நாவல் வெளியீட்டு நிகழ்வு - 5

என்ன தான் பல அபத்தமான நினைவுகளை எழுப்பிய வண்ணம் இனிமையாக என் நாவல் வெளியீடு முடிந்தாலும் அங்கு வந்திருந்த என் முன்று நண்பர்களை என்னால் எப்போதும் மறக்க இயலாது. எந்த தொந்தரவும் இன்றி இந்த விழா முடிந்ததற்கு அவர்களும் காரணம் என்றே சொல்ல நினைக்கிறேன். இந்த விழாவில் நான் அதிகம் மிஸ் செய்த நண்பன்  யாரெனில் கமலக்கண்ணன் தான். என் இணையம் இப்போது நாவலின் முன் பின் என அனைத்து அழகியல் சார் விஷயங்களும் அவனின் கைவண்ணமே. யார் என் நூலினை எடுத்தாலும் முதல் வெற்றியினை பெறுவது அவன் தான். அவனை கடந்தே என் எழுத்துகள் வாசகனை அடைகிறது. நேற்று கூட அவனுக்கு நூலினை கொடுக்கும் போது அவனின் கை வண்ணத்தில் உருவான தெருவினையே வெறித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனின் இதழோரம் தெரிந்த புன்னகை. எததனை கோடி கொடுத்தாலும் அதனை பெற இயலாது. கலை அவனுக்கு கொடுத்த உத்தமமான பரிசு இது.

இவனை தவிர என் நாவலுக்கு தன் பங்கினை ஆற்றியவர்கள் எனில் கார்த்திகேயன் என்னும் நண்பன். எனக்கு நோட்டு புத்தகங்களுக்கு கவர் போடக் கூட தெரியாது. அதற்கு முருகவேள் பிரிக்க கஷ்டப்படும் அளவு மிக அழகான கவரினை போட்டுக் கொடுத்தவன். வெள்ளை நிறத்தில் தான் வேண்டுமென்றேன். பல கடைகள் ஏறி கிடைக்கவில்லை எனும் போது தான் இந்த கவரினை போட்டிருக்கிறான். உண்மையில் கண்ணினை கவரும் வண்ணம் முதல் நூல் இருந்தது. பிரிக்கத் தான். . .  அவனும் இந்த விழாவில் மிஸ்ஸிங். . .

பண உதவி செய்த ஆசீப் மாஸ்டர்(நாகஹரி கிருஷ்ணன்), இவர்களில் ஆசீப் மிஸ்ஸீங். வருத்தம் அதிகம் கொண்டதும் இவனுக்கு தான். மாஸ்டரினை சொல்லவே தேவையில்லை. என் இணையத்திலேயே அதிகம் எழுதி இருக்கிறேன். அதனை தவிர சொல்ல வேண்டுமெனில் விழாவில் இளங்கோ அவனையும் பேச சொல்லிவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத தருணம் அது. யாரும் மறுதலிக்க முடியாதபடி அவனுடைய ஒன்றரை நிமிட பேச்சு இருந்தது.

இவர்களை தவிர எனில் விஜேந்திரன் விஜி. சாரு வட்டத்தின் மூலம் நண்பரானவர். எதையும் எதிர்பாராமல் இவர் செய்த உதவி வந்திருந்தவர்களுக்காக சாப்பிட டீயும் ஸ்நாக்சும் வாங்கி வந்தது,அதற்கு பல கி.மீ கடந்து என்னை சந்தித்து உடன் அழைத்து சென்றது. இவர்கள் அனைவருக்கும் என்னால் முடிந்த கைமாறு பிருஹன்னளை மட்டுமே.

பலர் என்னிடம் எப்போது வீடியோ விடியோ என கேட்டுவிட்டார்கள். அடுத்த பதிவு வீடியோ தான். அதற்கு முன் சில வார்த்தைகள். . .

அந்த வீடியோவில் பலர் என்னை நாவல் சார் சில விஷயங்களை justify செய்ய சொன்னார்கள். நான் பூடகமாக சொன்னேனே தவிர நேரடியான பதில் கிடையாது. அப்பா வீட்டிற்கு வந்தவுடன் கூட 'உன்னால் கூட அவர்களின் கேள்விக்கு பதில் தர முடியவில்லை' என சொன்னார். விஷயம் அதுவல்ல. அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் சொல்ல முடியாவிட்டாலும் என் இணையத்தில் எழுதிவிடுவேன். அது சுலபமான விஷயம். ஆனால் அதற்கு பின் என் நாவல் காலாவதியான பிரதியாகிவிடும். நாவல் விற்பனையாகட்டும். சில விமர்சனங்கள் வரட்டும். அதில் ஏதேனும் ஒன்றாவது என் பதிலுடன் ஒன்றி இருக்காது ? அப்படியே இல்லையெனில் நான் நிச்சயம் சொல்வேன். அதுவரை காத்திருந்தே ஆக வேண்டும்.

அடுத்தது வீடியோ. . .  என் இணையத்தை தரிசிக்க வருபவர்கள் எளிதாக இந்த அனைத்து நிகழ்வு சார் விஷயங்களை அறியுமாறு முகப்பிலேயே வைக்கப் இருக்கிறேன். . .

இத்துடன் எழுத இருப்பது முடிந்த்து. வீடியோவினை கூர்ந்து கவனியுங்கள் இளங்கோ நறுமுகை தேவி முருகவேள் ஆகியோரின் பகடிகள் மிக அழகாக இருக்கும். இனி வரும் விமர்சனங்களை அல்லது நிகழ்ச்சி சார்ந்து யாரேனும் எழுதினால் அதனை எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தாமல் பகிர்கிறேன். . .

தொடரும். . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக