முதல் அங்கீகாரம்

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கான சந்தோஷ செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நாவலுக்கான வேலைகள் காலம் தாழ்த்தியே நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் செய்ய தெரியாது. ஒரு வேளை அதனால் கூட இருக்கலாம்.

என்ன நடந்தது என சொல்கிறேன். ஒன்றரை வாரம் முன் என் நாவலினை அவர்கள் டைப் அடித்திருந்தனர். அதனை வாசிக்கும் போது தான் தெரிகிறது அதில் பல வரிகளை காணவில்லை. அதனையெல்லாம் குறித்துவைத்து பிழை திருத்த சொல்லி  பதிப்பாளருக்கே அனுப்பினேன். அவரும் சில பிழை திருத்தம் செய்திருந்தார். அவர் செய்தது ஒற்றுப் பிழைகள் மற்றும் நிறுத்தற்குறியீடுகள் சார்ந்தது. இது நிறைய இருந்ததாம்! விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. என்னுடைய பிழை திருத்தங்களை டைப் செய்பவர்கள் சேர்த்துவிட்டனர். அவருடைய பிழை திருத்தங்களை பொறுமையாக செய்திருக்கின்றனர். ஆனால் அதனை சேவ் செய்யவில்லை! விளைவு இப்போது மீண்டும் டைப் செய்து கொண்டிருக்கின்றனர். பொறுமையாக(கவனக் குறைகளுடன்) வேலை நடப்பதை பார்க்கும் போது நல்லதாக என் நாவல் வரும் என நம்புகிறேன். நாளை ப்ரிண்டிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது என் நாவலை எதிர்நோக்கும் அன்பர்களுக்காக ஒரு சின்ன பகிர்வு - என் நாவலுடைய அணிந்துரை. எழுதியவர் பதிப்பாளர் தமிழ்ச்செல்வன். என் நாவலுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.


குறிப்பு : அனுப்பியது பி.டி.ஃபில் இருந்ததால் அதனை போட்டோவாக மாற்றி பதிவேற்றியிருக்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக