விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்

இப்போதைக்கு இருக்கும் மிகப்பெரிய புள்ளி(hot news) கமல்ஹாசன் தான். எங்கு நோக்கினும் எந்த தொலைக்காட்சியினை பார்த்தாலும் விஸ்வரூபம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கிறது. வருவது அனைத்தும் தடைகள் மட்டுமே.

விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்கள் அதீதமாக கிண்டலாகவும் சீரியஸாகவும் எழுந்த வண்ணமே இருக்கிறது. அவரது பிரதான கனவான டி.டி.எச் எதிர்ப்பு அடுத்து இந்த முஸ்லீம்கள் எதிர்ப்பு. இந்த எதிர்க்கும் முஸ்லீம்களை நான் மனதார எதிர்க்கிறேன். இந்த சமூகம் கலை என்பதன் அம்சத்தினையே இழந்துவிட்டது. சமீபத்தில் Les Misérables என்னும் படத்தினை பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அளிக்கப்பட்ட டிக்கெட்டில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் அனுமதியில்லை என்பதை கண்டவுடன் நான் சந்தோஷமே பட்டேன். காரணம் அந்த படத்தில், அந்த கதைக்கான அம்சத்தினை சிதைக்காமல் பார்வையாளனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இதன் மூலம் சொல்ல வரும் விஷயம் மிகவும் சின்னது. படைப்பாளிக்கு எந்த ஒரு எல்லையும் இல்லை அல்லது இருத்தல் கூடாது. தணிக்கை என்னும் விஷயம் இலக்கியம் என்னும் அம்சத்திற்கு இல்லை என்பது மிக முக்கிய கருத்து.  திரை சார்ந்த விஷயத்திற்கு தான் இருக்கிறது. இதை இப்போது கூட புதிய தலைமுறையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாம் திரையின் அடிமைகளாய் இருக்கிறோம். திரைத்துறை ஆகட்டும் இலக்கியமாகட்டும் அது ஒரு கலை என்பதை நாம் நினைப்பதே இல்லை. ஒரு ஊனத்தினை வைத்து கிண்டலடித்து எடுக்கப்படும் போது அதை கெக்கலி இட்டு சிரிக்க மட்டுமே நமது திரைத்துறை கற்றுக் கொடுக்கிறது. 

இப்ப்டம் பற்றி ஒல்ல வேண்டுமெனில் உலக சினிமாக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது உலக சினமா ரசிகர்களின் முதல் வாதம். ஒன்று ஐரோப்பிய சினிமாக்கள் மற்றொன்று ஹாலிவுட் சினிமாக்கள். இதில் நாம் இரண்டும் விட மட்டமான ஒரு நிலையில் இருக்கிறோம். முக்கால்வாசி திரைப்படங்கள் ஹாலிவுட் பாணியினை பின்பற்றுகிறது. இதைக்கூட ஏதோ ஒரு பதிவில் நான் வாசித்திருக்கிறேன். இந்த கூற்று முழுக்க முழுக்க தவறு. நாம் பாணியினை எடுப்பதில்லை கதைகளை மட்டுமே எடுக்கிறோம். நமது சினிமா உலக அரங்கினை எட்டாமல் இருப்பதற்கு காரணமும் இது தான். அப்படியிருக்கையில் இப்படத்தில் கமல்ஹாசன் ஹாலிவுட் பாணியினை கையாண்டிருக்கிறார். முக்கியமாக இசையிலும் ஒளிப்பதிவிலும். நமக்கோ அது எதுவும் தேவையில்லை. கலையாகினும் யாதாகினும் அது சமூகத்துடன் ஒன்றி காட்டு மிராண்டித்தனமாக இருக்க வேண்டும் என்பதே என் அம்மா உட்பட அனைவரின் கருத்தாக இருக்கிறது.

மேலும் அநேகம் பேர் படத்தினை பார்க்காமலேயே எதிர்க்கிறார்கள். இந்த பூர்ஷ்வா மனோபாவத்தினை என்ன என சொல்வது. நமது நாடு பல்வேறு மதங்களினால் பிளவுபட்டு இருந்தாலும் தேசியத்தினால் ஒன்று என்னும் கூற்றினை முதலில் விட்டெறியுங்கள். தசாவதாரம் படத்தில் ஒரு வசனம் வரும் - மதநெறி மதவெறி ஆனது என. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இப்போது தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்கள் தான். திரைப்படம் என்பது பொழுதுபொக்கு அம்சத்தினை தாண்டி சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த விஷயம். காரணம் நமது நாட்டினை கலையின் சார்பாக முன்னிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஓவியம் இலக்கியம் திரை போன்றவற்றினை சார்ந்து இருக்கிறது. இங்கோ அது நடப்பதற்கு சிறிது வாய்ப்பு கூட கிடையாது.

இப்போது நான் அரசிடம் செல்கிறேன் என கமல்ஹாசன் எடுத்திருக்கும் முடிவினை நான் முழுதும் ஆதரிக்கிறேன். மேலும் எதிர்ப்பாளர்களிடம் இந்த சமூகம் வைக்கும் ஒரு கேள்வி தணிக்கைத் துறை தீர்மானித்து வெளியிடும் அளவு வந்த பின் போராடுவதால் தணிக்கைத் துறையினை தவறு என்கிறீர்களா ? இதற்கு பதில் எங்கேனும் எனக்கு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன். உலக சினிமாக்களுடன் பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஒப்பிடுவது எதற்கு என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டேன். அங்கே கலை சிதைக்கப்படுவதில்லை. பார்வையாளன் எச்சரிக்கப்படுகிறான்.

கமல் துணிந்து திரையரங்குகளே வேண்டாம் என்னும் முடிவினை எடுக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில். இது மிகவும் முரண்பட்ட விஷயம். இருந்தாலும் அப்படி எடுத்தால் தான் நாம் கலை என்னும் விஷயத்தில் எப்படி இருக்கிறோம் என்பது போராட்ட வெறியர்களுக்கும் சாமான்யனுக்கும் தெரியும். இது என் சாத்தியமற்ற ஆசை. கடைசியாக முகநூலில் அகநாழிகை பொன் வாசுதேவ என்னும் என் நணப்ர் ஒருவர் ஷேர் செய்த பதிவினை நான் இங்கே கட் பேஸ்ட் செய்கிறேன் -

படம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .
துப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .

கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .

அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .

கதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .

இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .

கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிர்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .

அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .

இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொடிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.
தன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அடையும் தவறாக சொல்லமுடியாது .

கடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு
விட்டோம் .

நான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது

நன்றி - Farouk Mohamed

அப்படியே இந்த லிங்கினையும் வாசித்துவிடுங்கள் - http://en.wikipedia.org/wiki/Traitor_(film).

மேலும் இந்த படத்தில் எந்த காட்சியும் எடுக்காமல் வெளிவர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே கமலின் போராட்டம் முழுமை அடையும். கமல் கதைகளை திருடுகிறார் போன்றவற்றையெல்லாம் வாசித்து எனது ரசிகத்தன்மையினை குறைத்துக் கொண்டேன். இந்த படத்திலும் திருட்டு சமாச்சாரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு தொலைதொடர்பு போராட்டமும் கலை என்பது மதசார்பற்றது என்பதையும் இப்படம் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால் காட்சி நீக்கப்படாமல் வந்தால் நிச்சயம் நான் கமல்ஹாசனின் ரசிகன் என மார்தட்டிக் கொள்வேன். மக்களுக்காக கதையினை கதையமைப்பினை ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக காட்சிகள் நீக்கப்பட்டால் நிச்சயம் வருத்தமும் கமல்ஹாசனின் மீது வெறுப்பும் எனக்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில். இருந்தாலும் முன்முடிவுகள் மனிதனின் இயல்பு தானே.


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக