நாவல் வெளியீட்டு நிகழ்வு - 2

வீடியோ தான் போடப்போகிறீர்களே பின் ஏன் எழுத வேண்டும் என ஒருவர் கேட்டார். நியாயமான கேள்வி. விபரத்தினையும் சொல்லிவிடுகிறேன். நிகழ்வு காலை பத்து மணிக்கு ஆரம்பிப்பதாக திட்டமிடல் இருந்தது. சொன்ன நேரத்திற்கு வந்தவர்கள் நான் அம்மா அப்பா நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சியின் முக்கிய ஆட்கள்.

கொஞ்சம் விரிவு செய்கிறேன். அதற்கு முன் என் முகத்தில் இந்த நிகழ்வில் ஒரு பெரிய மாற்றம் இருந்தது. முந்தையநாள் இரவில் அன்பரசன் என்னும் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் என் கண்ணாடி மிதியடியில் தன் உயிரினை மாய்த்துக் கொண்டது. வருத்தம் கொண்டேன். பின் என்ன செய்வது நான் இதுவரை வாங்கியதிலேயே விலை உயர்ந்த கண்ணாடி அது தான்! அதனால் கண்ணாடி இல்லாமலேயே போய்விடலாம் என முடிவு செய்திருந்தேன். தூரத்தில் இருப்பது தான் மங்கலாக தெரிந்தது. மேலும் மாலையில் தான் அந்த பூங்காவிற்கு அதிகம் பெண்கள் வருவார்கள் என சொல்லியிருந்தபடியால் விசனங்கள் எனக்குள் கம்மி தான்!

அன்று காலையில் நான், அம்மா, அப்பா, நாகஹரி கிருஷ்ணன், அன்பரசன், கௌஷிக் அந்த பூங்காவிற்கு எட்டரைக்கே வந்து சேர்ந்தோம். முதல் வேலை இடம் பிடிப்பது. அது அங்கு சாதாரணம் கிடையாது. அந்த பூங்காவின் அனைத்து இடங்களிலும் மரங்கள். அனைத்து மரங்களிலும் தலைகீழாய் நம்மை முறைத்துக் கொண்டிருக்கும் வௌவ்வால்கள். இது எப்போது நம்மை எச்சமிட்டு அசிங்கபடுத்தும் என தெரியாது. ஆக இதனை மனதில் வைத்து இடம் தேட ஆரம்பித்தோம். நண்பர்கள் மட்டும்.

அப்போது தான் அடுத்த பிரச்சினை - சூரியன். நேரம் ஆக ஆக சூரிய ஒளி பரவுவதால் நிழலுள்ள இடத்தினை அணுக வேண்டும் என அடுத்த கோரிக்கையினையும் மனத்தின்கண் வைத்து தேடினோம். அதே போல் ஒரு இடம் கிடைத்தது. நிகழ்ச்சி ஆரம்பித்தபின் யூகத்திற்கு மாறாய் இரண்டாவது கோட்பாடு அங்கே தோற்றுபோனது. நிகழ்ச்சி முடியும் போது கிட்டத்தட்ட அருகருகில் தான் அனைவரும் அமர்ந்து கொண்டிருந்தோம்.

இடம் பிடித்தாகிவிட்டது. அதன் பின் அங்கே ஒரே குப்பை. அருகில் கழிவரை காப்பாளரிடம் சென்று வாரியல் கிடைக்குமா என கேட்டேன். அவர் அங்கு வேலை செய்பவர்களையே அனுப்பி வைத்தார். நாவலின் முதல் வியாபாரம் கூட அவரிடம் அங்கு செவ்வனே நடந்தது(இது யாருக்கும் தெரியாது!). நூலினை வாங்கி பத்து மணி நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார். பாவம் இருபதடி தாண்டி கூட அவரால் முடியவில்லை!

கிட்டத்தட்ட அனைவரும் வந்தாயிற்று நறுமுகை தேவியினை தவிர. அவர்கள் வந்தவுடன் வெளியீட்டினை வைக்கலாம் என நான் சொன்னதால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

யார் ஆரம்பிப்பது என அவர்களுக்குள் யோசிக்கும் போது சுஷில் ஆரம்பித்தார் - சமீபத்தில் ஒருவர் உன் பதிவிற்கான பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தியின் எழுத்தில் inferiority complex தெரிகிறதே என்றிருந்தார். அது உண்மையா என கேட்டார். உண்மையில் இந்த திடிர் தாக்குதலை எதிர்நோக்கவில்லை. அதற்கான பதிலினை அங்கே சொன்னேன். அதனை அப்படியே எழுதுகிறேனா என தெரியவில்லை. ஆனால் பதிலின் கரு ஒன்று தான்.

ஃபேஸ்புக்கில் ஆரம்பத்தில் எனக்கு மட்டும் அகௌண்டினை வைத்து ப்ளாக்கில்(இப்போது தான் வலைதளம்) எழுதுபவையெல்லாம் லிங்க் கொடுத்துக் கொண்டிருந்தேன். சிலர் வாசித்தார்கள். மேலும் ஃபேஸ்புக்கின் பல குரூப்களில் என்னை பதிவு செய்து கொண்டேன். விஷயமே அங்கு தான் இருக்கிறது. நான் எழுதும் சினிமா அல்லது இலக்கியம் சார் கட்டுரைகளை அதற்கென இருக்கும் குரூப்களில் பகிர்கிறேன். அல்லது லிங்கினை கொடுக்கிறேன். அதிகபட்சம் 45 பேர் வாசிக்கிறார்கள். சாருவினை பற்றி எழுதி அதனை பகிர்ந்தால், அஃதாவது அவருடைய வாசகர் வட்டத்தில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை 100 இனை தாண்டுகிறது. இந்த சாரு, சினிமா, இலக்கியம் என அனைத்தினையும் தாண்டி என் சுயம் சார்ந்து சில கட்டுரைகளை நான் எழுதுகிறேன். அதன் எண்ணிக்கை -  20 அல்லது 25! இந்த ஆச்சர்யக்குறி கூட நூதனமாக தங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயம் அவர்கள் அந்த சுயம் சார்ந்த கட்டுரைகள் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். ஒரு வேளை இது என் சாபமோ என நினைக்கிறேன். விஷயம் இந்த 20 25 இல் இல்லை.

ஃபேஸ்புக்கில் தனியாக கிமுபக்கங்களுக்கு ஒரு பக்கத்தினை திறந்தேன். லைக்குகளின் எண்ணிக்கையும் 100 இனை தாண்டிவிட்டது. ஆனாலும் மேலே சொன்ன அதே நிலை தான்! அப்படியெனில் லைக் அடித்த 100 பேர் எங்கே போனார்கள் ? இதன் பாதிப்பு அல்லது எதிர்பார்ப்பு என் எழுத்தில் தெரிந்திருக்கலாம். எழுதும் போது இது என்னை பாதித்ததில்லை. இந்த கேள்வியினை சுஷில் கேட்டவுடனே நான் சொன்ன முதல் வார்த்தை அதீத ஆசை தான் வேறென்ன. . .

அவ்வப்போது நினைப்பதுண்டு இதனை வாசகன் வாசிப்பானா என இருந்தாலும் மரமண்டை தோன்றுவதை தான் எழுதி தொலைக்கிறது. . .

இப்படியே குறும்பதிவுகளாக போட நினைக்கிறேன் அதற்கு வந்திருந்த இளங்கோவும் காரணம். ஏன் என வரும் பதிவுகளில். . .

தொடரும். . . 

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Nondavan said...

hahahahaa.. interesting... //அதீத ஆசை தான் வேறென்ன. . .// எல்லோருக்கும் இருக்கும் அதே ஆர்வம் தான்

Post a comment

கருத்திடுக