ரௌத்திரம்

http://verppulukkal.blogspot.in/2013/05/blog-post_13.html -இது பால கணேசனின் விமர்சனம்.

இது எனக்கு எழுத்து வடிவில் கிடைத்த இரண்டாவது விமர்சனம். விஷயம் யாதெனில் இரண்டுமே எதிர்மறை விமர்சனம் தான். 

இந்த வார்த்தையினை குறிப்பிட்டதன் காரணம் நேற்று சாம் நாதன் என்னும் நண்பர் மயூரா ரத்தினசுவாமியின் கட்டுரையினை பகிர்ந்திருந்த லிங்கிற்கு எதிர்மறை விமர்சனங்களை பாருங்கள் என பின்னூட்டமிட்டுருந்தார். மயூரா எழுதியதும் எதிர்மறை விமர்சனமே. ஆனால் இருவரும் உபயோகபடுத்தியிருக்கும் மொழி நடையே விமர்சனங்கள் வெவ்வேறு தளத்தில் இருப்பது போல் காண்பிக்கிறது.

பால கணேசனின் மொழியால் பலர் கோபத்துடன் கொஞ்சம் தார்மீகமாக அல்லது நிதானமாக எழுதியிருக்கலாமே என்றிருக்கின்றனர். அவர் எழுதியது அவருடைய உணர்வும் என் பிருஹன்னளை அவரை ஆட்டுவைத்ததன் விளைவும் என்றே சொல்ல வருகிறேன்.

மேலும் இந்த எழுத்துப்பிழைகளினை நான் சொல்லப்போவதில்லை. அதற்கு பின் பெரிய அரசியல் விஷயங்களெல்லாம் இருக்கிறது. அவையனைத்தும் கூட இப்போது தான் குறிப்பாக தங்களின் கட்டுரையினை வாசித்து தான் நினைவிற்கு வருகிறது.

தாங்கள் குறிப்பிடும் பொருட்பிழைகளுக்கு என் பதில் - அடுத்து வெளியிடும் அளவு என் வசம் பொருட்செல்வம் இருந்தால் நிச்சயம் பொருட்பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் பாலா.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக