i am a recluse

Charles bukowski என்னும் உலக இலக்கியவாதி எழுதிய women என்னும் நாவலினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் ஒரு recluse என்று தான் பெண்கள் ஆனாலும் பேட்டி காண்பவர்கள் ஆனாலும் கதாநாயன் சினாஸ்கி சொல்லுவான். இந்த வரிகளை கடக்கும் போது அதன் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. உடனே இணையதளத்தில் தேடினால் ஆன்மீகமான ஞானத்தினை தேடுதல் பொருட்டு சமூக பின்னல்களிலிருந்து விடுபட்டு இருத்தல் என்பதை அறிந்து கொண்டேன்.

இந்த வரிகளை மீண்டும் நாவலில் காணும் போதெல்லாம் எனக்கு சுய இரக்கமே தோன்றுகிறது. இப்படி எழுதுவதற்கும் காரணம் இருக்கிறது. என் தோழி இன்று அவளுடய தோழனுக்கு ஏற்பட்ட கதியினை சொல்லிக் கொண்டிருந்தாள். சொல்லி என்பதை விட புலம்பிக் கொண்டிருந்தாள். தோழியின் காதலன் அவளுடன் சண்டைபோட்டுவிட்டானாம். அதனால் தனிமையினை உணர்ந்து உருகிக் கொண்டிருக்கிறாள். இடையில் பெண்களின் தனிமையினை பற்றி உன்னை போன்ற ஆண்களுக்கு என்ன தெரியும் என கதை ஒன்றினை சொன்னாள். அது தான் அவளுடைய தோழனை பற்றியது.

அவன் ஒருத்தியினை எட்டாம் வகுப்பிலிருந்து காதலித்து வருகிறான். இருவரும் ப்ளானினை போட்டு ஒரே கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். அங்கு அவன் கல்லூரியினை கட் அடிக்க வசதியாக இருக்குமே என NCC இல் சேர்ந்தான். அவளும் சேரலாம் என பார்க்கும் போது அங்கிருக்கும் இடங்கள் நிறைந்துவிட்டது. ஆனாலும் இருவரும் நாள் முழுக்க பேசுவதில் எந்த தடையும் இல்லை. இப்படியே சுமுகமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திருப்புமுனையாய் வந்தது கேம்ப். ஒரு வார கேம்ப் சென்று வந்தான். பிரிவு தாங்க முடியாமல் break up ஆம்! அதனால் அப்பெண் இப்போது தனிமையில் இருக்கிறாள்! யாரேனும் இதனை நம்புகிறீர்களா ? எனக்கு சொன்னதை சொல்லும் போதே நம்பகத் தன்மையின்றி இருக்கிறது. இதில் முதன் முதலில் செவி மடுத்த எனக்கு ? மேலும் தனிமையினை இவ்வளவு எலக்காரமாக நினைக்கிறார்களே ? தனிமை தான் ஜனனமும் மரணமும் சங்கமித்திருக்கும் இடம். ஜனிக்கவும் வாய்ப்பிருக்கிறது மரணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவளுக்கு தெரியவில்லை பாவம். இதன் இடைச்செருகலாக அவள் என்னிடம் கேட்ட கேள்வி உனக்கு அந்த தனிமையினை பற்றி என்ன தெரியும் ?

இப்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினையால் நான் வீட்டிலிருக்கிறேன். இப்போது ஒரு நாளில் நான் செய்வதை சொல்கிறேன். காலையில் அம்மா வந்து எழுப்பும் போது தான் எழும்பல் காபி சாப்பாடு. இங்கே நடக்கும் சம்பாஷனைகள் - இன்னிக்கி எங்கயாவது வெளிய போறியா, பில் கட்டிட்டு வர்றியா. அவ்வளவே. குளியலுக்கு பின் நாகராஜ் என்னும் நண்பர் வந்தால் சினிமாக்களை பற்றி பேசலாம் அதே மாஸ்டர் வந்தால் எதை பற்றியும் பேசலாம். மாஸ்டர் வந்தால் மட்டுமே தனிமையிலிருந்து தற்காலிக விடுதலை. இவர்கள் இருவரும் இல்லையெனில் கணினியில் பார்க்கபடாமல் இருக்கும் சினிமா அல்லது ஏதேனும் நாவல், அதுவும் இல்லையெனில் தனியே தியேட்டர். மாலை இதன் தொடர்ச்சி. இரவு சாப்பாடு தொடர்ச்சி அல்லது எழுதுதல் பின் உறக்கம். ஒரு நாளில் நான் சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கைகளை பார்த்தீர்களா ? என்னை பொருத்தவரை மூன்று உயிர்கள் - மாஸ்டர் இலக்கியம் சினிமா. மூன்றும் என்னை விட்டு போகாது என நம்புகிறேன்.

இது இப்படியெனில் கல்லூரி இன்னமும் மோசம். ஆரம்ப காலத்தில் என்னிடம் மட்டும் சில நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின் அவர்களுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்தனர். கிடைத்தனர் என்பதைவிட அவர்களால் பழக முடிந்தது. எனக்கோ அது சற்றும் ஒத்துவரவில்லை. இது தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவலுக்கு அடிமையானதன் காரணம். என் நிலையினை அவரின் ஒவ்வொரு நாவலிலும் என்னால் காண முடிகிறது. அவருடைய நாவலில் நாயகனுக்கு வரும் பிரதான பிரச்சினை - i could not make acquaintance with all. இந்த இணையதளமும் வாசிக்கும் பழக்கமும் இல்லையெனில் ஸ்கீசோஃப்ரீனிக் நோயாளியாகி காதல் பட பரத்தினை போல ஏதேனும் முச்சந்தியில் தான் திரிந்து கொண்டிருப்பேன். ஐயோ நினைக்கவே கன்றாவியாக இருக்கிறது.

இதைவிட கொடுமையும் ஒன்று இருக்கிரது. என்னிடம் அவர்களின் தனிமைக்கொடுமைகளை சொல்லுபவர்கள் உனக்கென்னப்பா எலுத்தாலன் தனிமை புடிச்சிரும் என்பர். அவர்களிடம் சொல்ல நினைக்கும் பதில் கலை எனும் போது அங்கே தனிமை அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அதை செய்பவனுக்கு கலையுலகினை தாண்டி புற உலகு இருக்கிறது. அங்கும் அவனை இந்த சமூகம் தனிமையினையே பழகவிட்டால் ?

தவறு என் மேலேயும் தான் இருக்கிறது. அவர்கள் என்னை புறக்கணிக்கும் போது நானும் எழுத்துலகம் இருக்கிறது என வந்துவிடுகிறேன். எழுத்தும் வாசகன் இருக்கும் பட்சத்திலேயே பூர்த்தி அடைகிறது. அது எனக்கு இப்போது எட்டாக்கனியாக இருக்கிரது. நண்பர்கள் கிடைக்கும் வரை ஹாய் ஓய் என பேசப்பட்ட எழுத்துகள் இப்போது காகிதங்களாக மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கு என் எழுத்துகள் ஒரு replacement எனக்கோ இது ஒரு passion. என்னை பார்த்து உன் நெருங்கிய கூட்டத்தில் ஒருவர் கூட வாசிக்காத போது ஏன் எழுதுகிறாய் என கேட்டவர்களும் உண்டு.

முகம்பாரா நண்பர்கள் இருபது பேர் என் எழுத்தினை வாசித்து குறை நிறைகளை சொல்கிறார்கள். அது போதும். என் எழுத்தில் இப்போது இலக்கிய தரம் எழுத்து நடை நயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னை புறக்கணிக்கும் மனிதர்களிடம் சொல்ல நினைக்கும் ஒரு விஷயம்
I AM A RECLUSE AND I WON'T STOP WRITING

பின்குறிப்பு : இந்த கட்டுரை சுய எள்ளலா சுய விமர்சனமா சுய இரக்கமா என ஆராயாமல் ஆரம்பத்தில் முகம் பாரா நண்பனுக்கு என ஒரு பெயரினை இடுங்கள் கடைசியில் பெயரினை தேடிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் என போடுங்கள் சிறுகதை ரெடி!!!! எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சூப்பர் சகோ. வாழ்த்துகள்

Post a comment

கருத்திடுக