பிருஹன்னளை - இண்டலெக்சுவல் முகமூடி

சமீப காலமாக நான் அதீத சந்தோஷத்தினை உணர்கிறேன். அதற்கு காரணம் இருவர். ஹல்பின் ஃப்ரேசர் மற்றும் சூர்ய குமார். இருவரும் என் படைப்பில் இருந்த தவறினை சுட்டி எழுதியிருந்தனர். தவறுகளை சுட்டி எழுதியிருந்தவரை கண்டு நான் ஏன் சந்தோஷம் கொள்ள வேண்டும் என கேட்கலாம். அவர்கள் அப்படி செய்யும் போது தான் இந்த சமூகம் சார்ந்து எனக்கிருக்கும் பொறுப்புணர்வு அதிகம் ஆகிறது. அப்படி என்ன பொறுப்புணர்வு எனில் என் இணையத்திலிருந்து நல்ல கட்டுரைகள். நல்ல சினிமா மற்றும் நூல்களின் அறிமுகங்கள்.

சூர்ய குமார் செய்திருந்த விமர்சனம் உண்மையில் என்னை கவர்ந்தது. அவர் நான் அமடார் திரைப்படத்தினை திரை விமர்சனம் என்னும் பெயரில் செய்திருக்கும் கோல்மால்களை எடுத்து சொன்னார். ஏன் சுற்றி வளைத்து சொல்ல வேண்டும் என. உண்மையினை சொல்ல வேண்டுமெனில் சில நல்ல கருத்துகளை கண்டு மீள் வாசிப்பு செய்த போது எனக்கே என் எழுத்துகள் பிடிக்காமல் போனது அமடாரிலும் பரதேசி சார்ந்து நான் எழுதியதும். மாஸ்டர் என்னிடம் கேட்டான் பிடிக்கவில்லையெனில் அதனை எடுத்துவிடலாமே என. என் இணையதளம் எனக்கு ஒரு நூல். அங்கு எழுதபட்டது எதுவும் மாற்றப்பட முடியாது என்னும் தார்மீகமான கோட்பாட்டில் எழுதி வருகிறேன். மேலும் இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் எனக்கு திருப்தியினை அளிக்கும் வகையிலும் இனி இந்த தளத்தில் கட்டுரைகள் வரும்.

என்ன தான் இவர்களின் என் எழுத்துசார் விமர்சனங்களினை ரசித்தாலும் என்னை இன்டலெக்சுவல் முகமூடி அணிய யத்தனிப்பவன் என சொன்னது தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இந்த இண்டலெக்சுவல் என்னும் வார்த்தையினையே அடியோடு வெறுப்பவன் நான். இதன் ஒரு குட்டி எஸஸென்ஸ் தான் வரவிருக்கும் என் நாவல். நான் எனக்கு இதெல்லாம் தெரியும் என ஒருபோதும் என் எழுத்தின் மூலம் காட்ட மாட்டேன். ஆனால் நான் அறிந்து கொள்வதை வாச்கர்களுக்கு முடிந்தவரை புரிய வைக்க பார்ப்பேன். இரண்டிற்கும் அர்த்தம் வேறு என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

நாவலை பற்றி இது நாள் வரை சொல்லாமல் இப்போது சொல்லிவிட்டதால் அட்டைபடத்தினை இன்று அறிமுகபடுத்தலாம் என ஆசைபடுகிறேன். இன்னமும் எழுத்து பிழை வேலைகள் இருக்கிறது. இவ்வளவு ஏன் இந்த அட்டைபடத்திலேயே எழுத்துப் பிழை இரண்டு இடங்களில் இருக்கிறது. இருந்தும் பகிர வேண்டும் என்னும் ஆசை. பகிர்கிறேன். வாசகர்களுக்காக


இந்த அட்டைபடத்தினை நான் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அநேகம் பேர் பாராட்டினார்கள். இந்த அனைத்து பாராட்டுகளுக்கு சொந்தக்காரன் என் நண்பன் கமலக்கண்ணன். இந்த டிசைன் முடிவு செய்து வரைந்து இப்போது பதிப்பு வரை சென்றிருக்கிறது. இன்று ஏகப்பட்ட பேரை கவர்ந்திருக்கிறது. 

இப்போது அவனுடைய திறன் எனில் கூடிய சீக்கிரம் என் திறனையும் எழுத்துகளின் வாயிலாக அறிந்து கொள்வீர்கள். வெகு தூரம் இல்லை நாட்கள். . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக