நாவல் வெளியீட்டு நிகழ்வு - 4

சிறுவயதிலிருந்து அம்மாவிடம் ஒரு கேள்வியினை கேட்பேன். புதிதாக எதேனும் கட்டுகிறார்கள் எனில் அந்த அழகை கெடுப்பது போல் சிமெண்டின் மேல் ஒரு கோட்டினை போடுவர். கண்ணாடியெனில் அதன் மேல் ஒரு வெள்ளைக் கோடு இருக்கும். ஏன் எனக் கேட்டால் அழகை பார்த்து கண் வைத்துவிடுவார்கள் என்பார். அந்த தத்துவக் கூற்றின்படியே இந்த நிகழ்விலும் அபத்தத்தின் உச்சமாக இரு சம்பவங்கள் நடந்தது.

குறிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களால் அல்ல.

முதல் சம்பவத்தினை சொல்கிறேன். நானும் நண்பர்களும் அங்கு சீக்கிரம் சென்றிருந்தோம் என சொல்லியிருந்தேன் அல்லவா அப்போது நாங்கள் பிடித்த அதே இடத்தினை வேறு ஒரு அம்மணி நாங்கள் அமர்ந்த பிறகு வந்தமர்ந்தாள். கையில் ஒரு பெரிய பை, லேப்டாப், உடன் கணவன் ஒரு குழந்தை என மரங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.

இந்த அமைப்பில் பார்க்கும் போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் பாடம் எடுக்க வந்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். எங்களின் இடது பக்கம் வலது பக்கம் என வலம் வந்து கொண்டிருந்தாள். அப்போது என்ன நிகழ்வு என கேட்டாள். நூல் வெளியீடு என சொன்னவுடன் நூலினை கொடுத்தார்கள் நண்பர்கள். நானும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. அவள்(நிச்சயம் மரியாதை தர முடியாது) அந்த நூலினை முதலில் நடுவில் இறுதியின் என அங்கங்கு பார்த்து திருப்பி கொடுக்கும் போது சூப்பர் என்றாள். நான்கு பக்கத்தினை பார்த்து ஒரு நாவலினை எடை போட முடியுமெனில் இதுவரை வந்த நூல்களெல்லாம் எதற்கு எழுதபட்டுள்ளது ? இதனை நினைத்து சொல்ல முடியாததால் அறுபது ரூபாய் தான் வாங்கிக் கொள்ளலாம் என்றேன். கணவனிடம் கேட்டு சொல்கிறேன் என்றாள். ஆனால் சென்றுவிட்டாள்.

அவர்கள் இத்தனை தூரம் வௌவாள்கள் இல்லா இடத்தினை தேடியதன் காரணம் இன்னமும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் சென்னை செல்லும் இரயில் வருகிறதாம் அதுவரை குழந்தைக்கு சுற்றி காண்பிக்க பூங்கா வந்தாளாம். எச்சம் பைகளில் விழக்கூடாதே என்னும் முன்னெச்சரிக்கை!

சில காலம் சாரு வேசிகளையும் எழுத்தாளர்களையும் இணைத்து எழுதியிருக்கிறார். இப்போது எனக்கும் அதே தான் தோன்றுகிறது. ஒரு மனிதனின் கடின உழைப்பினை இப்படி பார்த்து சூப்பர் என வழி மொழிய முடிகிறதே வேசியிடம் சென்று இலவசமாக ஒரு ட்ரைலரினை கேடக முடியுமா ? செருப்பால் அடித்து அனுப்பிவிடுவாள் - professional ethics.

இந்த பயமும் கோபமும் இருந்ததால் தான் நித்யாவிடமும் வந்திருந்த சிலரிடமும் பணத்தினை நேரடியாக கேட்டுவிட்டேன்மவர்கள் எதுவும் சொல்லவில்லை. அதுவரை உண்மையில் ஏமாளியாக இருந்துவிட்டேன். இனி அப்படி இருக்கப்போவதில்லை. என்ன பணத்திற்கு இப்படி அலைகிறான் என சொன்னாலும் பரவாயில்லை ஒரே கோட்பாடு தான் - கைல காசு வாயில தோசை!!!!

அடுத்தது இதைவிட கேவலமான சம்பவம். அந்த நிகழ்விற்கு வந்திருந்த இரா.முருகவேள் பெரிய எழுத்தாளர் இலக்கியவாதி என்பது அந்த கூட்டத்திற்கு தெரியும். பொது மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவர் பேசும் போது இடைமறித்தல் தவறு என்பது கூடவா தெரியாது ?
என்ன மாதிரி ஜென்மமோ தெரியவில்லை! சரி அவர் தான் பேசிக் கொண்டிருக்கிறார். கேட்பவர்களில் ஒருவரிடம் என்ன நிகழ்வு என கேட்க வேண்டியது தானே ? முருகவேளிடமே அசட்டு சிரிப்பினை வைத்துக் கொண்டு கேட்டாள்(இவளுக்கும் மரியாதை கேன்சல்). கேட்டதோடு நிறுத்தினால் தான் பரவாயில்லையே சுயபிரசங்கம் வேறு - நானும் கவிதை நொட்டுவேன் அத புக்கா போட்ருக்கேன் என. அங்கேயே அவளை அசிங்கமாக திட்ட வேண்டும் என தோன்றியது. செய்தால் எனக்கு தான் அசிங்கம். அதற்கு முருகவேள் அவளை பார்த்து - அறுபது ரூபாய் கொடுங்க அவரே புக் தருவாரு!!! அவருடைய கோர்வையும் தடைபட்டுவிட்டது. நான் தொடருங்கள் என்றேன்.

அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் முருகவேள். . . .

இந்த இரண்டாம் நிகழ்வினை முருகவேள் பேசும் வீடியோவிலேயே காண முடியும். பதிவிடும் போது பாருங்கள் நிச்சயம் உங்களுக்கே கோபம் வரும்.

என் ஒரே கேள்வி - அவர்களால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது ???

தொடரும். . . 

Share this:

CONVERSATION

3 கருத்திடுக. . .:

pichaikaaran said...

நல்ல அனுபவ பகிர்வு,,,, வாழ்த்துகள்

sushil kumar bharathi said...

A ship that wishes to cross the most difficult oceans need to be hit by waves, icebergs, sharks and what not!!! Krishna the sailor man!!!

Nondavan said...

நண்பா... உங்க போவம் புரிகிறது...

Post a comment

கருத்திடுக