கமலஹாசனும் அடியேனும்

ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தினை வாசகர்களுக்கு தெரிவு படுத்தி விடுகிறேன். இத்தலைப்பு அழகாக இருக்கிறது மற்றும் சின்ன வகையில் இப்பதிவுடன் தொடர்பு இருக்கிறது என்பதனால் மட்டுமே அதனை இட்டுள்ளேன். அதனை தவிர எனக்கும் கமலஹாசனுக்கும் எவ்வித சமாச்சாரங்களும் இல்லை. இது ஒரு உளவியல் சார்ந்த கட்டுரை.

இக்கட்டுரையினுள் செல்வதற்கு முன் எனக்கும் என் நண்பரான ராஜேஷ் என்பவருக்கும் நடந்த உரையாடல் ஒன்றினையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில் தி சண்டே இந்தியன் என்னும் பத்திரிக்கையில் வெளிவந்த விஸ்வரூபம் என்னும் திரைப்படத்தின் கதை கருவினை ராஜேஷின் நண்பரொருவர் அவரின் பேஸ்புக்கின் டைம்லைனில் ப்திவு செய்து இது எந்த படத்தின் காப்பி கண்டுபிடிங்க என சவால் விட்டுள்ளார்


  
Rajesh Da Scorp இப்ப ஒன்யும் பண்ண மாட்டேன்படத்தை எப்படியும் பார்ப்பேன்லஅப்போ சொல்லுறேன் (ஆனா படத்தில கதக் ஆடுற கமல் கெட்டப் (மட்டும்எனக்கு புடிச்சிருக்கு) :-)                                                                                          

கிருஷ்ண மூர்த்தி என்ன தான் ரஜினி ஃபேனா இருந்தாலும் இத்தனை கொலைவெறி எதற்குதனிப்பட்ட ரசனைப் பகையா?ரஜினி ரசிகன் என்பதாலா?கலைஞன் என்பதாலா?
Rajesh Da Scorp ‎கிருஷ்ண மூர்த்தி - நான் ரஜிசி ஃபேன்னு கண்டுபுடிச்சிட்டீங்க... அப்புடியே இன்னொரு விஷயத்தையும் நீங்களே கண்டுபுடிக்குறதுக்கு முன்னால சொல்லிடுறேன்... கமல் என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பாரு... என்னோட பணத்தை களவாண்டு ஓடிட்டாரு.. அதான் கொலைவெறி.... :-) ஏங்க.. என்ன கொடுமை இது..எங்கிருந்து இப்புடியெல்லாம் //தனிப்பட்ட ரசனைப் பகையா?ரஜினி ரசிகன் என்பதாலா?கலைஞன் என்பதாலா?// . . இனிமே நோ ஜஸ்டிஃபிகேஷன்ஒன்லி அட்டாக்கிங்

இதனை தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துள்ளது. முதலில் ராஜேஷினை பற்றி கூற வேண்டும். கருந்தேள் கண்ணாயிரம் என்னும் பெயரினில் இணையதளத்தினில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல பதிவர். இவர் பொதுவாக சினிமா விமர்சனம் எழுதுபவர். எனக்கு இவரின் விமர்சனம் படித்தலே உலகினை உலக சினிமாவினை அனுபவித்தது போல் இருக்கும். அவரின் இணையதள முகவரி -www.karundhel.com. இதில் சென்று வாசித்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட விவாதம் சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டோம் என்ற அளவிலேயே ஆரம்பத்தினில் கணக்கிட்டேன். ஆனால் எனக்கு ஒரு விஷயம் பெரிய கேள்விக் குறியாக இருந்தது. அது ஏன் இவர் கமலஹாசனை எதிர்ப்பதில் குறியாக இருக்கிறார். நாங்கள் இருவருமே சாருவின் ரசிகர்கள். அவர் பல புத்தகங்களில் கமலஹாசனின் படைப்புகள் குப்பை என்று எழுதியுள்ளார். [நம்பிக்கை இல்லையென்றால் அவர் எழுதிய சினிமா:அலைந்து திரிபவனின் அழகியல் என்னும் புத்தகத்தினை வாசித்து பாருங்கள்] இதில் பெரிய முரண் நான் கமலின் ரசிகன் அவரோ ரஜினியின் ரசிகன்.
எனக்கு கமலஹாசனின் திரைப்படங்களை அவரின் கதைக்காகவே பார்ப்பேன். அவரின் ஒவ்வொரு கதையும் மற்ற திரைக் கதைகளை விட மாறுபட்டு நிற்கும். நான் பார்க்கும் கமலின் படங்களில் குறைகள் இருந்தாலும் குறைந்தது மூன்று முறை பார்த்து விடுவேன் . அது ஒரு போதையினை போல் ஆகிவிட்டது. உன்னை போல் ஒருவன் வரும் நேரத்தில் அது வெளியாவதற்கு ஒரு தினம் முன்பு நஸ்ருதின் ஷா நடித்த எ வெட்னஸ்டே படத்தினை பார்த்துவீட்டு சென்றேன். இருந்தும் இன்றுவரை உன்னைப் போல் ஒருவனை பதினோரு முறை பார்த்திருக்கிறேன்(என்னை போல் ஒருவனை பார்த்ததில்லை என கூறுவது கேட்கிறது).

