் அது ஜெயராமனின் பாத்திரம் முன் தோற்றே நிற்கும். இன்னும் இருபது பக்கங்களுக்கு அவளின் வார்த்தைகளை எழுதியிருந்தாலும் அவன் அதே புலம்பலை மேற்கொள்ளப் போகிறான். அதே இப்போது நான் எழுதியிருக்கும் விதம் தான் எனக்கு ஜெயராமன் பாத்திரம் முழுமை அடைந்ததாய் தெரிகிறது.

மேலும் சில விஷயங்கள் இந்த ஐந்தாவது தெருவில் நடந்திருக்கிறது. அது வெளியீட்டின் பின் நடந்திருப்பதால் நாவலில் மிஸ்ஸிங். . .

ஒன்று மட்டும் சொல்லுவேன் தாங்கள் வசிக்கும் தெருவையும் சற்று சுற்றிப் பாருங்கள். எத்தனையோ ஆச்சர்யத்திற்குரிய பிருஹன்னளைகளை தாங்களும் உருவாக்க முடியும்.

பி.கு : சேலத்தில் என் நண்பரொருவர் சொன்னார் தமிழில் சுந்தராமசாமி 21 வய்தில் நாவல் எழுதினார். நீயோ பத்தொன்பதிலேயே எழுதியிருக்கிறாய் என்று. உண்மையா என்று தெரியவில்லை ஆனால் கேட்க சந்தோஷமாய் இருந்தது.


இன்னுமொரு விஷயத்தையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள நினைக்கிறேன். எனக்கு என் நாவல் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமாக படுமானால் மட்டுமே என் இணையத்தில் பதில் அளிப்பேன். இதனால் நான் கர்வம் மிக்கவன் என நினைக்க வேண்டாம். எனக்கு கேள்வி புரியவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

Prabhu said...

Thanks for Reply....

Unknown said...

/-- இன்னுமொரு விஷயத்தையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள நினைக்கிறேன். எனக்கு என் நாவல் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமாக படுமானால் மட்டுமே என் இணையத்தில் பதில் அளிப்பேன். இதனால் நான் கர்வம் மிக்கவன் என நினைக்க வேண்டாம். எனக்கு கேள்வி புரியவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். --/

தமிழ் சமூகத்தை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

மேலும் ஒரு நகல்நட்பு வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்தால் அது சுற்றறிக்கை. நட்பு வட்டத்தைத் தாண்டி வெளியில் சென்றால் - அது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரதி தான்.

:-)

Post a comment

கருத்திடுக