கட்டுரைக்கு முன்

திரைப்படங்களுக்கு முன் சின்ன குறிப்பாக அப்படத்தினில் ஆபாச காட்சிகள் இருந்தாலோ வன்முறை காட்சிகள் இருந்தாலோ அல்லது அந்த சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல என போடுவார்கள் அதனை போல் நானும் இங்கே ஒன்றினை சொல்லி கட்டுரைக்குள் செல்கிறேன்.

நூறு கட்டுரைகளை தாண்டி கிமுபக்கங்களில் நான் எழுதியிருந்தாலும் காமத்துவ இலக்கியத்தினை பற்றி நான் எழுதவில்லை. இதுவரை எழுதுவதற்கு காமம் சார்ந்து எதுவும் இல்லையா என கேட்காதீர்கள். எத்தனையோ விஷயங்கள் நான் பார்த்து வந்த சினிமாக்களிலேயே இருக்கிறது. எழுதாததற்கு காரணம் கலாச்சார விழுமியங்கள். இந்த பயம் நிச்சயம் எனக்கு மட்டும் இல்லை என்னை போல வளரும் படைப்பாளிகளுக்கு நிச்சயம் இருக்கும். அதற்கு மூலக்காரணம் படைப்பு சமூகம் என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது எப்படி முடியும் ? சின்ன உதாரணம் நான் தி ரீடர் என்னும் படத்தினை சிலாகித்து எழுதியிருந்தேன். ஞாபகம் இருக்கும் என நினைகிறேன். அதில் வருவதில் முதல் முக்கால் மணி நேரத்தில் அரை மணி நேரமும் நிர்வாணமும் காமமும் தான். ஆனால் அந்த காமம் என் நண்பர்களிடம் காட்டப்பட்ட போது சுயபோகத்தினை தூண்டும் வண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

இது தான் தமிழகத்தின் fetish தன்மை. யாரும் இங்கிருந்து அல்லது இந்த வார்த்தையிலிருந்து தப்புவதில்லை. நான் குறிப்பாக ஆண்களையே சாடுகிறேன். இந்த வார்த்தையினை அநேகம் பேர் ஆபாசமான இணையதளங்கலில் பார்த்திருப்பீர்கள். ஆனால் யாருக்கும் இதன் தார்மீக அர்த்தம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி தெரிந்திருந்தால் இந்த பிடியிலிருந்து தப்பித்திருப்பீர்கள்.

அதே சமூக பயத்தில் தான் இந்த கோட்பாட்டினை என்னிடம் நேரில் சொல்லிய நண்பரின் பெயரினை குறிப்பிடாமல் சொல்கிறேன். இது காமம் சார்ந்த பதிவு என்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கிறேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்போகம் ஏற்படும் போது சில பொருட்கள் உதாரணத்திற்கு சில ரக ஆடைகள் இருந்தால் மட்டுமே அந்த உணர்வு ஏற்படும் எனில் அந்த நிலை அல்லது மனோதத்துவத்தின் பெயர் தான் fetish. இது ஒரு சைக்கோ வியாதி அதுவும் எல்லோரிடமும் இருக்கிறது என்பது என் கணிப்பு.

பொதுவாக படிக்கும் பருவத்தில் காண முடியும். சிலர் படிக்காமல் அப்படியே இருப்பார்கள் கேட்டால் எனக்கு மாடிப்படில உக்கார்ந்து படித்தால் தான் படிப்பு வரும் அங்க தம்பி விளையாடிகிட்டு இருக்கான் என. ஏதேனும் ஃபோன் காலிற்காக காத்திருப்போம் அது வந்துவிட்டால் அன்றைய நாள் நன்றாக இருக்குமே என. வராவிட்டால் மனம் அந்த காலிற்காக ஏங்கும். இது என் வாழ்விலும் நடந்தது.

பெயர் குறிப்பிட விரும்பவில்லை. என் நாவலினை வெளியிட பதிப்பகம் கிடைக்குமா என பிச்சைக்காரனை போல ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஆரணி டைம்ஸில் என் கட்டுரையினை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட என்னிடம் ஒருவர் அனுமதி கேட்டார். சரி என நானும் எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னேன். என் நேரம் அடுத்த மாதம் நான் எழுதிய அர்கோ வருவதாக இருந்தது. ஆனால் பொருளாதார பின்னடைவால் அந்த மாதம் வரவேயில்லை! சரி அது விடுங்கள். பத்திரிக்கைக்கு உதவியவர் ஆயிற்றே பதிப்பகத்திற்கு உதவுவார் என நினைத்து உதவி கேட்டேன். அவர் அலுவலக நேரங்களில் மட்டுமே அழைத்து கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் ஒரு பதிப்பகம் பிடித்து தருகிறேன் என்றார். நானும் தினம் தினம் காதலிக்கு காத்திருப்பது போல காத்திருந்தேன். இரண்டு நாளைக்குள் சொல்கிறேன் என்றார். இரண்டு நான்காயிற்று. நாமே அழைப்போம் என ஞாயிற்று கிழமை என்பதை மறந்து அழைத்து தொலைத்துவிட்டேன். இரண்டு முறை. அங்கிருந்து அழைப்பு வந்தது. பார்த்தால் அவருடைய மனைவி. கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். ஏன் திட்டுகிறார் என்பது மட்டும் தெரியவில்லை. இடையில் சொன்ன வசனத்தில் புரிந்து கொண்டேன். அவர் எனக்காக அதிகம் வெளியே சென்று நண்பர்களை பார்க்கிறாராம். அந்த நண்பருக்கு மனதளவில் நன்றி சொல்லி அதோடு முடித்துக் கொண்டேன். எங்கு பேசப்போய் உண்மையினை சொல்லி குடும்பம் பிரிந்து நமக்கு இது தேவையா ?

சரி விஷயத்திற்கு வருவோம் நான் செல்போனின் ஒரு அழைப்பினால் மனம் உடைந்து பல நாள் காணப்பட்டேன். இதன் மூலம் சொல்ல வருவது என்ன எனில் ஒரு உயிரற்ற பொருளின் மீது என் உயிருள்ள உணர்வுகளை அடகு வைத்து நிஜ வாழ்க்கையில் வாழ முடியாமல் தவித்து கொண்டிருக்கும் ஒரு உயிர். இது தான் பாலியல் வறட்சிகளுக்கு காரணம். நாம் பெண்களை போகத்தின் பொருளாக மட்டுமே பார்ப்பதால் காமத்தின் சார்பாக இருக்கும் உணர்வுகளை அதில் அடகு வைக்கிறோம்.

டெல்லி மாணவி கற்பழிப்பு நடந்து முடிந்து இதுவரை நம் நாட்டில் கற்பழிப்பே நடக்கவில்லையா ? ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் மேலே இருப்பது தான். ஆண்களை நான் தாழ்த்தியே பேசுவதால் அடியேன் பெண்ணியவாதி என எண்ணிவிட வேண்டாம். பெண்களிடம் குறையே இல்லையா ? இருக்கிறது ஆனால் அதன் காரணியும் ஆண்களிடம் தான் வந்து முடிகிறது. எந்த பெண்ணால் இலக்கியங்களில் ஓவியங்களில் இருக்கும் காமத்தினை அது தன்னுள் ஏற்படுத்திய அனுபவத்தினை வெளிப்படையாக சொல்ல முடிகிறது ? அப்படியே சொன்னாலும் காதுகளின்  மூலம் பரவி அவளுக்கு பிரத்யேக பெயரும் வந்துவிடுகிறது. இது தனக்கு தேவையா என சொந்த உணர்வுகளை அல்லது அனுபவங்களை பெண்கள் வெளிக்காட்டுவதில்லை. இது இன்று நேற்று நடந்திருந்தால் பரவாயில்லை பூச்சி மருந்தினை அடிப்பது போல் அடித்து இந்த உணர்வினை வேறருத்திருக்கலாம். காலங்காலமாக இது புழங்கி வருகிறது. கல்கியினை தெரிந்திருக்கும் அம்மாக்களுக்கு ஜி.நாகராஜனை தெரிவதில்லை.

இப்போது மேலே சொன்னதற்கு வருகிறேன். ஒரு படைப்பு எனில் அது ஒன்று சமூகத்தினை ஒத்தி இருக்க்க வேண்டும். அல்லது அந்த சமூகம் கொண்டுள்ள கோட்பாடுகளினை சிதைக்காமல் அதிலிருந்து மேம்படுத்தும் வகையில் ஒரு கருத்தினை முன்வைக்க வேண்டும். இந்த இரண்டு நிர்பந்தங்கள் கூட எதற்கெனில் இதனை ஒரு படைப்பு முழுமை செய்தால் மட்டுமே அந்த படைப்பு சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படும்.றைந்த முஸ்தீபு கூட எதற்கெனில் வாசகனின் வாசிப்பில் தான் ஒரு படைப்பு முழுமை அடைகிறது.

இந்த கோட்பாடுகளை உடைத்து எழுதப்படும் transgressive எழுத்துகள் எப்போதும் குறிப்பிட்ட வாசக சமூகத்தால் மட்டுமே கொண்டாடப்படுகிறது. எழுதப்படுபவன் என்றுமே அந்த சமூகத்தின் கலாச்சார எதிரி ஆகிறான்.

இந்த நீண்ட முன்னுரை எதற்கெனில் அடுத்து எழுத இருக்கும் இச்சமூகத்திற்கு புறம்பான கருவினை கொண்ட நாவலினை சிலாகிப்பதற்கு. இந்த கட்டுரையே உங்களுக்கு முகம் சுழிக்கும் வண்ணம் இருப்பின் அடுத்த கட்டுரையினை வாசிப்பதும் வாசிக்காததும் தங்களின் விருப்பமே. . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக