நாமார்க்குங் குடியல்லோம்


சமூக வலைதளங்கள் சார்ந்து சில திடுக்கிடுங் தகவல்களோடு நல்ல ஒரு விவாத மேடை சன் நியூஸ் தொலைகாட்சியினால் சமீபத்தில் நடத்தபட்டது. இப்போதெல்லாம் நிறைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சாரு நிவேதிதா பங்கேற்கிறார். பாழும் காட்டினில் படித்துவருவதால் இங்கு காண்பதரிது. இணையங்களில் லிங்குகளாகவும் லைவ் டி.விகளாகவும் வருகிறது. அதிலுள்ள பாதகம் யாதெனில் இணையத்திலேயே பார்க்கும் போது இடையூறு ஏற்பட்டால் மறுபடியும் முதலிலிருந்து தான் வீடியோ ஓடும்! பதிவிறக்கம் செய்யலாம் எனில் இடையூறு வந்தால் கட். இந்த அனைத்தினையும் மீறி இம்முறை எப்படியோ பதிவிறக்கம் செய்தேன். அந்த வீடியோ தான் மேலே கொடுத்தபட்ட லிங்க்.

காரணம் சாரு அதில் இழிவான கருத்துகளை சொல்லியிருக்கிறார் அதுவும் அவர் பயன் கொண்டிருக்கும் சமூக வலைதளங்களை பார்த்து என. இந்த கருத்து சாரு சார்பானவர்களால் சரியானதாக கொள்ளபட்டது. ஆனால் எதிர்ப்பவர்கள் மிக வசையாக எழுதியிருக்கின்றனர்.

அந்த வீடியோவினை பார்த்து அதில் நான் கொண்ட புரிதலினை இங்கு பதிவிடுகிறேன். நான் ஆதரவா முரணா என கட்டுரையில் தெரியும்.

இக்கட்டுரையில் சாருவினை மட்டும் சொன்னால் அது ஒரு தலைபட்சமாகும். எனக்கு மனுஷ்யபுத்திரனையும் அதிகமாக பிடித்திருந்தது. சாரு ஒட்டு மொத்தமாக சமூக வலைதளங்களையே மித், ஒரு வகை மாயை என்கிறார். அதற்கு அவர் முன் வைக்கும் காரணம் இங்கே ஃபேக் ஐடிகள் ஏகப்பட்டது உலவுகிறது. அடுத்து அவர் இந்த ஃபேஸ்புக் ட்விட்டர் போன்றனவற்றில் எழுதப்படுவது கழிவறை கிறுக்கல்கள் போல என்கிறார். ராஜா என தி.மு.க உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றார், அவர் சில சந்திப்புகளை ஃபேஸ்புக் மூலம் எங்களால் செய்ய முடிகிறது என்று சொன்னதை சாரு எதிர்த்தார்.

இந்த மூன்றில் தான் என் முரணும் சார்பும். எழுத்து என்பது தனி மனிதனை தாண்டி சமூகத்திற்கு வரும் போது அது எதிர் அல்லது சார்பான விமர்சனங்களுக்கு உட்படுவதே நியதி. பல ஆண்டுகளாக எழுதி வரும் சாருவிற்கும் இது விதிவிலக்கல்ல. ஆனால் அந்த விமர்சனங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். இங்கே போலி முகமூடிகளால் விமர்சனங்கள் அனைத்தும் தனி மனித தாக்குதல்களாக இருக்கிறது. அதற்கு அவரின் பரதேசி படம் சார்ந்து இருக்கும் விமர்சனமே சிறந்த சான்று. ஆக இங்கே நம்மால் பதிலளிக்கவும் முடியாத நிலை. அப்படியே செய்தாலும் சூரியனை பார்த்து குறைப்பது போல் தான் இருக்கும்.

அடுத்து கழிவறை கிறுக்கல்கள். இதில் தான் முழுதும் முரண்படுகிறேன். மனுஷின் கருத்து ஏற்புக் கொள்வதாய் இருக்கிறது. சமூக வலைதளம் ஒரு நிறுவனம் என்பது போல் மட்டுமல்லாமல் திறந்த வெளியாக இருக்கிறது. இங்கெ தான் நாம் முழு சுதந்திரத்தினையும் உணர்கிறோம்.
ஆபாசம் முதல் குழந்தையின் சிரிப்பு வரை இலக்கியமாகவும் வெறும் வார்த்தைகளாகவும் வாசிக்கவே முடியாத பதிவுகளாகவும் நிறைந்து இருக்கிறது. இதில் நம் தேர்வுகள் தான் முக்கிய பங்குகள் வகிக்கிறது.

சின உதாரணம் என் அறையில் இருக்கும் ஒரு நண்பன் சமீபத்தில் ஒரு நிர்வாண பெண்ணின் புகைப்படத்தினை லைக் செய்துவிட்டான். அவனுக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் வேறு! இனிமேல் வாசகர் சித்தரிப்பு.

இடைச்செருகல் : இலக்கியம் என வார்த்தையினை உபயோகப்படுத்தும் போது சமீபத்தில் எனக்கு திடிரென ஒரு கருத்து இலக்கியம் சார்ந்து உதயமானது. அது காலத்தினை பதிவு செய்வது தான் இலக்கியம். காலமாற்றத்திற்கு ஏற்றவாறு நம் சமூக நிலைகள் கலாச்சார அமைப்பு என அனைத்தும் மாறுபடுகிறது. நாம் எந்த நிலையிலிருந்து இங்கு வந்திருக்கிறோம். இந்த நிலையில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் எங்குசெய்ய வேண்டும் எங்கு குறைகள் இருக்கிறது என்பதனை இலக்கியங்கள் பிரதிபலிக்கிறது. அதனால் தான் சொல்லப்பட்டிருக்கிறது இலக்கியம் கலாச்சாரத்தினை சமூகத்தினையும் உருவாக்கும் ஒரு கருவி என.

இந்த அறைத் தோழனை சொல்லிய போது தான் போராட்டத்தினை பற்றிய பதிவு என் நினைவிற்கு வருகிறது. சாரு சொன்ன விஷயம் அப்படியே என் கல்லூரியில் நடந்தது. எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி நண்பன் செல்கிறானே என ஆட்டு மந்தைகளை போல ஈழத் தமிழர்கள் போராட்டத்திற்கு சென்றனர். இந்த கூட்டம் ஃபேஸ் புக்கினால் என்ன எந்த புக்கினால் வந்தாலும் அது எப்போதும் அறவழி போராட்டம் ஆகாது. கூட்டம் சேர்க்கும் கழகம் தான் அது.

இந்த கூட்டம் கூட ஃபேஸ்புக்கினால் சரியாக அமைக்க முடியாது என்றும் சாரு சொன்னார். காரணம் ஒரு அகௌண்டினை திறக்கிறோம். அங்கும் நாம் நமக்கு தெரிந்தவர்களை சேர்த்து ஒரு கூட்டம் சேர்க்கிறோம். அல்லது கூட்டதினுள் சேர்கிறோம். கூட்டம் கூடினாலும் அந்த குழுமத்திற்குள்ளேயே நடக்கிறது. இது எப்படி சமூகம் ஆகும் ? இதனால் அவர் கூட்டமோ சந்திப்புகளோ நடத்த ஃபேஸ்புக் உதவாது என்றார். அவரிடம் கேட்க நினைத்த விஷயம் இந்த ஃபேஸ்புக் இல்லையெனில் என்னால் சாருவிடம் பேச முடியாதே ? சாரு நடத்தும் வாசகர் சந்திப்புகள் வாய்ப்புகளின்றி போய்விடுமே ?

இப்போது என் நாவலினை வெளியிடுகிறேன். அதனால் ஃபேஸ்புக்கின் மூலம் நிறைய பேரினை அழைத்திருக்கிறேன். அதே  இதற்கு பிறகு நான் அழைத்தால் சாரு சொல்வது போல் அதே நபர்கள் தான் என்னால் அழைக்கபடுவார்களோ என எனக்குள்ளேயே சந்தேகம் எழுகிறது. இங்கே ஒரு தடுப்பு குறுகிய வெளியினுள் நம்மை அடைத்துவிடுகிறது.
குறிப்பு : இந்த கருத்துடன் சாரு சொன்ன முதல் கருத்தை இணைத்து பாருங்கள் ஏன் ஃபேஸ்புக் மித் என்பது புரியும்.

இந்த கடைசி கருத்து என்னை மிகவும் கவலையினுள் ஆழ்த்துகிறது. இதற்கான பதில் நிச்சயம் நடைமுறை வாழ்க்கையில் தான் தெரியும் என நினைக்கிறேன்.

இந்த விவாதத்தினை பார்க்கும் போது சாருவின் கருத்து ஆளுமை என்னை வியக்க வைக்கிறது. அவர் இந்த முரணான கருத்துகளை சிந்திக்கவில்லை. இது சொன்னால் எதிர்ப்பு வருமா அல்லது சொல்லலாமா என சிந்திக்கவில்லை. டக் டக்கென தன் கருத்துகளை அப்படியே பதிவு செய்கிறார். இந்த தைரியத்தினை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். கருத்துரிமையினை அனுபவிக்க ஏங்குகிறேன். என்ன! இப்போது அப்படி செய்கிறேன் பேர்வழி என ஆசிரியரிடம் உண்மையினை, அவர்கள் செய்யும் போலித்தனங்களை(நடத்துவதில்) நேரடியாக சொன்னால் இன்டர்னலில் கைவைத்துவிடுவார்கள்! எத்தனை தடைகள்!!!

நான் சாருவின் ரசிகனாய் இருப்பதன் காரணங்களுள் இதுவும் ஒன்று. இவ்வளவு தூரம் வாசித்துவிட்டீர்கள் கட்டுரையும் முடிந்துவிட்டது. கொஞ்சம் அப்படியே அப்பரின் வரிகளையும் வாசித்துவிட்டு செல்லுங்கள் புண்ணியமாக போகும் - 


நாமார்க்கும் குடியெல்லாம் நமனை யஞ்சோம்
     நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
     இன்பமே யென்னாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் த்ன்மை யான
   சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
     கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக