யாத்ரீகன்

நேற்று தான் சந்தோஷமான ஒரு விஷயத்தினை சொன்னார்கள். அது இரண்டு நாள் கல்லுரி விடுமுறை என. இந்த முறையும் எப்போதும் போல் இரவு படத்தினை முடித்து வீட்டிற்கு கிளம்பலாம் எனமுடிவெடுத்தேன். அதற்கு முன் என் நாவலினை புத்தக கடைகளில் கொடுப்பதை பற்றியும் சிந்தித்தேன். கோவையில் பெரிய நூல் நிலையம் எனில் அது விஜயா பதிப்பகம் தான். அங்கு போய் நானே கேட்டேன் அவர்கள் சொன்னது ஒரு ஐந்து காப்பியினை எனக்கு அனுப்புங்கள் என.

இதில் இடைச்செருகலான விஷயம் நான் எரியும் பனிக்காடு நாவலினை வாசித்தே ஆக வேண்டும் என நிர்பந்தத்தில் இருக்கிறேன். சில நாட்கள் தள்ளி வாசிக்கலாம் என்றிருந்தேன் இப்போது கொஞ்சம் அவசரம். அதில் ஒரு இரகசியம் இருக்கிறது. கூடிய சீக்கிரம் என்னால் அது விடுபடும். என்ன தான் இரகசியம் இருந்தாலும் அந்த நாவல் இப்போது விற்பனையிலியே இல்லையாம். ப்ரிண்ட் போட்ட அனைத்து காப்பியும் விற்றுவிட்டதாம். அப்போது அப்பா ஒரு சுவாரஸ்யமான வ்ஷயம் சொன்னார். சேலத்தில் அஜந்தா புத்தக நிலையத்தில் இரண்டு பிரதிகள் இருந்தன. அதில் ஒன்றினை யாரோ வாங்கி சென்று விட்டார்கள். மீத ஒன்றினை அங்கு நூல்களை பார்த்துக் கொள்ளும் அம்மா எடுத்து வைத்திருக்கிறார்கள் தாங்கள் நாளைக் காலை வாருங்கள் என. அதே போல் நானும் சென்றேன். அந்த  அம்மா வரும் வரை நான் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு இடத்திலும் அந்த நாவலினை காணவில்லை. அந்த அம்மாவிடம் கேட்ட போது அவர்கள் பயங்கரமான இடத்தினில் ஒளித்து வைத்திருந்தார். குழந்தை நூல்களில் இடையே. யாரோ ஒருவர் மூன்று நாட்கள் தொடர்ந்து வந்து தேடினாராம். பாவம் அடியேன் அதிர்ஷ்ட சாலியாகிவிட்டேன்.

விஜயாவிற்கு வருவோம். அந்த பதிப்பகம் இருந்தது டவுன் ஹாலில். அங்கிருந்து நடந்தே நான் இரயில்வே ஸ்டேஷன் சென்று அப்படியே கே.ஜி சினிமாவிற்கு சென்றேன். என்னை சில கேரளா நண்பர்கள் ஏமாற்றி விடுகிறார்கள். அவர்கள் அதிகம் உலக சினிமா பார்ப்பவர்கள். அப்படியிருக்கையில் எப்போதாவது நல்ல படங்கள் ஹிந்தியில் வந்தால் என்னிடம் சிலாகிப்பார்கள்(அறிந்ததை வைத்து). நானும் அதனை நம்பி போய் பணம் கொடுத்து போவேன். அதுவும் நான் போகும் நேரம் முதல் நாளாக இருக்கும்! முதல் நாளெனில் 85 ரூபாய். அப்படி நான் போய் ஏமாந்தது தான் ஏக் தா டைகர்! அப்படி நேற்று சென்ற பட்ம் துப்பாக்கி பில்லா 2 படங்களில் வில்லனாக வலம் வந்த வித்யுத் ஹீரோவாக இருக்கும் கமாண்டோ என்னும் படம். அதில் சண்டைக்காட்சிகள் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என ஆசையினை கிளப்பி விட்டார்கள்.

நானும் டிக்கெட்டினை எடுத்தேன். மணி அப்போது எட்டு. படமோ பத்தே காலிற்கு தான். என்ன செய்ய என தெரியவில்லை. மீண்டும் அங்கிருந்து அப்படியே இரயில் நிலையத்தினை நோக்கி காரணமின்றி நடந்தேன். எத்தனையோ வகையான மனிதர்களை என்னால் பார்க்க முடிகிறது. எந்த காரணமும் இன்றி நான் நடந்து பின் திரும்பி தியேட்டருக்கு செல்லலாம் என திரும்பினேன். அந்த மனிதர்களின் வகைகளில் சிலர் என்னை திரும்பி பார்த்தார்கள். அவர்களின் பார்வை சற்று சந்தேகத்திற்குரியதாய் இருந்தது.

இந்த சந்தேகம் நிச்சயம் என் நண்பர்களுக்கு வந்திருக்கும். ஏனெனில் நேற்று கல்லூரியில் பெரிய பிரச்சினை. சீனியாரிட்டி என்னும் அதிகாரத்தின் ஒரு ரூபம். அது கைகலப்பாகி பொது மக்கள் போலீஸிடம் சொல்ல என் அறை பங்காளர்கள் போலீஸ் ஸ்டேஷனில்! என் ஒரே கேள்வி ஒருவரை ஒருவர் அடிப்பதாய் முடிவினை எடுப்பதன் மூலமும் அடிப்பதன் மூலமும் இவர்களால் எப்படி நிம்மதியாய் இருக்க முடிகிறது ? மனிதனின் உயிர் இந்த உலகத்தில் இத்தனை தூரம் நீட்சியினை கொண்டிருப்பதற்கான ஆதார ஸ்ருதி அன்பிற்கான தேடல். இங்கே அது நடக்க சிறிது கூட வாய்ப்பில்லையே! இவர்களின் அதிகார ஆசை மனிதர்களுக்கு இடையில் ஏற்படுத்தும் ஒரு உணர்வு பயமும் வெறுப்பும் தான். இதனை நான் போய் அவர்களிடம் சொன்னால் நீ பால்வாடி என்பர். எனக்கு தேவையா ? ஒன்று நண்பர்களுடன் ஒன்றி இருக்க வேண்டும் அல்லது நண்பர்களே இல்லாமல் இருக்க வேண்டும்.

நான் இரண்டாம் கட்சி. இப்படி தனியே செல்லும் போது படம் ஆரம்பிக்கும் வரை வாசிக்கலாமே என அந்திமழை என்னும் பத்திரிக்கையினை வாங்கினேன். அந்த பத்திரிக்கை சிறப்பாக இருக்கிறது என சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் அறிந்து கொண்டதால் அப்படி என்ன இருக்கிரது என அறிய ஆசை வந்தது. இந்த மாதம் தமிழ் சினிமா சார்ந்த சிறப்பிதழ். இதன் மூலம் அறிந்து கொண்ட விஷயம் இலக்கிய இதழ்களில் சிறப்பிதழ் என போட்டிருந்தால் வாங்கிவிடக்கூடாது என்பதே. ஆச்சர்யம் என்ன எனில் நான் வாங்கியதில் சாருவின் கட்டுரை!!!!

ஒவ்வொரு கட்டுரையும் விவாதத்தினை எழுப்புகிறது. ஒரு கட்டுரை தமிழ் சினிமா எத்தனையோ விஷயங்களில் கடந்து மிக மெதுவாக முன்னேறுகிறது என சொல்லுகிறது. சில கட்டுரைகள் நாம் தமிழ் சினிமா என கொண்டாடும் காலகட்டங்களில் உலக சினிமாவின் நிலை என்ன என்பதை சொல்வதால் நாம் முன்னேற வில்லையா என சந்தேகத்தினை தருகிறது. மேலும் ஹாலிவுட் காப்பிகள் நம் திரையுலகின் மரபு நோய். எம்.ஜி.ஆரிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த நூல் மூலம் அறிந்து கொண்ட சில விஷயம் நாம் ஃபார்முலாக்களில் சிக்கி இருக்கிறோம். இப்படி தான் படம் இருக்க வேண்டும் என நாமே முடிவினை எடுத்து பாடல் காட்சிகளினை சண்டை காட்சிகளினை வைத்து கலவையினை மட்டுமே கொடுத்து வந்திருக்கிறோம். உலக சினிமாக்களில் பார்த்தால் நாம் கலக்கும் ஒவ்வொரு விஷயமும் தனிப்படங்களாக இருக்கிறது. இங்கே இசை சார்ந்து படங்கள் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். இல்லையெனில் மிகச் சொற்பம். இதைவிட குறை இந்த ஃபார்முலாவினை காட்டி காட்டி நல்ல சினிமாவினை காட்டினால் ஏற்றுக் கொள்ளும் திறனினை மக்களிடமிருந்து மழுங்கடித்துவிட்டோம்.

இதற்கான சிறந்த எடுத்துக் காட்டு இன்னமும் நம் சினிமா உலக அரங்கிற்கு செல்லாதது. என்ன தானமிந்த புத்தகம் இத்தனை விஷயங்களை எனக்கு சொல்லிக் கொண்டிருந்தாலும் மேலே சொன்ன நண்பர்களிடம் போல் இந்த யாத்ரீகன். . . .(தொடரும்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக