harry potter and the prizonar of azkaban

இந்த ஹாரி பாட்டரின் தொடர் நான் பள்ளியில் படிக்கும் போதே ஆரம்பித்து பள்ளியிலேயே முடிந்துவிட்டது. அதனை பள்ளியில் இருக்கும் பொது ஒரு முறை கூட பார்த்ததில்லை. ஒரு எலக்காரம் தான். அது குழந்தைகள் படம் தானே அதனையெல்லாம் போய் பார்க்க வேண்டுமா என்று. இதனை பெரிய தவறு என்று இப்போது தான் உணர்கிறேன். அதுவும் குறிப்பிட்டு harry potter and the prizonar of azkaban ஐ பார்த்த போது தான்.

நான் ஏதோ பெரியவன் போல பெரியவர்களின் படத்தினை மட்டுமே பார்ப்பேன் என திரிந்து கொண்டிருந்தேன். ஆனால் திரைத்துறையில் அரிய வகை அதிசயங்கள் இருப்பதை உணர்ந்த பின் தான் இந்த ஈகோவினை விட்டெறிந்தேன். அதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த ஹாரிபாட்டர்.

எழுத்திலிருந்து திரைக்கு வந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. எழுத்தில் ஏழு பாகங்களும் படத்தில் எட்டு பாகங்களும் வந்தது. எழுத்தில் இருக்கும் கடைசி பாகம் மட்டும் இரண்டாக திரையில் எடுத்தனர். அதில் நான் முதல் மூன்றினையே பார்த்திருக்கிறேன்

முன் காலத்தில் பஞ்சதந்திர கதைகள் இருந்ததை கேட்டிருப்பீர்கள். அது ஏன் தோன்றியது எனில் போதனைகளை குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் எடுத்து செல்ல ஒரு வழி. அந்த கதைகள் எதற்கு எனில் நல் கருத்துகளை அவர்களிடம் அழகுற பதிய வைக்கவே. இக்காலத்திலும் தூங்கும் நேரத்திலும் கே.ஜிக்களிலும் இது பாடமாகவும் பொழுது போக்காகவும் இருக்கிறது. சிறுவர் என்னும் பருவத்தினை அடையும் போது அவர்கள் கவனம் தொலைக்காட்சிகளிலும் விளையாட்டுகளிலும் செல்கிறது. இந்த விளையாட்டு இன்று நிறைய இடங்களில் உள்விளையாட்டாகவே அமைகிறது. அதற்கான மூலக்காரணம் அந்த இடத்தினை தொலைக்காட்சி எடுத்துக் கொண்டதே. அப்படி இருக்கையில் இது போன்ற படங்கள் அந்த பஞ்சதந்திரங்களினை எடுக்கிறது என்பதே என் எண்ணம் .

ஹாரிபாட்டர் பஞ்ச தந்திரங்கள் போன்ற படமா ? ஆம். இக்கதை குழந்தைகளும் சிறுவர்களும் பள்ளிகளில் எப்படி இருக்க வேண்டும் என அழகாக வித்தியாசமாக சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் அதிகம் கவனம் செலுத்த நினைக்கவில்லை. அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

இதில் திரைத்துறை சார்ந்த சிறப்பு அம்சம் என்ன இருக்கிறது என பார்த்தால் மூன்றாம் பாகத்தில் இருக்கிறது. இதில் கதை என்பது ஒரே வரி தான். மூன்றாம் பாகத்திற்கு அல்ல ஒட்டு மொத்த ஹாரிபாட்டருக்கும். பாட்டரின் அப்பா அம்மாவினை கொன்றவன் வோல்ட்மார்ட் அவனை பழிவாங்குவதே கதை. இதற்குள் நடக்கும் கதைகளே பாகங்களாக வருகிறது.

எழுத்தில் பிரதிக்குள் பிரதி என்று சொல்வார்கள். அதே போல் தான் இது. அவன் அம்மா அப்பாவின் மரணம் ஒரு மர்மம். அதனை விடுவிப்பது தான் முக்கிய கதைக்குள் இருக்கும் கதைகள்.

முதல் பாகம் - harry potter and the philosopher's stone. வோல்ட்மார்ட்டிற்கு உருவம் கிடையாது. அதனை பெறுவதற்கு இந்த philosopher's stone ஐ பயன் படுத்த நினைக்கிறான். இதனை ஹாரி எப்படி முறியடிக்கிறான் என்பது அதன் கதை.

இரண்டாம் பாகம் - harry potter and the chamber of the secret. தலைப்பிலேயே ஒரு ரகசியம் இருக்கிறது. அதனை கண்டுபிடிப்பது தான் இதன் கதை.

மூன்றாம் பாகம் இந்த வழியில் செல்லும் கதையினை அப்படியே மாற்றி ஒரு புது கதை எழுகிறது. இந்த படத்தினை பார்க்கும் போதே இது நாவலில் இருந்து எடுக்கப்பட்ட படம் என்பதை மறந்துவிட்டேன். இந்தப்படம் அப்படியே குழந்தைத் தனம் என்னும் தளத்திலிருந்து தகர்ந்து நின்றது. அதுவும் முக்கியமாக திரைக்கதையின் அமைப்பில். முதல் இரண்டு பாகங்களும் சில திகில் திருப்பங்கள் வைத்திருந்தாலும் அதனை அவ்வளவு தூரம் காட்டாமல் அப்படியே சாதாரண கதையினை போல் செல்லும். அதே இந்த மூன்றாம் பாகத்தில் என்னை ஒரு விஷயம் கவர்ந்தது. வீக்கிபீடியாவில் தேடிய போதும் முதல் இரண்டு பாகங்களை ஒருவரும் மூன்றாம் பாகாத்தினை வேறு ஒருவர் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.


என்ன எனில் திரைத்திறமையுடன் மேஜிக்கினை இணைக்கும் விஷயம். ஆம் ஒரு காட்சி நிகழ்கிறது. அந்த காட்சியினை கதைக்குள் இருக்கும் மேஜிக்கினை வைத்து மீண்டும் சென்று அதனை பார்க்கிறார்கள். இது தான் அந்த காட்சி. இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஒரு காட்சி சில மர்மங்களுடன் நிகழ்ந்திருக்கிறது. அந்த மர்மம் என்ன என அவர்களுக்கும் பார்வையாளனான நமக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த காட்சியினை அவர்கள் தங்களுக்கு தெரிந்த மாயாஜாலங்களை வைத்து மீண்டும் விசாரணை செய்கின்றனர். அதில் தான் நமக்கும் படத்தின் நாயகர்களுக்கும் உணமை தெரிகிறது. அந்த காட்சியில் உண்மையில் பிரமித்தே போனேன்.

பொதுவாக நமக்கு இந்த ஃப்ளாஷ் பேக் என்னும் விஷயம் அதிகம் தெரியும். ஆனால் இப்படத்தில் அந்த விஷயத்தினை மேஜிக்குடன் இணைத்து முழுதும் வித்தியாசமாக வைத்துள்ளனர்.

அதைவிட என்னை இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம் இதில் உபயோகப்படுத்தும் விஷயம் அந்த மந்திர வார்த்தைகள். இரண்டினை மட்டும் தான் நான் கூர்ந்து கவனித்தேன். ஒன்று arest momenta மற்றொன்று bombarda. இதனை கொஞ்சம் நன்கு கவனியுங்கள் முதலில் இருப்பது momentum(உந்தம்) என்பதை குறிக்கிறது. இது கதையில் ஹாரிபாட்ட்ர் வானிலிருந்து கீழே விழும்போது காப்பாற்றப்படும் நேரத்தில் சொல்லப்படும் வார்த்தை. அந்த உந்தத்தினை நிறுத்த அவர்கள் இதனை சொல்கின்றனர். அடுத்து bombarda இது அதிருதலினை குறிப்பது. நாயகி கதவினை உடைக்க இதனை உபயோகிப்பாள். இப்போது சம்மந்தம் படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பது என் முழு கருத்து.

உன்னிப்பாக கவனித்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கிறது. ஆனால் அந்த கவனிப்பதில் தான் அனைத்தும் இருக்கிறது!

என்னைப்போல் பார்க்காமல் இருந்தால் அந்த ஈகோவினை புறந்தள்ளி ஹாரி பாட்டரினை பாருங்கள். ஹாரிபாட்டர் மட்டுமல்ல ஒரு படத்தினை பார்க்காமல் அடுத்தவர்களின் பேச்சினாலோ ஈகோவினாலோ புறக்கணிக்காதீர்கள். அப்படி தான் செய்தேன். இப்போது வருத்தப்படுகிறேன்.

Share this:

CONVERSATION