நண்பன். . .?

'3' படத்தினை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என்று என் சேலத்திலிருந்து நண்பர்களாக இருக்கும் ஆசிப் மற்றும் மாஸ்டரினை அழைத்தேன். இருவருக்கும் இண்டர்னல்ஸ் என்பதால் இருவரும் வரவில்லை என்றனர். அறையில் இருப்பவர்களுடன் செல்லலாம் என்றால் ஒருவன் டிக்கெட்டின் விலையினை கேட்டவுடன் வரவில்லை என்றான். மற்றொருவன் வருகிறேன் எனக் கூறியதால் ப்ளானெல்லாம் பக்காவக தயாறானது. Brookefieldsஇல் படம் Bigbazaarஇல் சாப்பாடு என. அடுத்த நாள் காலையில் எழுப்பினால் தலை வலிக்கிறது என அவனும் வரவில்லை என்றான்! அதற்காக எல்லாம் படம் பார்க்காமல் இருக்க முடியாது என தனியாக பார்க்க கிளம்பினேன்.
எனக்கோ Brookefields எங்கு இருக்கிறது என்றே தெரியாது. நண்பர்களிடம் கேட்டு பூமார்க்கெட் சென்றேன். அங்கிருந்து நடந்தால் வரும் என கண்டக்டர் கூறியதால் நானும் நடந்தேன். சிக்னல் ஒன்றினை கண்டவுடன் ரொம்ப தூரம் நடந்து விட்டோமோ என்னும் எண்ணம் வேறு. அங்கிருக்கும் போலீஸினை கேட்கலாம் என முடிவு செய்வதற்குள் இடப்பக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று தென்பட்டது. சந்தேகத்துடன் அதன் முகப்பினை பார்த்தேன் அது தான் உண்மையில் Brookefields! காணாததை கண்டது போல் வாயினை பிளந்தேன். அவமரியாதையாக இருக்குமே என்பதால் வாயினை மூடிக் கொண்டேன். மனதிற்குள்ளோ ஆச்சர்யம் அடங்கவில்லை. சினிமாவில் பார்ப்பதை போல் ஒரு உணர்ச்சி. மொத்தம் நான்கு மாடி. இதில் எது சினிமா என்றும் தெரியவில்லை. அடுத்தவரிடம் கேட்கவும் ஒரு மாதிரி இருந்தது. தமிழனுக்கே உரிய குணம் என்னையும் தொற்றியிருந்தது. ஒவ்வொரு அடுக்கினையும் சுற்றி கொண்டிருந்தேன். சிறு குழந்தையினை போல் அந்த elevator இலேயே விளையாடலாமா என்றும் தோன்றியது. கடைசியில் நான்காவது மாடியினை அடையும் போது தியேட்டரினை பார்த்தேன்.
இது வரைக்குமே எனது ஆச்சர்யத்தினை அடக்க முடியவில்லையெனில் உள்ளே அது பன்மடங்காக உயர்ந்தது. மையத்தில் ஒரு ஆறு கணினி என நினைக்கிறேன். அது டிக்கெட் கொடுக்குமிடம். அதன் நடுவில் யூனிபார்ம் அணிந்திருந்த ஒரு பெண். வெள்ளை நிற கணினிக்கள் அனைத்தும் touch screen வேறு. அந்த சினிமா அரங்கின் உள்ளே நுழையும் போதே வலப்புறத்தில் சில touch screen monitor களும் அதில் சிலர் வேலை செய்து கொண்டும் இருந்தனர். என்ன எனில் சீட்டினை தேர்வு செய்தலும் அதனை மொபைலுக்கு அனுப்பி கொள்ளுதலும்! இன்னும் சற்று உள்ளே சென்றபின் சில சோபாக்களும் எதிரே பெரிய திரை ஒன்றும் இருந்தது. அதில் வர இருக்கும் ஆங்கில சினிமாக்களின் trailer ஓடிக் கொண்டிருந்தது. சோபாக்களின் வலப்புறத்திலும் நான்கு LCD monitorகள். ஒற்றை படையில் உள்ள திரையிலெல்லாம் எந்த படம் ஓடுகிறதோ அதன் போஸ்டர்களும் இரட்டை படை திரையிலெல்லாம் வர இருக்கும் படங்களின் போஸ்டர்களும் ஓடிக் கொண்டிருந்தது. மொத்தத்தில் ஏதோ விலையுயர்ந்த உலகத்தில் பணமின்றி நுழைந்த எண்ணமே என்னுள் இருந்தது.
நான் இருந்த நேரம் பத்து, எனக்கான படமோ பன்னிரெண்டரைக்கு என்ன செய்யலாம் என சுற்ற ஆரம்பித்தேன். என் கண்களில் சுடிதார் அணிந்த பெண்கள் பட்டதாக ஞாபகமே இல்லை. அது என் கண்ணின் கோளாறா நினைவின்மையா என்றும் தெரியவில்லை. இது தான் சிட்டியோ என்றும் தோன்றியது.
ஒடிசி திறந்தபின் அங்கிருந்த புத்தகங்களுடன் பேச ஆரம்பித்தேன். என்ன தான் தனிமை விரும்பியாக இருந்தாலும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வரவில்லை என்பதால் அவனின் இன்மை சிறிதாக இருந்தது.
படம் ஆரம்பிப்பதற்கு கால் மணி நேரம் முன் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தேன். வலப்பக்கம் ஒரு ஜோடி இடப்பக்கம் ஒரு சீட் தள்ளி ஒரு ஜோடி. அந்த இடைப்பட்ட சீட்டினில் ஒரு உருவம் வந்து அமர்ந்தது. நண்பனிடம் பேசிவிட்டு அலைபேசியினை அழைத்தேன். திடிரென அந்த உருவத்தின் குரல்
could you show your window cover ?
எனக்கும் இங்க்லீஷிற்கும் ஆகவெ ஆகாது. என்ன தான் ஆங்கில வழிப் பள்ளியில் படித்தாலும் இது போன்ற திடிர் தாக்குதலால் நிலைகுலைந்து போகிறேன். அவருடைய அந்த அழகிய பேசும் நடையினை சுதாரித்து என் மொபைலின் wallpaperஇனைத் தான் கேட்கிறார் என காண்பித்தேன்.
is this charu. .  .  ?
yope. .
how come. . . ?
i am his fan
hi i am sushil me too . . .. ..
என உரையாடல் தொடரும் போதே கைகள் நண்பர்களாய் குலுக்கி கொண்டது.
எங்கோ ஒருவன் எழுதிக் கொண்டிருப்பதால் இன்று எனக்கு சின்ன புன்னகை,சின்ன உரையாடல் புதிய நண்பனுடன், என்ன இங்க்லீஷ் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

Share this:

CONVERSATION