செமெஸ்டர் - இலக்கியம்

தங்களுக்கு மிக நெருங்கிய நபர் ஒருவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது சிலருக்கு அப்பா அம்மா குழந்தை நண்பர் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அவர்கள் பெரிய சாதனையினை செய்துவிட்டார்கள். அப்போது தங்களின் உளம் மகிழுமா இல்லை சாதாரண தினத்தினை போல் அப்படியே இருக்குமா ? உலகையே ஆளும் சக்தியினை தங்களுக்கு கொடுத்தது போல் துள்ளி குதிப்பீர்கள் தானே ? அதே மன நிலையில் அதிகம் வெளிக்காட்ட முடியாதபடி அடியேன் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நாளை இருக்கும் என் செமெஸ்டர்! (நாளையா நான் இப்போது பதிவு செய்து கொண்டிருக்கும் போதே மணி மூன்று. அப்படியெனில் பரீட்சை இன்று தானோ ????)

இத்தனை சந்தோஷங்களுக்கு காரணம் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது போன்றதொரு எண்ணம் தான். அதற்கு பின் வரும் லிங்கினை க்ளிக்கி பார்க்கவும்


இதில் பிச்சைக்காரன் என்றொரு பதிவர் சில தளங்களை அறிமுகம் செய்கிறார். அதில் கிமுபக்கங்களும் ஒன்று. இதனை விட வேறு சந்தோஷம் எனக்கு எதுவாக இருக்கும். என்னிடம் நான் காணும் குறை எழுத தெரிந்த எனக்கு சரியோ தவறோ அநேகம் பேரிடம் கொண்டு சேர்க்க தெரியவில்லை. அது இப்போது நிகழும் என சின்ன நம்பிக்கை கீற்று. 

வாசகர்கள் அதிகம் இல்லையே என்னை அதிகம் வாசிக்கவில்லையே என இதுவரையும் நான் தளரவில்லை இனியும் தளரப்போவதில்லை. நல்ல இலக்கியம் நல்ல சினிமா நல்ல கலை அனுபவங்கள் என தேடி சென்று கொண்டிருக்கிறேன். கிடைக்கும் அனுபவங்களை அப்படியே தோலுரித்து பதிவு செய்கிறேன். அது எனக்கு தரும் சந்தோஷமும் தோழமையும் எனக்கு நீண்ட ஆயுளை தரும் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் எழுதி வெளியிடாமல் என் கணினியில் இருக்கும் ஒரு சிறுகதையில் வரும் கதாபாத்திரம் கேட்கும் கேள்வி ஒன்றே என் நினைவிற்கு வருகிறது. சந்தோஷத்தில் இருப்பதால் பகிர்கிறேன். . .

ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் பிரதி மட்டுமே இவ்வுலக வாழ்வின் நிதர்சனமான ஒன்று. பிறந்தாலும் இறந்தாலும் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தபால் போஸ்டர் மின்னஞ்சல் என அனைத்திலும் மனிதனின் வாழ்க்கை பிரதியாகிறது. உயிருள்ள பொருள் பிரதியாகிறதெனில் பிரதிக்கும் உயிருண்டுதானே ?

இதனை தாண்டி சொல்லத் தெரியவில்லை. அறிமுகபடுத்தியமைக்கு நன்றி பிச்சைக்காரன்.

இப்போது இதனை வாசிப்பவர்களுக்கு, குறிப்பாக கோவை வாசிகளுக்கு பின் வரும் போட்டோவினை சற்று உற்று நோக்குங்கள் வரும் ஞாயிறு தங்களின் ப்ளான் என்ன என அறிந்து கொள்ள முடியும். . . 


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக