கதாரில் கடல்


கடல் படம் வந்து வெகு நாட்கள் ஆகிவ்ட்டது. அப்படத்தினை இச்சமூகம் புறக்கணித்து இயக்குனரிடம் பணம் கேட்டு நச்சரித்த விஷயங்களையும் படித்தாயிற்று. ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் நிர்மல் எழுதிய விமர்சனம் மிக வித்தியாசமாக இருந்தது. முதலில் அதனை பகிர்கிறேன் பின்னர் ஈர்க்கப்பட்டதன் காரணியினை சொல்கிறேன். அந்த பகுதிகள் - 

மில்டனின் பரடைஸ் லாஸ்ட்
 Paradise Lost அப்படிங்கிற ஆங்கில கிளாசிக் கவிதையில் இந்த லுசிபர் கதையை விரிவாக சொல்லிருப்பார்எங்க அப்பா / அம்மா அவர்கள் கல்லுரியில் படிக்கும்போது பாடமாக இருந்ததாம்அவர்கள்தான் எனக்கு இந்த கதையை சொன்னதுஅதாவது லுசிபர் எனும் தேவதை சாத்தானாக மாறிய கதையை.

லுசிஃபர்கபிரியல் மற்றும் ரஃபேல் இவர்கள்தான் கடவுளின் வான தூதர்கள்இவர்கள் கடவுளின் எல்லா படைப்புகளையும் பாதுகாத்து வந்தார்கள்இவர்களில் லுசிஃபர் மிகவும் திறமையும் அறிவும் அழகும் மற்றும் எல்லா ஆற்றலும் கொண்டவராக இருக்கிறார் (ள்). கடவுளின் அன்புக்கு பாத்திரமாக இருக்கும் லுசிபருக்கு அதனாலேயே பெறுமையும் செறுக்கும் வந்துவிடுகிறதுமேலும் கடவுளின் புதிய படைப்பான மனிதனின் மேல் கடவுள் காட்டும் கருணையும் அன்பும் பொறாமையை கொண்டுவருகிறதுஇப்படிபட்ட பலவினமான படைப்பாக மனிதனை படைத்ததில் உடன்பாடு இல்லாமல் போகிறது லுசிபருக்குஇப்படியாக பொறாமைசெறுக்கு,பெருமை குணங்களால் கடவுளின் சாபத்துக்கு ஆளாகி தேவலோகத்திலிருந்து துரத்தபட்டு உலகித்தில் தள்ளப்படுகிறார்நல்லது என ஒன்று மட்டும் இருந்த நிலையில் லுசிபர் கடவுளின் நன்மைக்கு எப்படி தீமை விளைவிக்கமுடியும் என யோசித்து கடவுளின் படைப்பான ஆதாம் மற்றும் ஏவாளிடம் பாம்பு வடிவில் தீமையை கொண்டுவருகிறார்கடவுளின் படைப்பு எவ்வளவு சாதாராணமானது என நிறுவுகிறார்இதுவே ஒரு நெடிய கதையின் ஆரம்பம்கடவுள் vs லுசிபர்சாத்தான்விளையாட்டு அதில் வெற்றி தோல்வி என செல்கிறது மனிதனின் கதைகடவுளின் எல்லா திட்டத்தையும் தோல்வியுற செய்கிறான் சாத்தான்மனிதனும் அதற்கு துணை போகிறான் அல்லது பலவினமாக இருக்கிறான்.
மனிதனின் மரணம் பற்றிய பயத்தில் வைப்பதுபாவத்திலிருந்து மீள வழி இல்லாமல் செயவது இதுவே சாத்தானின் செயலாக இருக்கிறதுமரணத்தை எப்படி மரணம் கொண்டு வெல்வதுபாவத்திலிருந்து எப்படி விபோசனம் கொடுப்பதுஅன்பின் கடவுள் மனிதனுக்கு தந்தது அவரின் ஒரே மகன்பாவத்தின் சின்னமான சிலுவையை கொண்டு பாவத்தை வென்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்மன்னிப்பு எனும் கருவியை கொண்டு பாவ விமோசனம் பெறுவதை மனிதனுக்கு தனது பாடுகளாலும் ரத்தத்தாலும் மரணத்திலிருந்து உயிர்தெழுதலாலும் சாத்தானை மீண்டும் வெல்கிறார் இறைவன்
லுசிபர் - அர்ஜீன்
இன்னோரு தேவதை ( ஓழுக்கம்கோவில்சேவைபிரசங்கம்அற்ப்பனிப்பு.....): அரவிந்தசாமி.
மனிதன் - தொம்மை
அன்பு / மண்ணிப்புகருனை/இயேசு : கதா நாயகி.

சரியா ?
இந்த கேள்வியுடன் தான் அவரும் முடித்திருக்கிறார். நான் கரு சார்ந்து எழுதாமல் இருப்பதற்கு காரணமும் இது தான். சமீபத்தில் சாரு நிவேதிதா எழுதிய பரதேசி படத்தின் விமர்சனமும் கரு சார்ந்தது தான். கருவினை சார்ந்து எழுத யத்தனிக்கும் போது நமக்கு அந்த கரு சார்ந்து எழுதபட்ட இலக்கியங்களிலிருந்த் சமகால இலக்கியம் அறிவு தேவை. காரணம் இ ங்கு ஒப்பனைகள் விமர்சனங்களில் பிரதானமாகிறது.

ஒப்பனைகள் செய்வது தவறு தானே என நானே சொல்வேன். ஆனால் ஒரு கலைபடைப்பினை அளிக்க நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது ஒப்பனைகள் தான். சில நேரங்களில் நமக்கே தோன்றும் அவன் செய்ததை காட்டிலும் நாம் செய்தது நன்றாக இருக்கிறது ஆனாலும் ஏன் அவனுக்கு மட்டும் விருது ? ஆக ஏதோ ஒன்று குறைகிறது. அந்த ஒன்றினை அவனிடமிருந்து நாம் கற்க வேண்டும். அதனை வளரும் கலைஞர்களுக்கு சொல்வது தான் விமர்சனங்கள். இதனால் தான் நான் எழுதுவதை விமர்சனம் என சொல்ல மறுக்கிறேன். நான் எழுதுவது என் ரசனை சார்ந்த குறிப்புகள்.

மேலே எழுதபட்டிருக்கும் நிர்மலின் விமர்சனம் இதுவரை நான் வாசித்த கடல் சார்ந்த விமர்சனங்களில் சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் தான் சின்ன பகிர்வு. அடுத்து பரதேசி சார்ந்து என் பகிர்வு. . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக