நாவல் வெளியீட்டு நிகழ்வு - 3

Inferiority complex இனை பற்றி சொல்லும் போது தான் நித்யா சொன்ன ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. நானும் பொயட் நட்சத்திராவும் எந்த எதிர்வினை வரும், எப்படியெல்லாம் வரும், இந்த எழுத்தின் இவரது சாயலா என சொல்லிவிடுவார்களோ என்னும் எந்த பயமும் இல்லாமல் எழுதும் பதிவுகளின்  லிங்கினை அப்படியே ஃபேஸ்புக்கில் ஷேர் செய்கிறோம் என்றார். குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம் நித்யா ப்ரியாவும் பதிவுதளம் வைத்திருக்கிறார். ஆனால் அவர் அநேகம் எழுதி கணினியில் வைத்திருக்கிறாரே தவிர பதிவேற்றம் செய்யவில்லையாம்.

இதனை நான் கேள்வியாகவே பார்க்கிறேன். இதன் பதில் நட்சத்திராவிடம் என்ன என தெரியவில்லை ஆனால் என் பதிலினை இங்கு பதிவு செய்கிறேன். சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தினை பற்றி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாத மேடை நடந்தது. அங்கு சாரு முன் வைத்த ஒரு விஷயம் பத்து வருடங்களுக்கு முன் அவருக்கு எழுத அல்ல அவரது எழுத்தினை சமூக வெளிக்கு கொண்டு வர வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த இடத்தினை பூர்த்தி செய்தது இந்த இணையதளம் என்றார்.

என் பதிலுக்கும் இந்த பதிலுக்கும் சிறிய மாற்றம் தான். அவருக்கு இணையம் ஒரு வாய்ப்பு. எனக்கு அறிமுகம். இந்த அறிமுகம் மட்டுமே என்னை நல்ல எழுத்தாளனாக மாற்றும் என நம்புகிறேன். என் வெளியில் எழுதி எழுதி வைக்கும் வரை நான் மட்டுமே வாசித்து எனக்கு நான் சூப்பரான எழுத்தாளனாக இருப்பேன். அதே என் எழுத்து ஒரு வெளி மூலம் சமூகத்திற்கு செல்லும் போது தான் பன்முக வாசகர்களிடமிருந்து யாரின் சாயல் எங்கு தெரிகிறது என சொல்வது நமக்கு தெரிய வரும். அப்படி சொல்லப்படும் வார்த்தைகளால் எழுதுபவனின் மனம் புண்படும் எனில் அவன் எப்போதும் எழுத்தாளனாக முடியாது.

அவர்களுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளங்கோ நாவலை வாசித்து என்னிடம் அலைபேசியில் பேசியதை சொல்கிறேன். என் நாவலில் பலரின் சாயல் தெரிகிறது(சில இடங்களில்) என சிலரை குறிப்பிட்டார். அப்போது அவரே சொன்னது. இது உன் நன்மைக்கு தானே ஒழிய குறை அல்ல. பிறரின் சாயல் தெரிகிறது எனில் உன் தனித்துவம் போனது என்பதல்ல. ஒரு குழந்தை பிறக்கிறது. பிறந்தவுடன் தவழ்தலும் நடத்தலும் தான் இயல்பு. அதற்கு அப்பாவினையோ காண்பவர்களையோ முன்னோடியாக கொள்ளும். அதே பறந்தால் அது அப்நார்மல். இதன் வெளிப்பாடாக தான் உன் நாவலை பார்க்கிறேன் என்றார்.

இதை தான் நித்யாவிடமும் அவரை போல் இருப்பவர்களிடமும் சொல்ல நினைக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிரருந்து தூண்டுகோலோ வழிகாட்டும் நண்பர்களோ இல்லை. அனைத்துமே நான் தான். அதனால் தான் எனக்கு எந்த பயமும் இல்லை. யார் விமர்சித்தாலும் முழு மனதார வரவேற்கிறேன். காரணம் அவர்கள் என் எழுத்திலிருந்து ஏதோ எதிர்பார்க்கிறார்கள். ஒரு நாள் நிச்சயம் அதனை செய்வேன்.

இதனை பூடகமாக அங்கே சொல்லும் போது இளங்கோ ஒரு கேள்வி கேட்டார் - எத்தனை பேர் சீரியஸாக வாசிக்கிறார்கள் என நினைக்கிறாய் ? என்றார். உண்மையான வார்த்தையான சொற்பம் என்பதனையே நானும் சொன்னேன். அதற்கு அவர் ஒரு கதையினை சொன்னார்
"அவர் ஒரு முறை க்றிஸ்டியன் கல்லூரி சென்றாராம். அங்கு ஒரு மேட்டின் மேல் ஒருவர் நின்று பேசிக் கொண்டிருந்தாராம். சொற்பொழிவினை போல. வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இவர் அவரை கடந்து சென்றுவிட்டார். என்ன தான் பேசுகிறார் என போய் பார்ப்போம் என சென்றிருக்கிறார். ஆனால் அங்கே யாரும் கேட்பாரில்லையாம். இவருக்கோ அதிர்ச்சி. பேசிக் கொண்டிருந்தவரிடம் கேட்ட போது அவர் சொன்னாராம் நான் பேசுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்." என்னை போல் இணையத்தில் எழுதுபவர்கள் இந்த வகை பயிற்சியினை எடுப்பவர்கள் என சொன்னார். உண்மை தான். மறுதலிக்க முடியவில்லை.(மறுதலிக்கும் பதிவுகள் இருப்பின் தாராளமாக இடலாம்)

பதிவுதளம் எழுதும் முன் வாசிப்பவரின் உளவியலை அறிவது முக்கியமான ஒன்று என எஸ்.ரா, சாரு மற்றும் ஜெயமோகனின் இணையத்தினை கூறினார். அது என்ன உளவியல் என்பதனை இவர்களின் இணையத்திற்கு சென்று அறிந்து கொள்ளுங்கள். என் கணிப்பு உளவியலை அறிய குறிப்பாக எஸ்.ரா வின் இணையத்தினை பாருங்கள். . . 

தொடரும். . . 

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Nondavan said...

என்னை பொறுத்த வரை, நாம் நினைப்பது எழுவானாலும் எழுதலாம், எந்த தயக்கமின்றி.. அப்பொழுது தான், பிறரின் கமெண்டுகள், அறிவுரைகள் நம்மை செரிப்படுத்தும்....

Post a comment

கருத்திடுக