குருக்ஷேத்திரம்

சென்னையினை பற்றி எனக்குள் இருக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த இரண்டு நாட்களில் அப்படியே மாறிப்போனது. அது என் நேரமா அல்லது நான் வந்த நாட்கள் பிசி இல்லாத நாட்களா எனத் தெரியவில்லை. இதற்கான காரணம் இரண்டு நாட்களும் நான் சென்ற இடங்களிலெல்லாம் டிராஃபிக்கே இல்லை என்பது தான்.

நான் சென்னைக்கு சென்றதன் காரணம் கிண்டி கேம்பஸில் ஒரு விரிவுரையினை கேட்க. அதனை தனிப்பதிவில் இடுகிறேன். இப்பதிவில் என் நண்பர்கள் என்னுடன் பகிர்ந்ததை சொல்ல இருக்கிறேன். கிண்டி கேம்பசில் வருடா வருடாம் நடக்கும் ஒரு விழா இந்த குருக்ஷேத்திரா. இது மூளைக்கான ஒரு போர் என்னும் வசனத்துடன் அரங்கேற்றப்படுகிறது. இங்கே பொறியியல் படிப்பவர்களுக்கு போட்டிகளும், குறிப்பாக அவர்கள் படிக்கும் தொழில்சார் போட்டிகளும் அதன்பின் workshop களும். இந்த இரண்டாவதை எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் சில பிரச்சினைகளும் முளைத்தது.

என்னுடைய சோம்பேறி தனத்திலும் காலந்தாழ்த்தப்படதாலும் அதனை தவற விட்டுவிட்டேன். மேலும் என் நண்பன் ஒருவனுக்கோ கதை வேறு மாதிரி இருந்தது. அவன் எனக்கு முன்பே அதனை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறான். ஆனால் பதிவு ஆகவில்லை. கிண்டியில் இருக்கும் பல்கலைகழகத்தினை அழைத்து கேட்டால் தொழில்நுட்பக்கோளாறு என்றிருக்கிறார்கள் அதன் பின்னே தான் அவனால் பங்கேற்க முடிந்தது.

சரி விஷயத்திற்கு வருவோம். நான் என் இரு நண்பர்களுடன் அங்கு இருந்தேன். ஒருவன் ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் படிப்பவன். அவன் air crash investigation workshopக்கு வந்திருந்தான். ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது எனில் அதனை எப்படி ஆனது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பர் என்று மூன்று நாட்கள் வகுப்பு. இன்னுமொரு நண்பன் சிவில் தொழில்நுட்பம் படிப்பவன். அவன் எந்த workshop க்கு வந்தான் என்பது நினைவில்லை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்த விஷயங்கள் இந்தியா தொழில்நுட்ப ரீதியில் முன்னேறுகிறது என்னும் என் சிந்தனையினை சற்று ஆட்டிப்பார்க்கிறது.

முதலில் விமானத்திற்கு வருவோம். இதனை நான் இணையதளத்திலெதுவும் தேடவில்லை. அவன் சொன்னதை அப்படியே பகிர்கிறேன். ஒரு விமானம் தரையிரங்கும் போது அந்த ஒட்டப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் வரையப்பட்டிருக்குமாம். அது இரண்டு கோடுகள் இருந்தால் அந்த ஓட்டப்பாதை 2000 மீட்டரே. அதே மூன்று இருப்பின் 500 மீட்டர். மங்களூரில் இரண்டு கோடுகளே போட்டிருக்க வேண்டும் ஆனால் போடப்பட்டிருப்பதோ மூன்று. மேலும் இந்த விஷயத்தினை கண்டறிந்தவர்களால் மேலிடத்தில் கொண்டு சேர்க்க முடியவில்லையாம்!

சிவில் நண்பன் சொன்ன விஷயம் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்தது. நாம் வீடு கட்டுகிறோம் எனில் கம்பிகள் மூலமாக பீம்களை எழுப்புகிறோம் அல்லவா அது கூடவே கூடாதாம். அப்படி எழுப்புவதால் தான் பூகம்பத்தினை தாக்கு பிடிக்க முடியவில்லையாம். தென் அமேரிக்க நாடுகளை அவனுக்கு எடுத்த ஆசிரியர் உதாரணம் சொல்லியிருக்கிறார். அங்கு மணல்களையும் சிமெண்டுகளையும் மட்டுமே உபயோகிக்கிறார்கள். அதுவும் மணல் எங்கிருந்து எடுக்க வேண்டும் எனவும் ஒரு வரைமுறை இருக்கிறது. பூமியின் மேலிருப்பது முதல் தளம். புற்கள் இருப்பது என எடுத்துக் கொள்வோம். அதற்கடியில் வேர்கள் இருக்கிறது. இது இரண்டாவது தளம். அதற்கும் கீழ் இருக்கும் மூன்றாம் தள மணலையே எடுத்து கட்ட வேண்டுமாம். அதிலும் முக்கிய விஷயம் சிமெண்டினைவிட மணலே அதிகம் இருக்க வேண்டுமாம். நமது தமிழகத்தில் இது சாத்தியமா ? இந்த கேள்வியினை கேட்டவுடன் அவர்களிடம் பதில் இல்லை! தென் அமேரிக்க நாடுகளிலோ மணல் தான் மலிவு விலையாம்!

மேலும் இவ்விருவர்களும் ஆச்சர்ய பட்டது இவர்களுடன் படித்த மாணவர்களை கண்டு தான். அவர்கள் அனைவரும் ஐபாட் ஐஃபோன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு கேள்விகளை எழுப்புகிறார்கள் கேட்பதனை சந்தேகங்களை தேடுகிறார்கள். இந்த ஆச்சர்யம் எனக்கும் இருந்தது. எங்களைப் போன்ற மாணவர்களுக்கு இது போன்ற இயந்திர விழாக்கள் ஒரு அறிமுகம் அவ்வளவே.

இதற்கு சிறந்த உதாரணம் அங்கு எங்களுக்கு கிடைத்த ஒரு நண்பர். அவரும் சிவில் சம்மந்தமாக வந்திருந்தார். அவர் புவியியலை பற்றி அத்தனை விஷயங்களை சொன்னார். அதிலும் முக்கியமாக பெர்முடா முக்கோணத்தினை பற்றி. இந்த முக்கோணத்த்னை கடக்கும் எப்பேர்பட்ட பொருட்களையும் உள் இழுத்துக் கொள்கிறதாம். இதற்கான காரணம் என்ன என அறிய பல விஞ்ஞானிகள் முயற்சியில் இருக்கிறார்கள். ஒருவர் மட்டுமே அந்த முக்கோணத்தின் வீச்சிலிருந்து தப்பித்திருக்கிறார். அங்கு காலம் ஒரு புதிராகிவிடுகிறது என சொல்லியிருக்கிறார். அவருடன் நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். போன நேரமே தெரியவில்லை.

ஆனால் அவர் பேசும் போதே வருத்தத்தின் வாடை வீசிக் கொண்டே இருந்தது. அதன காரணத்தினையும் அவர் சொன்னார். அது அவருக்கு மட்டுமல்ல. எங்கள் மூவருக்கும் இருந்தது. அது பகிர்வதற்கு ஆள் இல்லாததே. நாங்கள் மூவரும் எந்த பொறியியல் படிக்கிறோமோ அதிலேயே எங்கள் ஆசையும் எண்ண ஓட்டங்களும் இல்லை. இதனை வெளியில் சொன்னால் அதனை கேட்பவர்கள் எங்களை பைத்தியக்காரர்கள் என சொல்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் இந்த குரூர மனப்பான்மை தொடர்ந்தே வருகிறது. அது மனதளவில் ஏற்படுத்தும் வதையினை நம்மால் என்றும் சிந்திக்கக்கூட முடியாது. அப்படி தனித்து விடப்பட்ட சிந்தனையாளர்களுக்கு இது போன்ற விழாக்கள் உண்மையில் வரப்பிரசாதம். என்னை தொடர்ந்து வாசிக்குமன்பர்களிடம் இந்த கேள்வியினை நான் முன்வைக்கிறேன் - நான் எங்கே போவது ?

இது மூளைகளின் போர் என்பதால் இந்த விஷயத்தினையும் சொல்ல விரும்புகிறேன். ஆட்டோமொபைல் படிப்பவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவ்வளவு அழகு அவனுக்கு. சிறுவன் தான். ஆனால் ஒன்றுமே பேசவில்லை. கேள்விகள் கேட்டாலும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவன் அம்மா சாப்பிடும் போது அவனிடம் தோசையினை கொடுத்து எனக்கு கொடுக்க சொன்னார். அப்போது அம்மா சொல்லும் வார்த்தைகளை அச்சு பிசகாமல் அப்படியே சொல்வான். நண்பனிடம் கேட்ட போது அவனுக்கு இருக்கும் பிரச்சினையினை Autism என்றான். அப்படியெனில் ஏதாவது கேள்வியினை அந்த சிறுவனை பார்த்து கேட்கிறோம் எனில் அவனுக்குள் பதில் சொல்லிவிடுவான். என்ன அதனை வெளியில் சொல்ல முடியாது. பாவம் தினம் தினம் அவன் அம்மாவும் அவனுடன் போராடிக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் குணமாக நான் இயற்கையினை பிரார்திக்கிறேன்.

அங்கிருந்து கிளம்பும் போது ஏதேனும் கதை அவனுக்கு சொல்ல வேண்டும் என தோன்றியது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக