நாவல் வெளியீட்டு நிகழ்வு - 1

வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வினை போல் பிருஹன்னளை நாவலின் வெளியீடு நடந்தது. நிறைய பேர் வருகிறேன் என சொல்லியிருந்தார்கள். ஆனால் சிலரால் நான் அறியாத சிலரெல்லாம் வந்திருந்தார்கள். அதே கூப்பிட்டவர்கள் மிஸ்ஸிங்!

இதிலும் கொடூரம் யாதெனில் என் கல்லூரியிலிருந்து ஆசிரியர்கள் இருவர் வந்திருந்தார்களே தவிர என்னுடன் படிக்கும் ஒருவர் கூட வரவில்லை! கொஞ்சம் உள்ளூர வருத்தம் இருந்தது. இருந்தாலும் நஷ்டம் எப்படியும் எனக்கில்லை என்றுணர்ந்த போது அகன்றது. அதில் சிலர் அடுத்த நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்வேன் என சொல்லும் போது தான் மனக்கஷ்டம் வருகிறது. அடுத்த நிகழ்வு, அடுத்த நாவல் எப்போது வரும் என்பது இப்போதைக்கு நிர்ணயம் இல்லாத ஒன்று. அந்த ஒன்றினை அவர்களால் மட்டும் எப்படி உறுதியாய் சொல்ல முடிகிறது ? இதில் என் சில நண்பர்கள் கோயமுத்தூர்காரர்கள்!

அவர்களுக்காகவே வந்திருந்த சிலரை நான் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக மூவரை. ஒருவர் நித்யாப்ரியா(ஃபேஸ்புக் பெயர்). இவர் சாருவின் வாசகர் வட்டம் மூலமாக அறிமுகம் ஆனவர். இவர் இருப்பது ஈரோட்டில். இத்தனைக்கும் இவர் சென்றவாரம் ஞாயிற்றுக்கிழமையே ஈரோட்டிலிருந்து கிளம்பினார். எனக்கு அப்போது குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது. நான் கிளம்பிவிட்டேன் என. எனக்கோ அதிர்ச்சி. இவர் கிளம்புவதை ஏன் என்னிடம் சொல்கிறார் என. அவரை அழைத்து கேட்டபோது அவர் சொன்னது - இன்னிக்கு தான புக் ரிலீஸ் அதான் கிளம்புறேன் என. நல்ல வேளை அவர் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்தார். வெளியீடு அடுத்தவாரம் என சொன்னேன். அதே போல் நாளினை மறக்காமல் நேற்று விழாவிற்கு வந்திருந்தார்.

அடுத்து ஃபேஸ்புக்கில் பொயட் நட்சத்திரா என்றிருக்கும் வெங்கடேஷ். இவர் உடுமலைப்பேட்டையிலிருந்து வந்திருந்தார். இவருக்கு இன்று கல்லூரி தேர்வு. இருந்தும் நேற்று விழா முடியும் வரை உடன் இருந்தார். அவருடன் ஒரு நண்பரும் உடனிருந்தார். அவர் பெயர் சதீஷ். இவருக்கு வாசிக்கும் பழக்கம் கிடையாதாம். நட்சத்திரா அழைத்ததால் பழனியிலிருந்து. . .

இத்தனை நெகிழ்ச்சிகள் இருந்தாலும் கல்லூரியிலிருந்து யாரும் இல்லையா என என்னை பார்த்துகேட்கும் போது பொய்யான சிரிப்பில் மட்டுமே அங்கிருக்க முடிந்தது. என் உள்மன அவமானத்திற்கு என் நண்பர்களே காரணம். அதற்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை.

ஒரு முறை என் ஆசிரியர் சொன்னார் - உனக்கு நண்பர்கள் கடைசி வரை இருப்பார்கள் ஆனால் அவர்களின் முக்கியத்துவம் யாருக்கு என்பதில் தான் வாழ்க்கையின் இரகசியம் இருக்கிறது என. என் இலக்கியத்தினால் அதனை இன்று நன்கு உணர்ந்திருக்கிறேன்.

இதோடு இந்த பதிவு போதும். நிறைய விஷயங்கள் எழுத இருக்கிறது. கதார் நிர்மல், பீஹார் பால கணேசன், இலங்கை ருக்‌ஷன், பெங்களூரூ பார்த்திபன் என அநேகம் பேர் என்னிடம் வீடியோவினை கேட்டிருந்தார்கள். அவர்களது ஊர் கோவையாக இருந்திருக்கக் கூடாதோ என தோன்றுகிறது. அவர்களுக்காக சீக்கிரம் வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறேன்.

மேலும் வந்திருந்த இரா.முருகவேள், மயூரா ரத்தினசுவாமி, இளங்கோ கிருஷ்ணன், சுஷில்குமார், நறுமுகைதேவி, தினேஷ், ஸ்டீபன்(சுஷில் அழைத்து வந்த இன்னுமொரு நண்பர் பெயர் மறந்து போனேன் அவரும்), நாகஹரி கிருஷ்ணன், கௌஷிக், அன்பரசன்,வெங்கடேஷ், நட்சத்திரா, சதீஷ். நித்யாப்ரியா, விஜி இடையில் கலந்து கொண்ட பேராசிரியை, சபை நாகரீகமரியாது நன் மக்களின் பேச்சினை மரித்த ஒரு கோவை பெண்மணி யரையேனும் குறிப்பிட மறந்திருந்தால் அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இத்துடன் போட்டோஸ்... விரைவில் வீடியோ. . . தொடரும். . .  .

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Nondavan said...

நானும் கோயமுத்தூர் காரன் தான்.. பட் வேலை செய்வது துபாயில்.... கண்டிப்பா மிஸ் செய்த ஒரு நிகழ்வு.... மறக்காமல் வீடியோ பதிவு போடுங்கள்.. மற்றூம் நீங்கா விரிவா எழுதுங்க, உங்க எழுத்துகளில்...

மனமார்ந்த வாழ்த்துகள்... எனக்கு ஒரு காப்பி எடுத்து வைக்கவும்.... நான் ஆகஸ்ட் வரும்போது என் பிரதியை பெற்றுக் கொள்கிறேன்... புங்க வங்கி கணக்கும் தெரியப்படுத்தவும்....

Post a comment

கருத்திடுக