புதிய அடையாளம்

நான் தொடர்ந்து என் பிரதியினை பத்திரிக்கையில் வெளியிட முயற்சியில் இருந்து வந்தேன். திருவாரூரில் கூட என் கதை வெளி வந்தது. என்ன விஷயமெனில் அதனை நான் இதுவரை பார்த்ததேயில்லை! கிடைக்கும் போது அதனை பதிவேற்றம் செய்கிறேன்.

இப்போது இந்த விஷயம் பற்றி சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. ஃபேஸ்புக்கில் எனக்கு ஏதேனும் குறுந்தகவல் வந்தால் குறுந்தகவல் வந்திருக்கிறது என ஒரு தகவல் என்னுடைய மொபைலுக்கு வரும். ஆனால் அது யார் அனுப்பியது என வராது. அதில் ஒரு அலைபேசி எண்ணும் மிக அவசரம் அதனால் அழையுங்கள் என போட்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியாமல் அழைத்தால் தங்களின் கட்டுரையினை ஒரு சிறுபத்திரிக்கையில் வெளியிடலாமா என கேட்கவே அனுப்பியிருந்தேன் என்றார். இது என்ன கேள்வி ? அப்படியே கேள்வியானாலும் வேண்டாம் என யாராவது சொல்வார்களா ? அதிலும் அவர் குறிப்பாக ஒன்றினை சொல்லி கேட்டார் - 50000 பிரதி சுற்றில் இது இருக்கிறது என. இதற்கு மேல் வேண்டாம் என சொல்வேனா ? அதன் விளைவு தான் கீழே இருப்பது -இந்த ஹாரி பாட்டர் சம்மந்தமான கட்டுரையினை நான் பதிவேற்றி ஃபேஸ்புக்கில் லிங்கினை கொடுத்தவுடன் ஒரு அன்பர்(பெயர் மறந்துவிட்டேன்) எப்படி ஹாரி பாட்டரினை பழி வாங்கும் கதை என சொல்லலாம் என்றார். அதற்கு நான் சொன்ன பதில் முதல் மூன்று பாகத்தினை மட்டுமே பார்த்த ஒருவனின் எழுத்துகள் இப்படி தான் இருக்கும் என்பதே. கட்டுரை வெளிவந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. அதனை வெளியிட உதவியாய் இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இதில் எனக்கு கிடைத்த புதிய அடையாளம் - கி.மூ.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக