முதல் இலக்கிய பயணம்


இதனை ஒரு பயணக் கட்டுரை என்றும் கூறலாம்.அன்று மூன்று மணி நேர தூக்கத்திற்கு பிறகு எழுந்தேன்.அந்த நாள் எனக்கு சற்று வித்தியாசமான நாள் தான்.சமூகம் கொண்டாடாத எனக்கு பிடித்த ஒரு இலக்கியவாதியின் வாசகர் வட்ட சந்திப்பிற்கு செல்லவுள்ளேன்.சென்னையிலிருந்து ஒரு இலக்கிய ரசிக கும்பல் வேனில் வந்து கொண்டிருந்தது.அவர்களுடன் இணைந்து ஏற்காட்டிற்கு சென்றுவிடலாம் என முந்தின இரவே முடிவு செய்துவிட்டேன்.அதற்காக காலை நான்கு மணிக்கே எழுந்து காலையில் உள்ள அனைத்து கடன்களையும் முடித்துவிட்டு ஐந்தரைக்கெல்லாம் சேலம் ஐந்து ரோட்டிலுள்ள கல்யாண் ஜ்வல்லர்ஸுக்கு அருகில் காத்திருக்க ஆரம்பித்தேன்.அந்த நண்பர்களிடம் போன் செய்து கேட்டால் பத்து நிமிடம் பத்து நிமிடம் என சொல்லி சொல்லியே மணியினை ஆறாக்கினர்.கடைசியாக போன் செய்யலாம் நேரம் ஆகும் என்றால் நாமே சென்றுவிடலாம் என முடிவு செய்து போன் செய்தால் இன்னும் நாற்பது கிலோமீட்டர் இருக்கிறது என்றனர்.என்னை வழியனுப்ப அப்பாவும் உடன் இருந்தார்.அவரை அனுப்பிவிட்டு நான் பேருந்தில் கிளம்பினேன்.வாசகர் வட்ட சந்திப்பு ஏற்காட்டில் என்று தெரியும் ஆனால் ஏற்காட்டில் எங்கு என்று எனக்கு தெரியாது. வாயிலிருக்கிறது வழி என பயணத்தினை ஆரம்பித்தேன்.சுரேஷ் ராஜ மாணிக்கம் என்னும் வாசகர் தான் இதன் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவரை தொடர்பு கொண்டேன்.இனிமையான பயணம்.சேலத்தில் வெக்கையின் தொல்லை தாங்க முடியவில்லை.அந்த மாதிரி நேரத்தில் இது எனக்கு சொர்க்கமாக இருந்தது.ஏற்காட்டில் இறங்கியவுடன் அவரிடம் சொன்னேன் அவர் என்னை அழைத்து செல்ல காரினை அனுப்பினார்.கார் வருவதற்குள் ஒரு காபியினை உள்ளே தள்ளினேன்.மணி என்னும் நண்பர் என்னை அழைத்துக் கொண்டு ராம்ஸ் பங்களாவிற்கு சென்றார்.மிக ரம்யமான இடம்.சுற்றி மரங்கள்.அருகில் இருந்த மான்போர்ட் பள்ளியின் ஸ்தூபி கண்ணினையே பறித்தது.
உள்ளே நுழைந்தவுடன் ஒரு டேபிலும் மூன்று சோபாக்களும் அதில் சில திண் பண்டங்களும் ரெமிமார்டினும் இருந்தது. உள்ளேமற்றொரு டேபில்.அங்கு தான் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,வெள்ளை நிறத்தில் முடியும் ப்ரெஞ்சு தாடியும் என அமர்க்களமாக காட்சியளித்தார் சாரு நிவேதிதா.என்னுடைய அட்டெண்டன்சை போட்டுவிட்டு உள்ளே சென்று நண்பர்களிடம் அறிமுகமானேன்.சென்னையிலிருந்து வரும் கேங் வந்து சேர்ந்தால் தான் வட்டம் ஆரம்பிக்கும் என யூகித்தேன் அதே போல் அவர்கள் வந்தவுடன் படியினில் சாருவுடன் அமர்ந்து அனைவருக்கும் மறுபடியும் ஒரு அறிமுக படலம்.
சாரு the joker was here என்று ஒரு சிறுகதையினை எழுதியுள்ளார்.அதனைப் பற்றிய விவாதம் பேஸ்புக்கில் நடந்துள்ளது.இதனை தன் இணையதளத்திலும் போட்டுள்ளார்.நான் அதனை பார்க்கவில்லை பார்த்திருந்தாலாவது அந்தக் கதையினை மறுவாசிப்பு செய்துகொண்டு சென்றிருக்கலாம்.(சின்ன குற்றவுணர்ச்சி).அதில் தான் விவாதம்
ஆரம்பித்தது.வாசகர்களின் விவாதத்தில் இதனை புரியவில்லை என்று கூறியுள்ளனர்.அதிலுள்ள சில வரிகளை வாசித்து காண்பித்தார். அது “குருட்டு பிச்சைக் காரனின் தட்டு நிணத்தில் மொய்க்கும் ஈக்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டில் டம்ளர்…”.இதனை முதநிலை வாசகன் ஏன் புரியவில்லை என்கிறார் என்றார்.அவருடைய அனுபவத்திற்கு அது சாதரணமாக இருக்கலாம்.முதநிலை வாசகனுக்கோ நிச்சயம் இது புரியாது ஆதே சமயம் போரடிக்காது.சாருவின் வாசகனாக நான் புரிந்து கொண்ட விளக்கத்தின அளிக்கிறேன்.மேலே கூறிய வரிகளில் குருட்டு பிச்சைக்காரனின் தட்டு என்றிருக்கிறது.அதன் அர்த்தமென்ன ? இந்த சம்மந்தமற்ற வரிகளின் தொடர்ச்சியின் மூலம் அவர் தொனிக்கும் கதை என்ன என நம் மனதிற்குள் தோன்றும்.இந்த வாக்கியத்தினை படிக்கும் போது ஏதேனும் ஒரு சமயத்தில் நிச்சயம் குருட்டு பிச்சைக்காரனையும் அவனது தட்டினையும் கண்டிருப்போம்.ஆக அந்த நினைவு நாம் இருந்த அந்த சூழ்நிலையினை நமக்கு கொணரும்.அப்படி கொண்ரும் போது அங்கே ஒரு சிறுகதை உருவாகிறது.வாசகன் படைப்பாளியாகிறான்.மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டில் டம்ள்ர் கலாச்சார சீர்கேட்டின் அறிகுறி என்கிறார்.ஒட்டுமொத்தத்தில் அந்த சிறுகதை சமூகத்தின் ஒரு பாதி என்கிறார்.அப்படி காட்டியும் ஏன் சமூகம் என்னை துரத்துகிறது என அக்கதையில் கூறுகிறார்.மேலும் அவருடைய ‘நேநோ’ என்னும் சிறுகதைகளுக்குள் ஐநூரு சிறுகதைகள் அடங்கியுள்ளது எனக் கூறினார்.பட்டென எனக்கு தோன்றியது நானும் சாருவின் முதநிலை வாசகன் தான்.
மொழியின் நிலையினை பற்றி அவர்கூறியது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது.ஒரு கதை படிக்கிறோம் எனில் அது எழுத்தாளனின் சிருஷ்டி எழுத்தாளனின் கற்பனை எனக் கூறுவதே தவறு என்கிறார்.பல ஆயிரம் வருடங்களாக இருந்து வந்த வார்த்தையினை கற்பனையினை தான் எழுத்தாளன் வடிக்கிறான்.இன்று நாம் ஒரு மொழியில் பேசுகிறோம் எனில் அதிலுள்ள வார்த்தை பல ஆயிரம் வருடங்களாக உபயோகப்பட்டது எனில் அதில் நாம் கர்வம் கொள்ள வேண்டும்.மொழியினை கொண்டாட வேண்டும் என்றார்.ஒருக்கணம் இந்த தத்துவத்தினை நம் அன்றாட வாழ்வுடன் யோசித்து பாருங்கள்.
அந்த இடத்தில் வெயில் வந்ததால் மரத்தடிக்கு சென்றோம்.சாரு கதை சொல்லி பழக்கத்தினால் தான் இந்த சமூகம் பின்நவீனத்துவத்தின் வாசம் தெரியாமலேயெ வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அடிக்கடி கூறுவார்.ஆனால் அவர் கூறிய ஸ்ரீவில்லிபுத்தூர் கதைகள்,அதனை அவர் கூறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது.அந்தக் கதையானது ஒருவனுக்கு கண் பார்வை பத்து.அவர் லென்ஸ் அணிந்திருந்தார்.ஏதோ தெய்வீகமான நாடகத்தினை பார்த்தவுடன் அழகர் மலை சென்றிருக்கிறார்.அந்த புனித நீரில் அதனை கழுவிவவுடன் பார்வை படு சூப்பராக தெரிந்ததாம்.இதுவல்ல இக்கதையின் முடிவு (அவரும் இப்படி தான் சொன்னார்).இன்று வரை அதே லென்ஸினை எடுக்காமல் போட்டுக் கொண்டிருக்கிறார்.கின்னஸில் போடலாம் என்ற முடிவிலும் உள்ளார்.இதே கதையினை அவர் கூறிய விதம் இருக்கிறதே….. (என்னை ஜால்ரா என நினைத்து விடாதீர்கள்.ITS VOICE OF ECTASY).
சிலர் எப்போதும் வருபவர்களை விட புதிதாக வந்தவர்கள் பேசலாமே என்று என்னை காட்டினார்.அந்தக் கூட்டத்திலேயே நான் தான் தனிபட்டு தெரிந்தேன்.அனைவருக்கும் இளையவன்.அனைவரும் என்னை கேட்டனர் சாருவை பதினொன்றிலிருந்தே வாசிக்கிறீர்களா என்று ஆமாம் என்ற உண்மையினை நானும் கூறினேன்.நான் என் சிறு பிள்ளைதனத்தை எப்போது காண்பித்தேன் எனில் என் கதைகளை சாருவிற்கு அனுப்பிவைப்பேன்.அதுவும் ஒரு நப்பாசையில்.ஒரு எழுத்தாளனை தொல்லை செய்கிறோமே எனத் தோன்றும் இருந்தும் அனுப்பி வைப்பேன்.அதனை இங்கே கூறிவிட்டார்.எனக்கு கதை வாசிக்கும் நேரமின்மையால் உனது கதைகளை வாசிக்க மாட்டென் ஆனால் அதனை ஒவ்வொரு முறை ஒதுக்கும் போதும் எனக்கு வலிக்கிறது என்றார்.
இரவு CAMPFIRE.கலாசலா பாட்டிற்கு சாருவுடன் ஆடிய ஆட்டம் ஒரு வரம்.அடுத்து நல்ல பாட்டினை தேடும் போது கரண்ட் சென்றது.அதனால் ஆங்ஙாங்கே குடியும் கும்மாளமும் தொடர்ந்தது.அப்போது நடந்த உரையாடலில் வெகு நாட்களாக என் மனதில் இருந்த கேள்வியினை கேட்டேன்.கட்டுரைகளில் நீங்கள் பெண்ணியவாதிகளை மறுதலிக்கிறீர்களானால் தங்கள் நாவலில் உலவும் பெண் கதாபாத்திரம் தன்னுடைய ultimate authority இனை தானே எடுத்து கொள்கிறது.ஆக நீங்கள் பெண்ணியவாதியா ? அவரோ feminine rules us என்னும் விஷயத்தினை ஆணித்தரமாக கூறினார்.அதனை என்னால் இங்கு பதிவு செய்ய முடியாது.ஏன் என பின் கூறுகிறேன்.
சாரு உறங்க சென்ற பின் நாங்கள் campfire இனை சுற்றி அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.சாருவின் புத்தகத்தினை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள் என்னும் கேள்விக்கு முக்கால் வாசி பதில் காமமாகத் தான் இருந்தது.காமம் என்பது கல்லறைக்குள்ளிருக்கும்
-->கருவாக மதிக்கும் இந்த சமூகத்தில் அதனை ஒரு கொண்டாட்டத்தின் குறியீடாக எழுதினால் யார் படிப்பார்கள் ? சமூகத்தின் ஒரே பொன்மொழி “sex is a curse”.
ஒரு மணியளவில் உணவு உண்டுவிட்டு உறங்கச் சென்றோம்.உறங்கும் போது நினைத்துப் பார்த்தேன் எழுத்து இலக்கியம் அனைத்தினையும் போர் எனக் கூறும் அனைவரின் நாக்கினையும் அறுத்து எறிய வேண்டும்.உன்னைப் போல் தான் நாங்களும் இருக்கிறோம் ஆனால் ஏன் எழுத்தினை படைப்பவனை கொண்டாடுகிறோம்.கொண்டாட்டத்தின் அர்த்தம் தெரியாமலேயே ஒட்டு மொத்த சமூகமும் வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கிறது.வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல கொண்டாடுவதற்கு…
இரண்டு விஷயத்தில் நானும் இவர்களிடமிருந்து அன்னியப்பட்டேன்.ஒன்று குடி மற்றொன்று மாமிசம்.இரண்டாவதில் தான் என் பிறப்பின் மேல் கோபம் வருகிறது.இவை உரிமை சார்ந்த விஷயம் என நம்புபவன் நான்.என் மீது அதனை திணிக்கும் போது தான் அருவருப்பு ஏற்படுகிறது மனிதர்களின் மீது.
மீண்டும் the joker was here க்கு வருகிறேன்.சுரேஷ் கூறிய விஷயம் அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பொருந்தும்.அவரின் எழுத்துகளில் அவர் போகும் அந்த தூரம் நம் உணர்வுகளின் ஒட்டத்தினை ஈ.சி.ஜி க்ராபினை போல இழுத்துச் செல்லும். இதனை விளக்கும் அளவிற்கு என்னிடம் வார்த்தை இல்லை.வேண்டுமென்றால் நமக்கு நம் கனவு எப்படியோ அப்படி சாருவின் எழுத்துகள் என வைத்து கொள்ளுங்கள்.
அடுத்த காலை எனக்கு தோன்றியது “நீங்கள் சென்றுவிடுங்கள் சாரு.இந்த சமூகம் உங்களிடமிருந்து சரக்குகளை வாங்கி வாங்கி சேந்தியில் அடுக்கி சிலந்திகளுக்கு வீடு கொடுத்து உங்களை பிச்சைகாரனாக்குகிறது.சமூகத்தினை,நாகரீகத்தினை மாற்ற நினைக்கும் உங்கள் வரிகளை,குருதி சொட்டுகளை என்றும் இவர்கள் உணரப்போவதில்லை.FOREVER YOU WILL BE THE EXILED LITERATE OF TAMILNADU,INDIA.
போட்டொஷூட் முடிந்தவுடன் பிரியா மனதுடன் வீட்டிற்கு கிளம்பினேன்.கடைசியாக சாருவின் கண்களை பார்க்கும் போது முந்தின இரவு என் கன்னத்தில் கையினை வைத்து love you da chellam எனக் கூறியது நினைவிற்கு வந்தது.
 
எனக்கு கண்ணீர் தான் வருகிறது.இந்த சமூகத்தில் சிக்கி கிடப்பதால் இவரது எழுத்துகளில் கொண்டாட்டத்தினை உணர்ந்ததை காட்டிலும் அவமானத்தை தான் அதிகம் உணர்கிறேன்.உனது முகத்தினை கண்ணாடியில் பார்க்கிறாய் அருவருப்பாக இருக்கிறதெனில் உன் மனம் எப்படி வேதனைப்படும்.தமிழனான் ஒவ்வொருவரும் அப்படி அவமானப்படவேண்டும்.சாரு தன் ஒவ்வொரு எழுத்துகளிலும் ஒரு விஷயத்தினை உருக்கமாக விதைக்கிறார்.அது என்னை தொடர்ந்து வதைக்கிறது.அது                                       “வாழ்க்கையினை கொண்டாடுங்களேன் ப்ளீஸ்…..”
Send your comments : krishik10@gmail.com

Share this:

CONVERSATION