அப்படியிருக்கும் எனக்கு இப்படியொரு நண்பரா. அதுவும் பிரபல பதிவர் வேறு. நிச்சயம் ஏதாவது கமலினை பற்றி எழுதியிருப்பார் என்றெண்ணி அதனை தேடி அவரின் வலைதளத்திற்கு சென்றேன். அங்கு தான் மனதினை பதைக்கும் இப்பதிவு கிடைத்தது.
http://www.karundhel.com/2010/09/blog-post.html

இதனை படித்தவுடன் மனம் ஒருக்கணம் அப்படியே நின்றது. போலி முகங்களின் ராஜ்யத்தில் நாமும் சிக்கி கொண்டிருக்கிறோம் என்றே தோன்றியது. இதில் கே.பாலச்சந்தரினை பற்றி அவர் குறிப்பிட்டிருந்த விஷயம் மனதினை அப்படியே உறைய வைத்தது. காரணம் ரித்விக் காடக் சத்யஜித் ரேயின் முன்னோடி. ஆனால் பெயர் தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.
”ரித்விக் காடக்கின் முதல் படம் நாகரிக்(குடிமகன்). இது 1952ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் வெளிவந்த ஆண்டு என்ன தெரியுமா? 1977! அது வெளிவந்த போது ரித்விக் உயிருடனேயே இல்லை. அதாவது தான் உருவாக்கிய முதல் படத்தை ரித்விக் அவர் வாழ்நாளில் திரையில் பார்த்ததே இல்லை. உண்மையில் நாகரிக் படத்தின் மூலப் பிரதி சிதைந்துவிட்டது. ஆனால் அப்படச் சுருள்களின் நகல் வேறொருடன் தற்செயலாக கிடைத்ததால் அதை வைத்தே 1977 இல் படம் திரையிடப்பட்டது. ஆனால் சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி 1955இல் தான் வெளிவந்தது. இது பற்றி ரித்விக்கின் நினைவு நாள் சொற்பொழிவில் ரே இவ்வாறு குறிப்பிடுகிறார்
’ரித்விக்கின் நாகரிக் என்னுடைய பதேர் பாஞ்சலிக்கு முன்பு வெளிவந்திருந்தால் வங்காள மாற்று சினிமாவாக நாகரிக்கே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்’ “
இதுவும் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் நான் வாசித்தது தான்.

இதனை ஏன் கூறுகிறேன் எனில் அந்த பதிவில் பாலசந்தர் ரித்விக்கின் மேக தக்கத் தாரா என்னும் படத்தினை அப்படியே காப்பியடித்து அவள் ஒரு தொடர்கதை என்பதை எடுத்திருக்கிறார். கேட்கவே எனக்குள் ஒரு அசூயை ஏற்படுகிறது. இந்த படத்தினை பற்றிய குறிப்பும் அப்புத்தகத்தினில் காணக் கிடைக்கிறது.

நான் எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறேன். இந்த கமலஹாசனின் பிணியிலிருந்து என்னால் இன்னும் வெளிவர முடியவில்லை. இப்போது தான் தேவர்மகன் படத்தினை பார்த்தேன். அந்த கட்டுரை படம் முழுதிலும் என்னை துரத்தியது. படம் முடிந்தபின் தலைவா ராக்ஸ்ஸ்ஸ்ஸ் என எனக்குள் கூறிக் கொண்டேன். உண்மையினை நம்பிக்கொண்டே போலியினை ரசிக்கிறேன். இந்த மனத்தினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

குருதிப்புனலை ஹேராமினை கலை நயத்தின் உச்சம் என நினைத்துக் கொண்டிருந்தேன். சாருவின் எழுத்துகள் உண்மையான சினிமாவின் தன்மைகளை எனக்கு காட்டியது. இன்று கருந்தேளின் எழுத்தோ கமலினை பற்றி என்னுள் அசூயையினை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. பாழாய் போன மனமோ விஸ்வரூபத்தின் பாடலை பட வெளியாக இருக்கும் தேதியினை இணையதளத்தில் தேடிக் கொண்டிருக்கிறது.

Share this:

CONVERSATION