வழிதெரியாத மனிதனின் கதை

என் நாவல் கதார் சென்றடைந்திருக்கிறது என்பதில் சந்தோஷம் கொள்கிறேன். கதாரில் யார் என்ற கேள்வி தங்களுக்கு எழும். நிர்மல். அவர் இந்த தளத்திற்கு புதிது அல்ல.

இப்போது கிமுபக்கங்களுக்கு புதிய வாசகர்கள் கிடைத்திருப்பதால் அவரை பற்றி சின்ன அறிமுகம். அவருக்கும் எனக்கு இடையே நடந்த ஃபேஸ்புக் விவாதங்கள் அநேகம். அதன் சின்ன எடுத்துகாட்டுகளாக பின்வரும் லிங்குகளை வாசியுங்கள்
இதில் முதல் இரண்டினை நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையாகவே கருதுகிறேன். அதில் சின்ன கர்வமும் இருக்கிறது. வாசித்துப்பாருங்கள்.

சரி இப்போது அவரை பற்றி சொன்னதன் காரணத்திற்கு வருகிறேன். அவர் என் நாவலை வாசித்து அதன் அனுபவத்தினை தனக்கான இணையத்திலும் எழுதியிருக்கிறார். அதன் லிங்க் - http://nirmalcb.blogspot.in/2013/05/blog-post.html .(க்ளிக்கி வாசிக்கவும்)

இதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷமும் இருக்கிறது. நிறைய பேர் தங்கள் முன் வைக்கப்பட்ட கேள்விகள் எதுவும் இன்னமும் தங்களால் விடுவிக்கப்படவில்லையே என கேட்டார்கள். அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கு காரணம் இதுவரை எனக்கு இரண்டு விமர்சனங்கள் கிடத்திருக்கிறது. இரண்டுமே எதிர்மறை அதில் ஒன்று காத்திரமானது வேறு!

இதில் நானே பதில் சொன்னால் நாவலின் வாசகனும் நானாகவே மட்டும் இருந்துவிடுவேன். அப்படியிருக்கையில் தான் நிர்மலின் விமர்சனம். கரு சார்ந்து எனக்கு நிர்மலுக்கும் சின்ன ஒற்றுமை உள்ளதோ என தோன்றச் செய்கிறது. 

"To do Trasngression is not easy என்பதை நாவலில் அவர் சொல்லவில்லையென்றாலும். Transgress பன்னுவது போல பாசாங்கு செய்யவில்லை என்பது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. 
 பாசாங்கு செய்யவில்லை - Transgressம் செய்யவில்லை, Transgress செய்யவும் முயற்சியும் செய்யவில்லை, அதை கொண்டாவும் செய்யவில்லை, எதிர்க்கவும் செய்யவில்லை.-  அப்படின்னா,  இந்த நாவலின் எழுத்துக்களின் இடையில் இருப்பது “ தயக்கமா”

"தான் வாழும் சமுகத்தின் பிடியிலிருந்து வெளியே போக துடிக்கும் ஆனால் யார் மனதும் புண்படாது  வெளியே போக வழி தெரியாத பார்த்தியின் கதை"

இந்த கடைசி இரண்டு வரியே போதும். என் நாவலினையே தன்னுள் சுமக்கிறது.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

சுட்டிகளுக்கு நன்றி...

Post a comment

கருத்திடுக